“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 11012024 இதழ்

You may also like...