Category: குடி அரசு 1937

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? II

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? II

சென்ற வாரம் “குடி அர”சில் இன்றைய சரணாகதி மந்திரி சபையானது சுய ஆட்சிக்கு ஆக ஏற்பட்டதல்ல வென்றும் இந்நாட்டு பழந்தமிழ் மக்களை பாதாளத்தில் ஆழ்த்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்திப் பழிவாங்கு வதற்கு ஆக ஏற்பட்டிருக்கிறதென்றும் உதாரணமாக தமிழ் மக்களுக்கு ஆரிய ஆதிக்க பாஷையாகிய வட மொழியை ஹிந்தி என்னும் பேரால் இள வயதிலேயே கட்டாயத்தின் மீது புகுத்தவும் அரசியல் பிரதிநிதித்துவ தேர்தல்களில் யோக்கியமான பிரதிநிதித்துவம் ஏற்படுவதற்கில்லாமல் பித்தலாட்டத்தில் தேர்ந்தவர்களே வெற்றி பெற்று வரவும், சரீரத்தினால் பாடுபட்டு உழைக்க வேண்டியவர்களல்லாதவர்கள் என்று தங்களை விலக்கிக்கொண்டு மற்ற எல்லா மக்களும் பொருளாதாரத் துறையில் தலை எடுப்பதற்கு மார்க்கமில்லாதிருப்பதற்கு சுலபத்தில் பொருள் தேட செளகரியமுள்ள தொழில் முறைகளை தலை எடுக்கவொட்டாமல் தடுத்து இந்நாட்டு பெருங்குடி மக்கள் என்றென்றும் ஆரியர்களுக்கு அடிமையாக இருக்கும்படியாக எவ்விதத்தும் பயனற்ற கதர்த் திட்டத்தைப் புகுத்தி பழி வாங்குகின்றது என்றும் குறிப்பிட்டுக் காட்டி அவற்றுள் ஹிந்தி சூழ்ச்சியைப்பற்றி விளக்கி இருந்தோம். இந்த...

சூழ்ச்சிக்குப் பிறகு வந்த புத்தி

சூழ்ச்சிக்குப் பிறகு வந்த புத்தி

“ஹிந்துமத பரிபாலன போர்டு அவசியமே” கவர்னர் மறுத்த பிறகே மந்திரிக்குப் புத்தி வந்ததா? – ஊர் வம்பு ஜஸ்டிஸ் கட்சியாரின் அரும் பெரும் முயற்சியால் பனகல் ராஜா அவர்கள் காலத்தில் ஹிந்து மத பரிபாலன போர்டுகள் ஏற்பட்டு அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் செய்யப்பட்டது. அக்காலத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் பட்டர்களும் குருக்கள் கூட்டத்தார்களும் சோம்பேறி வேதாந்தக் கூட்டப் பார்ப்பனர்களும் பலமாக எதிர்த்தார்கள். “சர்க்கார் மதத்தில் தலையிடக்கூடாது” என்றும், “ஹிந்து மத கோவில், மடம் ஆகிய நிர்வாகங்களில் சர்க்கார் தலையிடுவது அக்ரமம்” என்றும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கோவில் சொத்துக்களைத் தங்கள் சொத்துக்களாகக் கருதி பங்கு போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருந்த தர்மகர்த்தாக்களும் குருக்கள்களும் பெரும் கூச்சல் போட்டார்கள். “மத விஷயங்களில் சர்க்கார் தலையிடு வதில்லை” என்று மகாராணியார் வாக்குக் கொடுத்திருப்பதாக வக்கீல் கும்பல்கள் வம்பளந்தார்கள். இப்படி பல எதிர்ப்புகளுக்கிடையில் “அறநிலையப் பாதுகாப்பு மசோதா” சட்டம் செய்யப்பட்டு விட்டது. இப்பொழுது எங்கும் “ஹிந்துமத பரிபாலன போர்டுகள்” ஏற்பட்டு...

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? I

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? I

அக்கிரகாரச் சனியன்கள் பிரிட்டிஷ் சர்க்காரை சரணாகதி அடைந்து மந்திரி ஸ்தானத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்த ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு துறையிலும் பழி வாங்கும் குணத்தையும் அக்கிரகார ஆதிக்கத்தை என்றென்றும் நிலைநிறுத்தும் கவலையையும் கொண்டு சூழ்ச்சி ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது. அரசியல் துறையில் இச்சரணாகதி கூட்டங்கள் எவ்வித கொள்கைகள் கையாண்ட போதிலும் நமக்கு கவலையில்லை. வெள்ளைக்காரர்கள் விஷயத்தில் எவ்வளவு சீக்கிரமாக விரட்டி அடிக்க முயற்சித்தாலும் நாம் குறுக்கே நிற்கப்போவதில்லை. ஆனால் பொய் பித்தலாட்டங்கள் பேசி பாமர மக்கள் ஏய்த்து பிரிட்டீஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்து பிரிட்டிஷ் ஆட்சியை உலகமுள்ளளவும் காப்பாற்றித் தருவதாய் பிரமாண வாக்குக்கொடுத்து பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கத்தக்க சூழ்ச்சி ஆட்சி நடத்துவதை யார் தான்- எந்த உண்மைத்தமிழ் மகன் தான் சகித்துக்கொண்டிருக்க முடியும்? பிரிட்டிஷ் ஆட்சி முறையைப்பற்றி நாம் குறை கூற வரவில்லை. ஏனெனில் அவர்களது ராஜ தர்மம் எல்லாம் எப்படியாவது இந்தியாவில் பிரிட்டிஷ்...

முதல் மந்திரி மாய அழுகை!

முதல் மந்திரி மாய அழுகை!

சம்பளம் குறையாவிடில் ஏழைகளுக்கு சோறில்லையாம்! இவருக்கு மாதம் ரூபாய் 800 எதற்கு? சென்னை, ஒய்.எம்.சி.எ. தேகப்பயிற்சி கல்லூரியின் ஆரம்ப விழாவில் 12-8-37ல் சென்னை சரணாகதி முதல் மந்திரி ஆச்சாரியார் பிரசங்கம் செய்ததில் ஒரு பாகம் வருமாறு:- வீண் மாய அழுகை ஏன்? “ஏழை மக்கட்கு அன்னமளிக்கவேண்டி மிக அதிகச் சம்பளங்களைக் குறைக்க வேண்டியது அவசியமாகின்றது. சர்க்கார் செலவைக் குறைக்க வேண்டும். தாங்களாகவே ஒவ்வொருவரும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டது. இதற்கு வந்திருக்கும் பதில்கள் ஏமாற்றமளிக் கின்றன. தாங்களாகவே சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுகிறார்களோ இல்லையோ? சர்க்கார் செலவைக் குறைக்காவிட்டால் ஏழைகட்கு சோறில்லை. எல்லா ஜனங்கட்கும் உணவளிக்க வேண்டுமென்றே நான் கேட்கிறேன்.” என்று வழக்கம்போல் மாய அழுகை அழுகிறார். இந்த வீண் மாய அழுகை எதற்காக? இவருக்கு என்ன செலவு? சென்னை சரணாகதி முதல் மந்திரி ராஜகோபாலாச்சாரியார் அவர்கட்கு மாதச் சம்பளம் ரூ. 500 படிச்செலவு மாதம் ரூ. 300 ஆக ரூ. 800...

அட்ஹாக் கமிட்டிப் புரட்டு

அட்ஹாக் கமிட்டிப் புரட்டு

எந்த இயக்கத்துக்கும் ஸ்தாபனத்துக்கும் சட்ட திட்டங்களும் கட்டுப்பாடும் அவசியமே. சட்டதிட்டங்களும் கட்டுப்பாடும் இல்லாத இயக்கங்களும் ஸ்தாபனங்களும் விருத்தியடையவே மாட்டா. ஆனால் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளின் பேரால் சூழ்ச்சிகள் நடைபெற்றால் அந்தச் சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் ஒழித்து ஒழுங்கு முறையை நிலைநாட்ட வேண்டியது முக்கியமாகும். சட்ட சபை, ஜில்லாபோர்டு, நகரசபை, பஞ்சாயத்து போர்டு முதலிய ஸ்தாபனங்களுக்கு பிரதிநிதி களைக் பொறுக்கியெடுக்க காங்கரசிலே அகில இந்திய அட்ஹாக் கமிட்டியும் ஜில்லா அட்ஹாக் கமிட்டிகளும் நகர, கிராம அட்ஹாக் கமிட்டிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே காங்கரஸ் காரியங்கள் எல்லாம் ஒழுங்காக நடைபெறுவதாக சாமானிய ஜனங்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கிரியாம்சையில் நடப்பதென்ன? அட்ஹாக் கமிட்டிகளில் எல்லாம் சூழ்ச்சிகளும் பித்தலாட்டங்களுமே தாண்டவமாடுகின்றன. உதாரணமாக பம்பாயை எடுத்துக்கொள்ளுவோம். பம்பாய் சட்டசபை காங்கரஸ் கட்சிக்கு காங்கரஸ் நியாயப்படி தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவரும் பம்பாய் முதன் மந்திரி ஆக வேண்டியவரும் தோழர் நரிமன் ஆகும். அவரே இப்பொழுது பம்பாய் மாகாண காங்கரஸ் கமிட்டித் தலைவராயிருந்து...

பதின்மூன்றாவது ஆண்டு

பதின்மூன்றாவது ஆண்டு

நம் குடி அரசு பத்திரிகை சென்ற இதழோடு 12-வது ஆண்டு முடிந்து இன்று பதின்மூன்றாவது ஆண்டில் பிரவேசிக்கிறது. பத்திரிகை நடத்துவதில் உள்ள கஷ்டங்கள் அறிஞர்கள் உணர்ந்ததே யாகும். சுயநலமற்று சுதந்தரத்தோடு குறிப்பிட்ட ஒரு தனிக்கொள்கைக்கு என்று ஒரு பத்திரிகை நடப்பது என்றால் அது சுலபத்தில் முடியாத காரியமேயாகும். அப்படி இருந்தும் “குடி அரசு” ஆரம்பித்த காலம் முதல் எந்தக் கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே கொள்கையை உள்ளும்புறமும் உறுதியாய்க் கொண்டு எவ்வித கஷ்ட நஷ்டங்களுக்கும் யாருடைய விருப்பு வெறுப்பு தயவு தாக்ஷண்யங்களுக்கும் அஞ்சாமல் ஒரே போக்கில் தன்னிஷ்டப்படி நடைபெற்று வந்திருக்கின்றது. அரசாங்கத்தார் தொல்லை ஒரு புறமும், மதவாதிகள் தொல்லை மற்றொரு புறமும், பார்ப்பனர்கள் தொல்லையும் சூழ்ச்சியும் எல்லாப் புறமும், “குடி அரசி”ன் மூலம் வாழ்க்கை நடத்தவும் வயிறுவளர்க்கவும் விளம்பரம் பெறவும் வந்து சேர்ந்து ஏமாற்றமடைந்த தோழர்களின் தொல்லை மற்றொரு பக்கமுமாக பல வழிகளில் துன்பமும், தொல்லையும், நஷ்டமும் அனுபவித்துக் கொண்டே “குடி அரசு”...

தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் வைஸ் பிரசிடெண்டுக்கும் சுயமரியாதைத் தலைவருக்கும் வரவேற்பு

தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் வைஸ் பிரசிடெண்டுக்கும் சுயமரியாதைத் தலைவருக்கும் வரவேற்பு

அன்புள்ள தோழர்களே! நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரங்களுக்கு உங்கள் ஜில்லா போர்டு தலைவரும் உப தலைவரும் தக்க பதில் கூறினார்கள். அவர்கள் மற்றவர்களைப் போன்று ஏமாற்றும் முறையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுப்போமென்று ஆசை வார்த்தையோ அல்லது சமயத்திற்கு பதில் என்ற முறையிலோ சொல்லாமல் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட காரியங்களை தங்களால் முடிந்தவரை செய்வதாகத்தான் கூறினார்கள். அதுதான் உண்மை. ஜில்லா போர்டுகள் மக்களின் தண்ணீர் வசதி, ரோடு வசதி, சுகாதார வசதி, பள்ளிக்கூட வசதி ஆகியவைகளைக் கவனிப்பதற்காகவே இருக்கின்றன. அங்கு பூரண சுயராஜ்யப் பேச்சுக்கு இடமில்லை. அங்கு கட்சி பேதம் வேண்டியதில்லை. வீணாகக் கலகமும் வேண்டியதில்லை. பல ஜில்லா போர்டுகள் கூட்டங்களைப் பார்த்தால் மீன் கடைச் சண்டைகளைப் போல் கலகம் செய்து கொள்ளுவதையும் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதையும் காணலாம். இதனால் ஜில்லா மக்களுக்கு வேண்டிய வசதிகள் கவனிக்கப்படு வதில்லை. ஜில்லா போர்டு மெம்பர்களும் தலைவர்களும் லோகல் போர்டு...

சாக்கடைக்கு பதில் எச்சிலை

சாக்கடைக்கு பதில் எச்சிலை

சேலம் அதி தீவிர தேசபக்தர் (பார்ப்பன பக்தர்) வைதிக காங்கரஸ் வாதி (ஜஸ்டிஸ் கட்சியை சதா வைதவர்) குடும்பத்தோடு பார்ப்பன, காங்கரஸ் ஆரம்பித்த காலம் முதல் – வினா தெரிந்த நாள் முதல் காங்கரஸ்காரராய் இருந்த தோழர் எஸ். வெங்கிட்டப்ப செட்டியார் அவர்களுக்கும் அவரது திருக்குமாரருக்கும் பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன குலாமும் பார்ப்பன எச்சிலைப் பத்திரிக்கைகளும் இவ்வளவு சீக்கிரத்திலேயே நல்லதொரு “நற்சாட்சி பத்திர”மளித்து விட்டன. எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு எச்சிலைப் பத்திரிகையானது சேலம் பாரிஸ்டர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் சரணாகதி மந்திரி கனம் ஆச்சாரியாருக்கு அளித்த வெடிகுண்டுக்கு பதிலளிக்கிறதாக சாக்கு வைத்துக்கொண்டு மிக்க ஆணவமாகவும் யோக்கியமற்ற முறையிலும் என்னென்னவோ ஆபாசமாக எழுதி இருக்கின்றது. தோழர் எஸ்.வி. ராமசாமி ஆச்சாரியாருக்கு அறைந்த ஆப்புகளை பிடுங்கவோ அசைக்கவோ அவ்வெச்சிலை பத்திரிகை களுக்கு சக்தி இல்லையானால் மரியாதையாகத் தலை குனிவதையோ மெளனமாகத் தலையை மறைத்துக் கொள்ளுவதையோ விட்டு விட்டு அவ்வாப்புகளை வெளியாக்கின பத்திரிக்கையை...

காங்கரசில் சதியாலோசனை

காங்கரசில் சதியாலோசனை

  – ஊர்வம்பன் தேதி. 41-13-107 தத்தாரி நகரம். சோமாரி மண்டபம். தேசபக்த சிகாமணிகள் கூட்டம். இக்கூட்டத்துக்கு பிராமணர்கள் அல்லாத தேசபக்தர்கள் மாத்திரமே ஆஜர் ஆகலாம் என்றும் “வகுப்புவாதம் பேசும் ஜஸ்டிஸ், சுயமரியாதை கட்சியை எப்படி ஒழிப்பது” என்பதற்காக இரகசிய முயற்சிகள் செய்ய திட்டம் போட கூட்டப்படுவதாகு மென்றும் இதில் பார்ப்பனர்கள் கலந்தால் விஷயம் வெளியாகிவிடும் என்றும் வெளிக்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. நடு ஜாமம் 6-15 மணிக்கு பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் மண்டபம் நிறைய கூடிவிட்டார்கள். வெளி கேட்டில் சரியான காலிகளை நிறுத்தி பார்ப்பனர்கள் உள்ளே பிரவேசிக்காமல் செய்யப்பட்டு விட்டது. வந்திருந்தவர்கள் பெயரைக் குறிக்க முதலில் ஏற்பாடு செய்யப் பட்டது. அதில் கிறிஸ்தவர், ஆதிதிராவிடர், முஸ்லீம், பார்ப்பனரல்லாத இந்து என்பதான பிரிவுப்படி குறிக்கும்படி உத்திரவிடப்பட்டது. லிஸ்ட் முடிந்தது. “இனி பேசலா” மென்றார் லிஸ்ட் எடுத்தவர். “தலைவர் வேண்டாமா” என்றார் ஒரு முஸ்லிம். “ஒரு கிறிஸ்தவரை தலைவராகப் போடுங்கள். ஏனெனில் அச்சமூகம் தான்...

தியாகப் புரட்டு

தியாகப் புரட்டு

பதவியேற்ற காங்கரஸ்காரர் பெரிய தியாகம் செய்து விட்டார்களாம். பிரமாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. மந்திரிமார் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார்கள். ஆனால் சர்க்காரிடமிருந்து 6 கார்கள் சன்மானம் வாங்கத் தவறவில்லை. சென்னை மேல்சபை உதவித் தலைவர் தோழர் வெங்கடசாமி நாயுடு தமது மாதச் சம்பளத்தை வாங்கப் போவதில்லையென்று சர்க்காருக்கு எழுதிவிட்டாராம். அப்பா கம்பெனி புரோப்ரைட்டருக்கு அந்தத் தொகை எம்மாத்திரம்! எனினும் அவருடைய தியாகத்தை மேல் சபைத் தலைவர் டாக்டர் ராமராவ் “காபி” அடிப்பாரா? அவரும் பெருத்த வருமானமுடைய டாக்டர்தான். கீழ்சபை அல்லது அசம்பிளித் தலைவர் தோழர் புலுசு சாம்ப மூர்த்தி பெரிய தியாகியல்லவா? சட்டை, செருப்பு, குடைகளைக்கூட வெறுப்பவரல்லவா? அவருக்கு ஏன் மாதா மாதம் 500 ரூபாய்? தோழர் வெங்கிடசாமி நாயுடு மாதிரி புலுசுவும் அவருடைய சம்பளத்தை இழப்பாரா? அப்பால் வீராங்கனை தோழர் ருக்மணி லôமீபதிக்கு சம்பளம் எதற்கு? அவரும் தியாக ஊழியம் ஏன் செய்யக்கூடாது? குடும்பப் பொறுப்பு அவருக்கில்லை. அந்தப் பாரத்தை ஏற்க அவரது...

கைதிகள் விடுதலை

கைதிகள் விடுதலை

அரசியல் கைதிகளை காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை செய்கின்றது. இதற்கு பிரிட்டீஷ் அரசாங்கம் மேலொப்பம் போடுகின்றது. இதன் காரணம் என்ன என்பது மக்களுக்கு விளங்க வேண்டாமா? இதிலிருந்து பிரிட்டீஷ் அரசாங்கம் பணிந்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. அப்படி நினைப்பது களிமண் தலையேயாகும். பிறத்தியாரை அந்தப்படி நம்பும்படி யாராவது எடுத்துச் சொல்வது வடிகட்டின முட்டாள்தனமோ இல்லாவிட்டால் அயோக்கியத்தனமோ ஆகும். ஏனெனில் காங்கிரசானது 14.7.37-ல் பிரிட்டீஷ் அரசாங்கத்தை சரணாகதி அடைந்து “அரசாங்கத்துக்கும் சட்டதிட்டத்துக்கும் அரசருக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துவருகிறேன்” என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு அரசாங்கத்தின் அபயம் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கு முன் செய்த குற்றங்களுக்கு ஆக தண்டிக்கப்பட்டவர்களை பிரிட்டீஷ் அரசாங்கம் லீ வினாடி யாவது ஜெயிலில் வைத்திருக்க அவசிய மென்ன? என்று கேட்கின்றோம். உப்பு சத்தியாக்கிரகத்தின்போது ஜெயில் வைக்கப்பட்ட கைதிகளை காந்தியார், இர்வின் பிரபுவிடம் “இனி உப்பு காச்சுவதில்லை, மறியல் செய்வதில்லை, உத்திரவு மீறுவதில்லை, சத்தியாக்கிரகம் செய்வ தில்லை” என்று வாக்குறுதி...

பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை

பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை

தேவேந்திரன் – தேவர்கள் சம்பாஷணை – சித்திரபுத்திரன் தேவேந்திரன் கொலுமண்டபத்துக்கு தேவர்கள் வந்து கூடிவிட்டார்கள். தேவேந்திரன் வந்து விட்டான். தேவர்கள் எழுந்து ஜெய ஜெயீபவா கூறி அக்ஷதை புஷ்பம் வீசுகிறார்கள். தேவேந்திரன் ஆசனத்தமருகிறான். தேவர்கள் வாழ்த்துக்கூறி அமருகிறார்கள். தேவேந்திரன்:- தேவர்களே! உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும் எனது அரிய தவத்தாலும் இந்த அரிய தேவேந்திர பதவியை அடைந்திருப்பதோடு இந்திராணியையும் அடைந்து இன்பமாகவும் பெருமையாகவும் வாழ்கிறேன் அல்லவா? தேவர்கள்:- ஆமாம் பிரபு! எங்களுடைய பூரண ஆசீர்வாதமும் தங்களுடைய அரிய தவ மகிமையும் இருக்கும்போது தங்களுக்கு என்ன குறை ஏற்படப் போகிறது? தே-ன்:- சபாஷ்! நன்றாய் சொன்னீர்கள். உலகில் எனக்கு மேல் எவன் இருக்கப்போகிறான்? எவனை இருக்க விடுவேன் நான்? ரம்ப சந்தோஷம். ரம்ப திருப்தி. உலகம் எப்படி நடக்கின்றது? தே-ர்:- பிரபூ! தங்கள் ஆக்கினை சொர்க்க மத்திய பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் ராம பாணம் போல் நடந்து வருகிறது. என்றாலும், தே-ன்:- உம்...

பொன்மலை சுயமரியாதைச் சங்கம்

பொன்மலை சுயமரியாதைச் சங்கம்

4-வது ஆண்டுவிழா “நானொரு அபேதவாதிதான். நான் தினசரி அபேதவாதத்தைப் பற்றிப் பேசுகிறேன். எழுதுகிறேன். நான் பொருளாதார அபேதவாதத்தை விட சமூக சமத்துவத்தை – உயர்வு தாழ்வை ஒழிப்பதை முதல் அபேதவாத மாகக் கருதுகிறேன். பிறகு தான் பொருளாதார சமத்துவ அபேதவாதம். இது எனது அபிப்பிராயம். அபேதவாதத்தைப்பற்றி பலர் பலவிதமாக பாஷ்யம் கூறலாம். அதுவும் இடத்திற்கும் – சமயத்திற்கும் தக்கபடி அர்த்தம் செய்யும்படி அபிப்பிராயம் கூறலாம். ஆனால் நமது நாட்டில் பிறவி காரணமாக உயர்வு தாழ்வு கூறப்பட்டு முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு உள்ளவரை பார்ப்பான் பறையன் என்ற வித்தியாசமுள்ளவரை பொருளாதார சமத்துவம் பேசுவதால் எவ்வித பயனுமில்லை. இது என்னுடைய அபிப்பிராயம்.” குறிப்பு: 25.07.1937 ஆம் நாள் பொன்மலை தொழிலாளர் சங்கத்திடல் அருகில் நடைபெற்ற பொன்மலை சுயமரியாதைச் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழாவில் “அபேதவாதத்தைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்ற கேள்விக்குப் பதில் அளித்து பேசியதன் சுருக்கம். குடி அரசு –...

இனி நடப்பதென்ன?

இனி நடப்பதென்ன?

காங்கிரஸ் மந்திரிகள் அதிகாரத்துக்கு வந்துவிட்டார்கள். மக்களுக்கு இனி தண்ணீரே குடிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் தேனும் பாலுமே அருவியாகவும், ஆறாகவும் ஓடப்போகிறது. ஆகாய கங்கை அகிலமெல்லாம் வேண்டியவுடன் வரவழைக்கப் படப்போகிறது. வரி என்கின்ற வார்த்தையே அகராதியில் கூட இல்லாமல் எடுபடப்போகிறது. இந்திய நாட்டில் எங்காவது பட்டினி என்றோ, வேலை இல்லாத கஷ்டம் என்றோ யாராவது உச்சரித்தால் ராஜத்துவேஷக் குற்றமாகக் கருதி தண்டனைக்குள்ளாக்கக் கூடிய சட்டம் செய்யப்படப் போகிறது. அற்ப ஆயுளில் யாரும் சாகாவண்ணம் எல்லோரும் 120 வருஷம் உயிர் வாழ ஏற்பாடு செய்யப்பட்டு மரணப் பதிவு இலாக்காவே எடுபடப்போகிறது. ஆகவே இனி என்ன வேண்டும்? இந்த சரணாகதி மந்திரிகள் ஆதிக்கத்தில் இவ்வளவு காரியம் ஆனால் போதாதா? இதற்கு மேலும் அனேக காரியம் செய்யப்படும் என்று காங்கிரஸ்காரர்கள் வாக்களித்திருந்த போதிலும் இதற்கு மேலும் மக்கள் ஆசைப்படுவது பேராசையைக் காட்டுவதாகிவிடாதா? ஆனால் சரணாகதி மந்திரிகள் இவ்வளவோடு நிறுத்தி விடமாட்டார்கள். இன்னமும் அதிகமான அனேக நன்மைகளைச்...

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். ~subhead இளமையில் நம்பிக்கை ~shend எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும்...

ஆம்பூர் ஆதிதிராவிடர் மகாநாடு  காங்கிரசால் உங்களுக்கு கதிமோட்சம் கிடையாது  மதம் வேண்டுமானால் இஸ்லாத்தைத் தழுவுங்கள்

ஆம்பூர் ஆதிதிராவிடர் மகாநாடு காங்கிரசால் உங்களுக்கு கதிமோட்சம் கிடையாது மதம் வேண்டுமானால் இஸ்லாத்தைத் தழுவுங்கள்

  தலைவரவர்களே! தோழர்களே! இந்த ஜில்லாவில் முதல் முதலாகக் கூட்டப்பட்ட இந்த மகா நாட்டுக்கு அழைக்கப்பட்ட எனக்கு உங்களால் வாசித்துக் கொடுக்கப் பட்ட வரவேற்புப் பத்திரத்திற்கு எனது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த வரவேற்பு பத்திரத்தில் என்னை அதிகமாக புகழ்ந்து கூறியிருக்கிறீர்கள். மகாநாட்டைத் திறந்து வைத்த கனம் மந்திரியார் எம்.சி. ராஜா அவர்களும் மகாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் வக்கீல் சாமிநாயுடு அவர்களும் மிகவும் புகழ்ந்து பேசி விட்டார்கள். உண்மையில் இப்புகழ்ச்சிகளுக்கு நான் அருகனல்ல என்பதை மனப்பூர்வமாகவே தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்பால் உள்ள அன்பே அவ்வளவு மெய்மறந்து கண்மூடித்தனமாக புகழச் செய்துவிட்டது. ஆனபோதிலும் அதற்கேற்றாப்போல் உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அற்புதமான காலம் உண்மையிலேயே நாம் ஒரு அற்புதமான காலத்தில் இருக்கின்றோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் காதில் கேட்டிராததும் மனதில் நினைத்திராததுமான பல ஆச்சரியமான காரியங்கள் வெகு சுலபத்தில் நடப்பதை நேரில்...

காங்கரஸ் ஒரு சூழ்ச்சி சபை  முஸ்லீம்களுக்கு அதனால் நன்மை இல்லை

காங்கரஸ் ஒரு சூழ்ச்சி சபை முஸ்லீம்களுக்கு அதனால் நன்மை இல்லை

  தலைவர் அவர்களே! தோழர்களே! முஸ்லீம்களும் காங்கிரசும் என்பது பற்றி எனது அபிப்பிராயத்தை தாங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இதைப்பற்றி பல தடவை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லுவதானால் தென்னாட்டில் காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும் எப்படியோ அப்படியேதான் காங்கிரசும் முஸ்லீம்களும் என்பதாகும். சூழ்ச்சி சபை தென்னாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதாராகிய நாங்கள் பெரும்பான்மையோர் காங்கிரசை எங்கள் சமூகத்தை ஏய்த்து பல வஞ்சக காரியங்களால் எங்களைப் பிரித்து அடக்கி வைத்து எங்கள் மீது ஒரு சிறு கூட்டத்தார் ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சி சபை என்றே கருதுகிறோம். இந்த எண்ணம் எனக்கு இன்று நேற்று உதித்ததல்ல. நான் தீவிர காங்கிரஸ் வாதியாய் – தென்னாட்டு மாகாண காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவனாய் தேசத்துக்கு ஆக 3, 4 முறை சிறை சென்று தேசிய வீரனாய் இருந்த காலத்திலே ஏற்பட்டதாகும். அதாவது சுமார் 12 வருஷத்துக்கு முந்தியே ஏற்பட்டு காங்கிரசிலிருந்து வெளி வந்து பல்லாயிரமுறை பேச்சிலும், எழுத்திலும்...

மாயவரம் நடராஜன் மறைந்தார்

மாயவரம் நடராஜன் மறைந்தார்

நம் அருமைத் தோழன், ஆருயிர் நண்பன், உண்மை உழைப்பாளி மாயவரம் சி. நடராஜன் முடிவெய்திவிட்டார். காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை உலகில் நடராஜனை அறியாதார் வெகுசிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அருந்தொண்டாற்றி வந்தவர். தனக்கென வாழாதவர். தனக்கென ஒரு அபிப்பிராயம் காட்டிக்கொள்ளாத போர்வீரராய் இருந்தவர். பணங் காசைப்பற்றியோ தண்டனை கண்டனைகளைப்பற்றியோ துன்பம் தொல்லை ஆகியவைகளைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் என்ன உத்திரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவெய்திவிட்டார் என்று தந்தி வந்தது – நம்ப முடியவில்லை. மேலால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. எழுத பேனா ஓடவில்லை. இனி மேலால் தொண்டர் படைநிலை என்ன ஆவது! அப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சமும் அழியாக் காதலும் கொண்ட அருமை நடராஜனை எப்போது காண்பது! அல்லது நடராஜனைப் போன்ற மற்றொரு காதலனை எங்கே காண்பது! இயற்கையே! உன் கொடுமையே கொடுமை! எங்கும் சிறிதும் இணையில்லாத...

ஒரு தொல்லை ஒழிந்தது

ஒரு தொல்லை ஒழிந்தது

  கடைசி சரணாகதி காங்கிரசுக்காரர்களுக்குப் புத்தி வந்தோ அல்லது வேறு நிவர்த்தி இல்லாத நிலையில் சிக்கிக்கொண்ட நெருக்கடியால் ஞானோதயம் ஏற்பட்டோ கடைசியாக சரணாகதி அடைந்துவிட்டார்கள். இந்தப் பெருமை நமது சர்க்காருக்கே உண்டு. மகா கெட்டிக்காரத் திருடனாய் இருந்த கூளாங்காலன் என்பவனை யாராலும் பிடிக்க முடியாமல் போனவுடன் கடைசியாக அவன் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படியும் அவனைக் கண்ட இடத்தில் சுடும்படியும் உத்திரவு போட்டதாலும் அவன் சுற்றத்தார், உறவினர், அவனது ஊர்க்காரர் ஆகியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு ஏற்படுத்தியதாலும் கூளாங்காலன் தானாகவே ஓடிவந்து எப்படி சரணாகதி அடைந்து சிறைப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டானோ அது போல் சர்க்காரார் காங்கிரஸ் தொல்லையை ஒழிக்க சாதாரண முறையில் எவ்வளவோ காரியம் செய்தும் அவை காங்கிரசுக்குச் சோதிக்காமல் போய்விட்டதால் கடைசியாக ஒரு உத்திரவு போட்டது போல் – வைஸ்ராய் பிரபு காங்கிரசுக்கு இறுதிச் சேதி விட்டது போல் இவ்வளவு நாளைக்குள் வந்து தாங்களாக சரணாகதி அடைந்து அவர்களது...

தெய்வ வரி

தெய்வ வரி

நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமி வரி, வருமான வரி, கள்ளு வரி, துணி வரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிட்டி வரி, போர்டு வரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகளைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற் காகவும் கொடுத்து வரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்ப தோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவை விட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும், மத விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதற்கில்லாமல் செய்து, நமது மூட நம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதி வைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்து வதல்லாமல் வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, ஸ்தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிரயாணச் செலவு...

பண்டித ஜவஹர்லாலின் மதிப்பு

பண்டித ஜவஹர்லாலின் மதிப்பு

காங்கிரஸ் தலைவரான பண்டிதர் ஜவஹர்லால் அவர்களுக்கு நாட்டில் உண்மை மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பொது ஜனங்கள் உணரவேண்டும் என்பதற்கு ஆகவே இக்கட்டுரை எழுதுகிறோம். பண்டித ஜவஹர்லால் பல சமயங்களில் முன்பின் யோசனையில்லாமலும் முறட்டு வீரமாகவும் பேசும் பேச்சுக்களையும், எழுதும் எழுத்துக்களையும் பல பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி பயன்பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கிரசின் பேரால் ஓட்டு கேட்கும் போது காங்கிரசின் வருணாச்சிரம தருமத் தன்மையையும் முதலாளித்துவ தன்மையையும் மறைப்பதற்கு ஆக பண்டிதரை காந்தியாரும் பார்ப்பனர்களும் பயன் படுத்திக் கொள்ளும் தன்மை மற்றொரு பக்கம் இருக்கட்டும். வகையான வாழ்வுக்கு வகையற்ற வாலிபக்கூட்டமும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக அவ்வப்போது எந்தெந்த பேச்சுக்கும் ஸ்தாபனத்துக்கும் செல்வாக் கிருக்கின்றதோ அந்தந்த பேச்சுப் பேசி அந்தந்த ஸ்தாபனத்தைத் தொங்கிக் கொண்டு பிழைப்பதற்கு ஆக ஜவஹர்லாலுக்கு ஜே என்றும் சமதர்மத்துக்கும் பொது உடமைக்கும் ஜே என்றும் கூறிக் குதிப்பது இனியொரு பக்கத்தில் இருக்கட்டும். இன்றைய சாதாரண நடைமுறை வழக்கில்...

எனது விண்ணப்பம்

எனது விண்ணப்பம்

  இன்று முதல் “விடுதலை” காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிக்கை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பலவழிகளிலும் முயற்சித்து வந்தேன். இதை அறிந்தோ அறியாமலோ தமிழ் மக்கள் பலரும் இப்படிப்பட்ட பத்திரிகையில்லாக் குறைவை எனது கவனக்குறை என்று குற்றம் சாட்டியும் ஊக்கப்படுத்தியும் பல தீர்மானங்களும் வேண்டுகோளும் செய்த வண்ணமாய் இருந்தார்கள். இதுவரை நான் எடுத்து வந்த பல முயற்சிகள் கைகூடாமல் போய் விட்டதானாலும் தமிழ் மக்கள் வாழ்வுக்கே கேடு உண்டாகும் படியான நிலையில் எதிரிகளின் ஆதிக்கம் பலப்படத் தக்க நிலைமை மேலேறிக் கொண்டு வருவதாக காணப்பட்டதாலும் அதற்கு பெருங்காரணம் ஒரு தமிழ் தினசரி வர்த்தமானப் பத்திரிக்கை இல்லாதது என்று உணர்ந்ததாலும் அதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலரும் பயந்து எதிரிகளைத் தஞ்சமடைந்து மற்றத் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கவும் துணிகிறார்கள் என்றும் நான்...

ஆரியர்களின் யோக்கியதை

ஆரியர்களின் யோக்கியதை

ஜர்மனியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளு கிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பனர்களும் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். இந்து மத ஆதாரங்களும் ஆரிய மதம், ஆரிய வேதம், ஆரியக் கடவுள்கள், ஆரிய மன்னர்களின் கதைகள் என்பதாகத்தான் இருந்து வருகின்றன. புராண ஆராய்ச்சிக்காரர்களும், பண்டிதர்களும், சரித்திர ஆராய்ச்சிக் காரர்களும், பாரதம், ராமாயணம் மற்ற புராதனக் கதைகள் ஆகியவைகளில் வரும் சுரர், அசுரர் என்கின்ற பெயர்களையும், ராக்ஷதர்கள் தேவர்கள் என்கின்ற பெயர்களையும், ராமன் அனுமான் என்கின்ற பெயர்களையும், ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவையே பிரதானமாய்க் கொண்டவை என்பதாகவும் தீர்மானித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். மேல்நாட்டுச் சரித்திரக்காரர்களும், சிறப்பாக அரசாங்கத்தார்களும் மேல்கண்ட ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவை ஒப்புக்கொண்டு அந்தப்படியே ஆதாரங்கள் ஏற்படுத்தி பள்ளிப் பாடமாகவும் வைத்து வந்திருக்கிறார்கள். அரசியல்காரர்களில் தீவிர கொள்கை கொண்ட தேசீயவாதிகள், சமதர்மக்காரர்கள், பொதுவுடமைக்காரர்கள் என்று சொல்லப்படுகின்ற தோழர் ஜவகர்லால் நேரு போன்றவர்களும் தங்களது ஆராய்ச்சிகளில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவுகளை ஒப்புக்கொண்டும்...

தாயார் மரணத்தை வரவேற்ற பெரியார்

தாயார் மரணத்தை வரவேற்ற பெரியார்

இந்த காலகட்டத்தில்தான் சென்னை மாநகராட்சிக்கும், ஜில்லா போர்டுகளுக்கும் தேர்தல் நடந்தன. அடுத்து சட்டசபைக்கான தேர்தலும் வர இருந்தது. காங்கிரஸ் கட்சி, இத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கிய நிலையில் காங்கிரசுக்கு எதிரான தலையங்கங்களும் பெரியாரின் சொற்பொழிவுகளும் இத் தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. நீதிக்கட்சியைச் சார்ந்த பார்ப்பனரல்லாதார், உள்ளாட்சி தேர்தல்களில் கட்சி சார்பாக போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் சார்பில் போட்டியிடக் கூடாது என்ற கருத்தையே பெரியார் வலியுறுத்துகிறார். தமிழகத்தில் தேர்தல் நடக்கும் சூழலில் அகில இந்திய காங்கிரசின் முக்கிய தலைவர்களான ஜவகர்லால் நேருவும், பட்டேலும் தமிழகம் வருவதன் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது “குடி அரசு”; காங்கிரசின் பார்ப்பன கொள்கைகளை நியாயப்படுத்த வந்த நேருவுக்கு எதிராக பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை இயக்கத்தினர், கருப்புக்கொடி புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினர். நேரு பட்டேல் வருகையை வைத்து, பெருமளவில் நிதி திரட்டும் பணிகளை காங்கிரஸ் முடுக்கி விட்டது. இந்த சூழ்நிலையில் சுமார் ஒரு மாத காலம் தீவிர சுற்றுப்பயணம்...

தென்னாட்டுக் காங்கரஸ்காரர்  பதவி வேட்டைக்காரரே  தோழர் நாரிமன் பேச்சு

தென்னாட்டுக் காங்கரஸ்காரர் பதவி வேட்டைக்காரரே தோழர் நாரிமன் பேச்சு

  ~cmatter வைஸ்ராய் அறிக்கையைப்பற்றி தோழர் நாரிமன் தனது அபிப்பிராயத்தைக் கூறுகையில் “தென்னாட்டிலிருக்கும் சமாதானப் பிரியர்களான (சென்னை மாகாண) காங்கிரஸ்காரர்களுக்குங் கூட வைஸ்ராயின் பிரசங்கம் சுறுக்கென்று தைக்குமென்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். பிரபல காங்கிரஸ்வாதியாகிய தோழர் நாரிமன் கூறிய இக்கூற்றிலிருந்து தென்னாட்டு காங்கிரஸ்காரர்கள் பதவி மோகக்காரர்களென்பதும் அவர்கள் லôயமெல்லாம் உத்தியோகங்கள் பெறுவதுதானென்பதும் தேசவிடுதலையிலோ பொது மக்கள் க்ஷேமத்திலோ, சுயமரியாதையிலோ ஒரு சிறிதும் கவலையில்லாதவர்களென்பதும் தெளிவாக விளங்கவில்லையா? காங்கிரஸ்காரர் பதவி மோகக்காரர்களென்று வேறு யாராவது கூறியிருந்தாலும் அந்தக் கூற்றைப் பற்றி தென்னாட்டு காங்கிரஸ்காரர்களும் பத்திரிகைகளும் வசைபாடலாம். பிரபல காங்கிரஸ்வாதியும் காங்கிரஸ் நடவடிக்கைகளில் கலந்து கொள்பவரும் பிரசித்தி பெற்ற வட நாட்டுத் தலைவர்களில் ஒருவருமாகிய தோழர் நாரிமன் கூறியவைகளை யார்தான் எவ்வாறு புறக்கணிக்க முடியும்? தோழர் நாரிமன் கூறிய இவ்வுண்மை மொழிகளைக் கண்டு பொறாத ஒரு தமிழ் தினசரி பத்திரிகை வட நாட்டாரைக் குறைகூறி தென்னாட்டாரை உயர்த்திக் கூறி சமாதானம் செய்வதோடு தமிழ்நாட்டில்...

காந்தியார் தலைமை  ஏலத்துக்கு வந்து விட்டது  அபேதவாதிகள் அதிருப்தி

காந்தியார் தலைமை ஏலத்துக்கு வந்து விட்டது அபேதவாதிகள் அதிருப்தி

  உலகப் பெரியாரான காந்தியாரின் தலைமைப்பதவி ஏலங்கூற வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. நந்தியாலில் நடைபெற்ற ஆந்திர மாகாண மகாநாட்டு நடவடிக்கைகளைப் பார்ப்பவர்களுக்கு ஆந்திர தேசத்திலே காந்தியின் மதிப்புக் குறைந்து வரும் உண்மை புலனாகும். காந்தியின் தலைமையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாகச் சொல்லும் காரணம் மிகவும் விநோதமாக இருக்கிறது. காங்கரஸ் மிதவாதிகளுக்கும் அமிதவாதிகளுக்கும் பிளவை உண்டுபண்ண எதிரிகள் முயற்சி செய்கிறார்களாம். எதிரிகள் முயற்சி பலிக்கக்கூடாதாம். அதற்காக யாராவது ஒரு தலைவரின் கீழ் நின்றுகொண்டு ஒற்றுமையாக உழைக்க வேண்டுமாம். காந்திதான் இந்தியாவின் ஏகபிரதிநிதியாம்; இந்திய அபிலாøைகளின் பிரதி புருஷனாம். ஆகவே அவரைத் தலைவராகக்கொண்டு தீர வேண்டுமாம். இவ்வாறு கூறுவோரின் உட்கருத்தென்ன? எதிரிகளை ஏய்ப்பதற்காக காந்தியாரை இந்தியர்கள் தலைவராக ஒப்புக்கொண்டு தீர வேண்டுமென்பது தான் கருத்து. உலகப் பழிப்புக்கு பயந்து, விபசாரிகளான மனைவிமாரைப் பல கணவன்மார்கள் பத்தினிகளாகப் பாவிப்பதற்கும் இந்தக் கருத்துக்கும் எத்தகைய வித்தியாசமுமில்லை. நந்தியால் மகாநாட்டில் காந்தியை எதிர்த்துப் பேசியோர்...

காங்கரஸ் கண்ணாம்பூச்சி விளையாட்டு

காங்கரஸ் கண்ணாம்பூச்சி விளையாட்டு

“புதுச் சீர்திருத்தத்தை இந்தியா மறுத்துவிட்டது. பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியல் திட்டத்தை வகுக்க வேண்டும். அதுவே காங்கரஸ் நோக்கம். அதற்காகவே காங்கரஸ் பாடுபடப்போகிறது” என காங்கரஸ்வாதிகள் கூறுகிறார்கள். “இந்த அரசியல் சட்டமே இப்போது இந்நாட்டில் அமலில் இருக்கும் சட்டம். அதைப் பற்றி யார் எவ்வளவு குறை கூறினாலும் அது ஒன்றுதான் இப்போது தேசத்தின் முன் இருக்கும் பூரணமான அரசியல் சீர்திருத்தச் சட்டம். அதைவிட முற்போக்கான சட்டம் அமைப்பதற்கு அதை ஏற்று நடத்துவதே சிறந்த வழி. இதைவிட அதிவிரைவில் இந்திய லôயத்தை அடையக்கூடிய பாதை வேறு இல்லவே இல்லை” என வைஸ்ராய் சென்ற 22-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் சந்தேகத்துக்கு இடமின்றிக் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டார். இந்நிலையில் காங்கரஸ் செய்யப்போகிறது என்ன? ஒன்றில் தன் லôயத்தை மாற்றிக்கொண்டு புதுச்சீர்திருத்தத்தை ஏற்று நடத்த காங்கரஸ் முன் வரவேண்டும்; அல்லது சட்டசபைப் பதவிகளை ராஜிநாமாச்செய்து விட்டு பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை அமைக்கும்...

“குருகுலம்”

“குருகுலம்”

மறுபடியும் பார்ப்பன ஆதிக்கமே திருநெல்வேலி ஜில்லா சேரமாதேவியில், காலஞ்சென்ற வி.வி.எஸ். அய்யரால் நடத்தப்பட்டு வந்த பரத்துவாச ஆச்சிரமம் என்றும் குருகுலம் என்றும் பெயர் வழங்கப்பட்டுவந்த ஒரு ஸ்தாபனத்தைப்பற்றிய கதைகள் பூராவும் தென் இந்திய மக்களுக்கு ஞாபகமிருக்குமென்றே கருதுகிறோம். இந்தக் குருகுலக் கதைதான் தோழர்கள் ஈ.வெ. ராமசாமி, பி. வரதராஜúலு நாயுடு, திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் முதலியவர்கள் பார்ப்பனர்களுடைய அதிருப்திக்காளாகவும் காங்கிரசில் இருந்து விலகவும் நேர்ந்த காரணமாகும். காங்கிரஸ் உதவி இந்த குருகுலமானது “தேசபக்தர்களையும் தேசிய வீரர்களையும் உற்பத்தி செய்வதற்கு” ஆரம்பிக்கப்படுகிறது என்று தோழர் வி.வி.எஸ். அய்யர் ஆரம்பித்தபோது சொன்ன காரணமாகும். அதற்கு ஆக மாகாண காங்கிரசை உதவித் தொகை கேட்டபோது மாகாண காங்கிரஸ் கமிட்டியானது ஒரே அடியாய் பத்து ஆயிர ரூபாய் சாங்கிஷன் செய்து விட்டது. ஏனெனில் அந்தக் காலத்தில் திலகர் நிதிப்பணம் ஓட்டாஞ் சல்லிபோல் குவிந்து கிடந்தது. யாராவது ஒரு பார்ப்பனர் விண்ணப்பம் போடவேண்டியதுதான் தாமதம். உடனே சாங்கிஷன் ஆகிவிடும்....

காங்கிரசுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது

காங்கிரசுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது

தோழர் எம்.என்.ராய் காங்கிரசில் பிரதான புருஷர். மிகுந்த தீவிரவாதி. பதவி ஏற்கக்கூடாது என்பவர். காங்கிரஸ் பதவி ஏற்புக்காரர் சூழ்ச்சி பலிக்காமல் போனவுடன் காங்கிரசில் பிளவு ஏற்படுவது நிச்சயமென்று ஏற்பட்டவுடன் காங்கிரஸ் முதலாளி கூட்டத்தார் காங்கிரஸ் சமதர்மக்கட்சியை விலக்க முயற்சி செய்து விட்டார்கள். அதாவது காங்கிரஸ் சமதர்ம வாதிகளின் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான தோழர் ஜவஹர்லால் அவர்கள் ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும் என்றும் பிரிட்டன் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவை காலிசெய்து விட்டு கப்பலேற வேண்டும் என்றும் ஒரு புறம் பல்லவி பாடிக்கொண்டு இருக்கும்போதே மற்றொரு புறம் தோழர் காந்தி பளீரென்று ஜவஹர்லால் கன்னத்தில் அறைந்து பல்லுகளை உதிர்த்தினாற்போல் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு கடுகளவு மனஸ்தாபமோ அதிருப்தியோ நேருவதாய் இருந்தால் என் உயிரை விட்டு அதை தடுப்பேன் என்று சொல்லி எப்படியாவது தனது சீஷர்களுக்குப் பதவி வாங்கிக் கொடுக்கவும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஜெட்லெண்ட் பிரபுவை வாக்குறுதி கேட்கிறார்.. ஜெட்லண்ட் பிரபுவோ இதற்கெல்லாம் சிறிது...

திலகர் நிதி மோசடியும்  பொது மக்களும்

திலகர் நிதி மோசடியும் பொது மக்களும்

  – “ஜஸ்டிஸ்” எழுதுவது “திலகர் சுயராஜ்ய நிதி தவறாக நிர்வாகிக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் அதனால் ஏற்பட்ட நஷ்டம் காங்கிரசுக்கே தவிர அந்நிதிக்கு பொருளுதவி செய்யாதவர்களுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை” என தோழர் சி. ராஜகோபாலாச்சாரி சொன்ன கூற்றை சற்று இங்கு ஆராய்வோம். இக்கூற்றில் மூன்று வகையாக குறிப்புகள் தொக்கி நிற்கின்றன. அதாவது ஒன்று காங்கிரஸ் திலகர் நிதியை தப்பாக நிர்வாகம் செய்ததாகச் சொல்லப் படுவது உண்மையல்ல. இரண்டு இந்நிதிக்கு பணம் கொடுத்தவர்களுக்குத்தான் அதைப்பற்றி குற்றங்குறைகள் எடுத்துரைக்க உரிமையுண்டு. மூன்று அதைப்பற்றி லாபமோ நஷ்டமோ காங்கிரசுக்கேயொழிய வெளியிலுள்ளவர் களுக்கு ஒன்றுமில்லை என்பவைகளாகும். இவ்வாறு இவர் கூறியதைப்பார்த்தால் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் வெளியிட்ட அறிக்கைக்கும் ஆச்சாரியாருடைய கூற்றுக்கும் நெருங்கிய சம்பந்தமிருக்கிறது என்பது நன்கு தெரியவரும். அவ்வறிக்கையில் காங்கிரஸ் தலைவர் கூறுவதாவது, பழமையானதும், வெகுநாட்களானதும் தணிக்கை செய்யப்பட்டதும், பழைய சாசனங்களோடு ஒதுக்கிவைக்கப்பட்டதுமான ஒரு விஷயத்தைக் குறித்து திடீரென்று புதிதாக...

பதவிமோகம் காங்கிரசுக்காரருக்கா? அல்லாதாருக்கா?

பதவிமோகம் காங்கிரசுக்காரருக்கா? அல்லாதாருக்கா?

சாப்ராவில் சாரான் அரசியல் தொண்டர்கள் மகாநாடு கூடியது. அதில் தோழர் அனுக்கிரகநாராயண் சின்னா தலைமை வகித்தார். ஆனால் அம்மகாநாட்டிற்கு தலைமை வகிக்க தோழர் ஜகத்நாராயணலால் ஒத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத அசெளகரியத்தால் அவர் வரமுடியவில்லை. அவர் அம்மகாநாட்டிற்கு ஒரு சேதியனுப்பியிருந்தார். அதில் காங்கிரஸ் தொண்டர்கள் எப்பொழுதும் தயாராயிருக்கவேண்டும் என்றும் அவர்களது சேவை தேவையான போதெல்லாம் உடனே முன்வரவேண்டுமென்றும் ஏமாற்றிவிடக்கூடாது. டிமிக்கி கொடுத்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்டார். இதனால் காங்கிரசில் இதுவரை கலந்து வேலை செய்து வருபவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பது விளங்கவில்லையா? இம்மகாநாட்டிற்கு தலைமைவகித்த தோழர் அனுக்கிரக நாராயண் சின்னா தனது தலைமைப் பிரசாங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் செய்த இச்சிறிய – அற்ப காரியத்தைக் குறித்து மனம் பூரித்து விடக்கூடாது! கர்வங்கொண்டு தலைகால் தெரியாமல் மதுவுண்டவனைப்போல இருந்து விடக்கூடாது என்றும், சுதந்திரப்போராட்டத்தின் முதற்படியாகிய எ.பி.சி. என்ற அட்சரத்தைக்கூட இன்னும் சரிவர அவர்கள் அறியவில்லை என்றும் ரஷ்யாவில் சுதந்திரத்திற்காக அந்நாட்டு வீரர்கள் எத்தகைய வீரச் செயல்கள்...

ஈரோடு சந்தைப்பேட்டை விபத்து  விசாரணைக் கமிட்டி முடிவு எங்கே?  பார்ப்பன சூழ்ச்சியில் ஏமாந்து விடாதீர்கள்

ஈரோடு சந்தைப்பேட்டை விபத்து விசாரணைக் கமிட்டி முடிவு எங்கே? பார்ப்பன சூழ்ச்சியில் ஏமாந்து விடாதீர்கள்

  – ஓட்டாண்டி வந்துவிட்டது! வந்துவிட்டது!! என்ன? என்ன?? அதுதான் கமிட்டியின் முடிவு! எங்கே? அதோ! இதோ!! என்ன கயிறு என்கிறீர்களா? அப்படி ஒன்றுமில்லை, எல்லாம் பச்சை உண்மை. உங்கள் மனதில் அது படாவிட்டால் நான் ஜவாப்தாரி அல்ல. கோபிக்க வேண்டாம். சமாசாரத்தைச் சொல்லி விடுகிறேன். ஈரோடு சந்தைப்பேட்டை விபத்தைப்பற்றி விசாரிக்க இரண்டு கமிட்டி இங்கே நியமிக்கப்பட்டதல்லவா? பணம் சேகரிக்கப் பார்ப்பனரல்லாதாரடங்கிய கமிட்டியும் காரணத்தை விசாரிக்கப் பார்ப்பனர் அடங்கிய கமிட்டியும் கற்பித்தார்கள் அல்லவா? எங்கே அவர்களின் முடிவு என்று கேட்கிறீர்களா? அதுதான் வந்து விட்டது. எங்கே இன்னும் வெளியில் காணோமே என்கிறீர்களா? இது பயித்தியகார உலகம். நீங்களும் அதில் தானே குடி இருக்கிறீர்கள். அதனாலேதான் உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு தெரிந்ததைச் சொல்லிவிடுகிறேன். விபத்திற்கு ஆளானவர்களுக்கு உதவிசெய்வது என்பது இரண்டாம் பக்ஷம். முதலாவது என்ன என்று தெரியுமா? அதுதான் அடுத்து வரும் தேர்தல் போட்டி. எப்படி என்றால் கமிட்டிகளின் முடிவை இப்பொழுதே சொல்லிவிட்டால்...

சேர்மாதேவி குருகுலம்

சேர்மாதேவி குருகுலம்

காலஞ்சென்ற வ.வெ.சு. அய்யரால் ஸ்தாபிக்கப்பட்ட சேரமாதேவி ஆச்சிரமம் இம்மாதம் 7-ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள பல பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஆச்சிரமத்தை நடத்தும் “பெரிய” பொறுப்பை, சென்னை கோகுல ஹரிஜன காலனி ஸ்தாபகரான பத்தமடை பி.என். சங்கரநாராயணய்யர் பலர் வேண்டுகோளின்படி ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். ஆனால் ஆச்சிரமப் புனருத்தாரண வேலை, சபை திக்குக் குட்டும்போதே கண்ணில் குட்டிக்கொண்ட மாதிரியே ஆரம்பமாகியிருக்கிறது. 1934 முதல் நாளிதுவரை ஆசிரமத்தில் நடந்த வேலைகளைப்பற்றி யாரோ ஒரு எல்.என். கோபால்சாமி ஒரு அறிக்கையைப் படித்தாராம். அப்பால் ஆச்சிரமம் நடத்துவதைப்பற்றி ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாம். தோழர்கள் சாவடி கூத்த நயினார் பிள்ளையும் தூத்துக்குடி ராமசாமியும் பேசுகையில், “வெளியில் பல பேர்களின் அபிப்பிராயத்தில் இந்த ஆச்சிரமத்தில் முன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் வராவண்ணம் தடுக்க, தனி நிலைமையில் ஒருவரிடம் ஒப்புவிப்பதைவிட சிலரைச் சேர்த்தே நிர்வாகம் நடத்தச் சொல்வது சிலாக்கிய”மென்றும் மேலும் “ஆச்சிரமத்துக்குத் தலைமை வகிக்க ஒரு பிராமணரல்லாதார் இருந்தால்...

காந்தியார் இறக்கம்

காந்தியார் இறக்கம்

“உச்சாணிக்” கொம்பிலே ஏறி உட்கார்ந்து கொண்டிருந்த காந்தியார் படிப்படியாக இறங்கி இப்பொழுது தரை மட்டத்துக்கு வந்து விட்டார். விசேஷாதிகாரங்களை உபயோகிப்பதில்லையென்று எழுத்து மூலம் கவர்னர்கள் வாக்குறுதியளிக்க வேண்டுமென்று அவர் வகுத்த முதல் நிபந்தனை கருவிலேயே அழிந்து போயிற்று. அப்பால் கவர்னர் விசேஷாதிகாரங்களைப் பிரயோகம் செய்யமாட்டார் என்று காங்கரஸ் கட்சித்தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் போதுமென்று காந்தி நிபந்தனை மாற்றமடைந்தது. கவர்னர்கள் அதையும் லôயம் செய்யவில்லை. மூன்றாவதாக வாக்குறுதிப் பிரச்சினையை பஞ்சாயத்தார் முடிவுக்கு விடவேண்டுமென்று காந்தியார் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதையும் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உடனே அவருக்குச் சிறிது அலுப்புத் தட்டிற்று. “விசேஷ நிபந்தனை எதுவும் வேண்டாம். மந்திரிமாருக்கும் கவர்னர்களுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டால் கவர்னர்கள் மந்திரிமாரை “டிஸ்மிஸ்” செய்து விடட்டும்” என்றார். அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. கடைசியாக அவர் சோர்வடைந்து “டிஸ்மிஸ் செய்யவேண்டாம். ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று மந்திரிமாரைக் கேட்டுக்கொண்டால் போதும்” என தமது நிபந்தனையைக் கரைத்துக்கொண்டு விட்டார். அம்மட்டோ...

காங்கரஸ் கட்டுப்பாடு

காங்கரஸ் கட்டுப்பாடு

சென்னை மாகாணத்தில் இரண்டு நகரசபைகளிலும் ஒரு கார்ப்பரேஷனிலும் ஏழு ஜில்லா போர்டுகளிலும் காங்கரஸ்காரர் மெஜாரிட்டி கட்சியாக இருக்கிறார்களாம். ஆனால் காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற அந்த ஸ்தல ஸ்தாபனங்கள் எல்லாம் கழுதை புரண்ட களமாகவே இருந்து வருகின்றன. தகராறு, பிளவு, சச்சரவில்லாத ஸ்தல ஸ்தாபனமே இல்லை. வேலூர், திருச்சி, திருநெல்வேலி, தென்னாற்காடு கதை பழங்கதையாகிவிட்டது. கர்னூல் ஜில்லா போர்டில் காங்கரஸ்காரர் ஆதிக்கம் பெற்றிருந்தும் இடைக்கால மந்திரிகளைக் கண்டித்து காங்கரஸ்வாதி கொண்டுவந்த தீர்மானம் முழுத் தோல்வியடைந்தது. காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற நெல்லூர் ஜில்லாபோர்டிலே “பட்ஜெட்” நிறைவேறும் காரியம் திண்டாட்டத்திலிருக்கிறது. திருவண்ணாமலை ஜில்லா போர்டு விஷயம் சொல்ல வேண்டியதில்லை, ஜில்லா போர்டு தலைவர் தோழர் எம். ஷண்முக முதலியார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே தீர்மானித்திருந்தும் இன்னும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேயில்லை ஏன்? ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் காங்கரஸ் சாயம் வெளுத்துவிடும். இந்நிலைமையில் சென்னை சட்டசபை மெம்பரும் திருவண்ணாமலை ஜில்லா...

தேச விடுதலைக்கு வழி?

தேச விடுதலைக்கு வழி?

லண்டன் பொதுக் கூட்டம் ஒன்றில் காலஞ்சென்ற லாலாலஜபதி ராய் பேசியபோது, “நாங்கள் 50 வருஷகாலமாய் சுதந்தரத்துக்காகப் போராடுகிறோம். எனினும் பிரிட்டிஷார் எங்களுக்கு சுதந்தரமளிக்கவில்லை” என்று குறிப்பிட்டார். உடனே “கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து, “இந்தியாவின் ஜனத்தொகை என்ன?” என்று கேட்டார். “30 கோடி” என்றார் லாலா லஜபதி. “30 கோடிப் பேர் சுதந்தரப் போர் நடத்தியும் இன்னும் நீங்கள் ஏன் வெற்றிபெறவில்லை?” என்று அவர் கேட்டார். லஜபதிராய்க்கு பதிலளிக்க முடியவில்லை. வாஸ்தவத்தில் இந்தியர்கள் எல்லாம் ஏகோபித்து, சுதந்தரம் வேண்டும் என்றால் பிரிட்டிஷார் அன்றே கொடுத்துவிடுவார்கள். இந்தியர்களுக்குள்ளே ஒற்றுமையில்லாமலிருப்பதுதான் தற்காலக் குழப்பங்களுக்குக் காரணம். தற்காலம் நடப்பதாய்க் கூறப்படுவது சுதந்தரப்போரல்ல. பார்ப்பனரல்லாதாரையும் கையாலாகாத ஏழை எளியோரையும் எந்நாளும் அடிமைப்படுத்தி வைப்பதற்கான சூழ்ச்சிப்போரே இன்று நடைபெற்று வருகிறது. இந்தியாவிலே பல ஜாதி, பல மதங்கள் தோன்றி ஒற்றுமை இல்லாமலாய் விட்டது. ஜாதி மத பேதங்கள் ஒழிந்து இந்தியா உண்மையில் ஒரு “நேஷன்” ஆனால் தான் இந்தியா விடுதலையடையும்....

“விடுதலை” காலணா தினசரி

“விடுதலை” காலணா தினசரி

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சார்பாக சென்னையில் வாரம் இரு முறையாக நடந்துவந்த தமிழ் “விடுதலை” பத்திரிக்கையானது ஈரோட்டில் இருந்து தினசரி பத்திரிக்கையாக நடந்து வர சகல ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசாங்க அனுமதி ஒரு வாரத்திற்குள் கிடைத்து விடும். அனேகமாய் இம்மாதம் 3 வது வாரத்தில் பத்திரிக்கையை வெளியாக்க தீவிர முயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏஜண்டுகளாய் இருக்க விருப்பமுள்ளவர்கள் உடனே தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 35 பத்திரிக்கைகளுக்கு குறைவாக ரயில்வே பார்சலில் அனுப்பப்படமாட்டாது. 3 மாதகாலத்துக்கு கம்மி இல்லாமல் பத்திரிக்கை ஒன்றுக்கு ஒரு பை. கமிஷன் கொடுக்கப்படும். தினம் 50 பத்திரிக்கைகள் வரை தருவிப்பவர்கள் 25 ரூபாய் டிப்பாசிட் கட்ட வேண்டும். ~subhead சந்தா விபரம்:- ~shend தபால் மூலம் தெரிவித்துக் கொள்ளுபவர்களுக்கு முன் பணமாக மாதம் ஒன்றுக்கு சந்தா 0-11-0 6 மாதத்திற்கு 4-0-0 ஒரு வருஷத்துக்கு 7-8-0 ஏஜண்டுகள் உள்ள இடத்தில் சந்தாதாரர்களாய் சேர விரும்புகின்றவர்களுக்கு முன் பணமாக...

நான் காங்கிரசில் இருந்தால்  என்ன ஆகிவிடும்?

நான் காங்கிரசில் இருந்தால் என்ன ஆகிவிடும்?

    செருப்பு ஆண்ட நாடு இது! காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் சொத்தே பார்ப்பனரல்லாத தியாகிகள் எங்கே தோழர்களே! தோழர் விஸ்வநாதம் அவர்கள் பேசியதைக் கேட்டீர்கள். அது விஷயமாகவே நானும் பேசவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். அரசியல், சமூக இயல், சுயமரியாதை இயல் என்பவை எல்லாம் ஒன்றே ஒழிய இவை தனித்தனியாக பிரிக்கக்கூடியதல்ல. இவை ஒன்றை விட்டு ஒன்று தனித்து நிற்க கூடியதுமல்ல. சமூகத்துக்கு ஆகத்தான் அரசியலும் சுயமரியாதை இயலும் இருந்து வருகிறது. சமூகத்தை நீக்கி விட்டால் மற்ற இரண்டுக்கும் வேலையே இல்லை. சமூகத்தின் தேவைக்கு ஆகத்தான் அரசியல் ஏற்பட்டதே ஒழிய சமூக சம்பந்தமில்லாவிட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும் சமூக இயலையும் பிரித்துக்காட்டுவதானது சமூக குறைபாடுகளை – சமுதாயக் கொடுமைகளை பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர் களுடைய சூழ்ச்சியேயாகும். நமது நாட்டில்தான் அரசியலும் சமுதாய இயலும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத மாதிரியில் பிரிக்கப்பட்டும் பிரிவினையாகப் பேசப்பட்டும் வருகிறது. உதாரணமாக நம் நாட்டில்...

காங்கிரஸ் ஆட்சியின் பயன்

காங்கிரஸ் ஆட்சியின் பயன்

காங்கிரஸ்காரர்கள் பாமர மக்களை ஆசைகள் காட்டி ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். அசாத்தியமான காரியங்களையெல்லாம் சாதித்து விடுவதாகக் கூறியவைகளை பாமர மக்கள் நம்பிவிட்டார்கள். பாமர மக்களுக்கு போதிய அரசியல் ஞானம் இல்லாததால் எது சாத்தியம் எது அசாத்தியம் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. ஆனபோதிலும் காங்கிரஸ்காரர்கள் சிற்சில ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று இன்றைக்கு 2, 3 வருஷங்களாகிவிட்டன. ஒரு சிலவற்றிற்கு முழு காலாவதியும் ஆகிவிட்டன. ஆகவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்த அந்தந்த ஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன? மக்கள் அடைந்த நலன் என்ன? முன்பு இருந்துவந்த நிலைக்கு இப்போது ஏற்பட்ட மாறுதல் என்ன? என்று ஒரு (பாலன்ஸ் ஷீட்) வரவு செலவு ஒரட்டு டாப்பு போட்டு பார்த்தால் பாமரமக்களுக்கு இனியாவது உண்மை விளங்கும் என்று கருதி சிலவற்றை வெளியாக்குகிறோம். தமிழ்நாட்டு ஸ்தல ஸ்தாபனங்களில் மிக பெரிய ஸ்தாபனம் மதுரை முனிசிபாலிட்டியாகும். இது இந்த மூன்று வருஷகாலமாக பலமான...

இப்பொழுதாவது புரிகிறதா

இப்பொழுதாவது புரிகிறதா

பார்ப்பன மகாநாட்டுக்கு அனுமார் கொடி தென்னாட்டு பார்ப்பனர்களால் 24-5-37-ந் தேதி கும்பகோணத்தில் கூட்டப்பட்ட பார்ப்பன ஜாதி மகாநாட்டில் அனுமார் கொடி பறக்க விட்டதாக 25-ந் தேதி “இந்து” பத்திரிகையில் மகாநாட்டு நடவடிக்கை என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்கள் காங்கிரஸ் தேர்தல்களிலும் காங்கிரஸ் சுவரொட்டி விளம்பரங்களிலும் காங்கிரஸ் துண்டு பிரசுரங்களிலும் அனுமார் – குரங்கு உருவத்தை எதற்கு ஆக பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதும் பார்ப்பனரல்லாதார் தொண்டர்களுக்கு எதற்கு ஆக அனுமார் படையென்று பெயர் கொடுத்தார்கள் என்பதும் இப்போதாவது தெரிந்ததா என்று பார்ப்பனரல்லாதாரில் மானமும் மனிதத் தன்மையும் உள்ள தோழர்களைக் கேட்கின்றோம். இந்தக் கேள்வியானது வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்விற்கும் வழி செய்து கொள்ள காங்கிரசில் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாய் திரிபவர்களையும் திரியவேண்டிய அவசியத்திலுள்ளவர்களையும் நாம் கேட்கவில்லை. உண்மையில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என்றும் சுயமரியாதையுள்ள மக்கள் என்றும் சுதந்தர புருஷர்கள் என்றும் கருதிக் கொண்டிருப்பவர்களையே கேட்கின்றோம். பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாத சமூகத்துக்கும் எப்போதாவது போர் தொடங்கப்பட்டு...

பார்ப்பன மகாநாடுகள்

பார்ப்பன மகாநாடுகள்

சமீப சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்கள் தங்கள் முயற்சியை கடசி தடவையாகக் கருதி எல்லா பார்ப்பனர்களும் ஜாதி காரணமாக ஒன்று சேர்ந்து ஒரே மூச்சாகப் பாடுபட்டு அவர்களது ஆதிக்கத்துக்கு மாறாக உள்ள எல்லாவித முயற்சிகளையும் எல்லா கòகளையும் அடியோடு ஒழிக்க தங்களாலானவரை பார்த்தார்கள். ஆனால் (மாயமானைக் கொன்ற கதைபோல்) மாயவெற்றியைத்தான் அவர்களால் அடைய முடிந்ததே தவிர காரியத்தில் – அவர்களது உள் எண்ணத்தில் அவர்கள் எதிர் பார்த்ததில் ஒரு சிறிதும் இதுவரையில் வெற்றி பெற முடியாமலே போய் விட்டது. 1920, 21-ம் வருஷங்களில் இதே பார்ப்பனர்கள் காந்தியாரின் நிழலில் நின்று கொண்டு “இந்த அரசாங்கம் சைத்தான் அரசாங்கம், அரசாங்கப்படிப்பு உத்தியோகம் பிரதிநிதித்துவ சபை நீதி ஸ்தலங்கள் ஆகியவை பிரதிநிதித்துவ மற்றவை, பொய் அரசாங்கம் நடைபெறுகிறது. ஆதலால் இதை அழிக்க வேண்டும். ஆதலால் இவற்றை பஹிஷ்கரிக்க வேண்டும்” என்றெல்லாம் கத்திக் கொண்டு திரிந்து காலத்தைக் கடத்தி மக்களை ஏமாற்றியதில் யாதொரு பயனும் அடையாமல் படுதோல்வி...

மன்னர் முடிசூட்டு விழா

மன்னர் முடிசூட்டு விழா

காங்கிரஸ்காரர்கள் இந்திய மக்கள் மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வது தேசாபிமானத்துக்கு விரோதமானதென்று கூறி இந்திய மக்கள் எவரும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி யிருந்தும் தமிழ் நாட்டில் ஏறக்குறைய ஒவ்வொரு நகரங்களிலும் முடிசூட்டு விழாக்கள் விமரிசையாகவே நடந்திருப்பதாகச் சேதிகள் கிடைத்திருக்கின்றன. பல இடங்களில் காங்கிரஸ் மெம்பர்களும் கலந்து நடத்தியிருப்பதாகவும் சேதி வந்திருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் மன்னரைப்பற்றி யாதொரு குறையும் கூறுவதில்லை. மன்னருக்கும் மன்னர் அரசாங்கத்திற்கும் அரசியல் சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பதாக பிரமாணம் செய்வதிலும் தவறுவதில்லை. பலர் முடிசூட்டில் கலந்து கொண்டதிலும் குறைவில்லை. ஆனால் தங்களைத் தவிர மற்றவர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைப் பவர்களாம் தேச பக்தர்கள் அல்லாதவர்களாம். என்னே பித்தலாட்டம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 23.05.1937

முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை

முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் முஸ்லீம்கள் சுமார் 9 கோடி ஜனசங்கை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் மத விஷயங்களிலும் சமூக வாழ்க்கை விஷயங்களிலும் இந்துக்களுடன் மாறுபட்டவர்கள். இந்துக்களும் முஸ்லீம்களை சமூக மதவிஷயங்களில் மாறுபட்டவர்களாகவே கருதி வந்திருக்கிறார்கள். இந்துக்கள் மெஜாரிட்டியாகவும் முஸ்லீம்கள் மைனாரிட்டியாகவும் இருந்து வருவதாலும் இந்து மத சம்பிரதாயங்கள் மத ஆதாரங்கள் ஆகியவற்றில் முஸ்லீம் சமூகத்தையும் மதத்தையும் இழித்துக் கூறப்பட்டிருப்பதாலும் இந்துக்களால் முஸ்லீம்கள் தாழ்மையாய்க் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்தியாவில் அரசியல் உத்யோக கிளர்ச்சி ஏற்பட்டு உத்தியோகங்களை இந்திய மக்களுக்கு அரசாங்கத்தார் அளிக்க ஏற்பட்ட காலமுதல் ஒவ்வொரு மதமும் ஜாதியும் வகுப்பும் உத்தியோகங்களுக்கு போட்டி போட முன்வந்ததின் மூலம் தாழ்மையாயும் இழிவாயும் கருதப்பட்டு வந்த பெரும்பான்மையான மதங்களும் ஜாதிகளும் ஒருவாறு கண்விழிக்கத் தொடங்கி தங்களது இழிவுகளையும் பின்நிலையையும் நிவர்த்தித்துக் கொள்ள முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றிபெற்றும் வருகின்றன. இந்த முறையினால்தான், இந்திய முஸ்லீம் சமூகமானது குறிப்பாக தென் இந்திய முஸ்லீம் சமூகமானது இந்த 10, 20...

தினசரி பத்திரிகை

தினசரி பத்திரிகை

பார்ப்பனரல்லாதாருக்குத் தினசரிப் பத்திரிகை இல்லை என்பதைப்பற்றி சென்றவாரம் நாம் “குடி அரசில்” தலையங்கம் எழுதி இருந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதில் குறிப்பிடப்பட்டது போலவே சென்னையில் 9-5-37ல் கூடிய ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக சபை கூட்டத்தில் இதுபற்றி யோசிக்கப்பட்டு இப்போது சென்னையில் வாரம் இரு முறையாக நடக்கும் “விடுதலை” பத்திரிகையை ஈரோட்டுக்கு மாற்றி ஈரோட்டிலேயே தினசரியாக நடத்துவதென்றும் அதன் நஷ்டத்திற்கு ஆக ஒரு குறிப்பிட்ட தொகையை தனிப்பட்ட முறையில் சில கனவான்கள் உதவி வருவதென்றும் மேல் கொண்டு வேண்டியிருக்கும் தொகையை மற்றும் பல கனவான்களிடமிருந்து தோழர் ஈ.வெ. ராமசாமி வசூலித்துக்கொள்ள வேண்டியது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது. அதன்படி “விடுதலை” பத்திரிகையை தினசரியாக நடத்த ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கலக்டர் அவர்களுக்கும் அனுமதி அளிக்கும்படி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. அனேகமாய் இந்த தடவை தினசரி விஷயம் வெற்றி பெறலாம் என்றே கருதுகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 16.05.1937

பார்ப்பன விஷமம்

பார்ப்பன விஷமம்

சென்னை அரசாங்கத்தின் தற்கால மந்திரிகள் நிலவரியில் 100க்கு 25 வீதம் குறைத்து வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்து பொறாமைப்பட்ட காங்கிரஸ் – பார்ப்பனப் பத்திரிக்கைகள் சிறப்பாக “சுதேசமித்திரன்” “இந்த வருஷத்துக்கு இல்லையாம்” என்று தலைப்புக் கொடுத்து பரிகாசம் செய்திருந்தது பற்றி அப்பொழுதே கண்டித்து எழுதினோம். இந்த வருஷத்துக்கு குறைத்திருந்தாலும் “சென்ற வருஷத்துக்கு இல்லையாம்” என்று விஷமத்தனமாக குறை கூறித்தான் இருக்குமே ஒழிய குறைத்தது பற்றி ஒரு நாளும் திருப்தி அடையவோ நன்றி காட்டவோ முன்வராது. ஏனெனில் அது அந்த வகுப்பின் சுபாவமேயாகும். எப்படியாவது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை தடுப்பதையே நோக்கமாகக்கொண்டு குறை கூறி விஷமப் பிரசாரம் செய்யும் கூட்டம் ஒரு நாளும் யோக்கியமாய் நடந்துகொள்ள முடியாதல்லவா? இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பம்பாய் மந்திரிகளைப் பற்றியும் இதே மாதிரி விஷமப் பிரசாரம் செய்ய “சுதேசமித்திரன்” முன்வந்து விட்டது. அதாவது 14-5-37ந் தேதி மித்திரன் பத்திரிக்கையில் “மது விலக்கேனும் உண்டா” என்று தலைப்புக்கொடுத்து...

உலகில் பெரிய வெட்கக்கேடு

உலகில் பெரிய வெட்கக்கேடு

காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் வெற்றி பெற்றார்கள். பெற்ற பிறகு போர்டு சென்ட் ஜார்ஜ் கோட்டை வாயில்படியில் நின்றுகொண்டு கூப்பாடு போடுகிறார்கள். திருட்டுத்தனமாக கவர்னர்கள் வீட்டுக்கு போய் ஓலமிடுகிறார்கள். கோட்டை வாசல் திறந்து கிடந்தும் உள்ளே இருக்கும் கவர்னர் பிரபு கோட்டைக்குள் வாருங்கள் வாருங்கள் என்று அழைத்தும் போக முடியாமல் அழுகிறார்கள். வெற்றி பெற்ற “வீரர்கள்” எல்லோருக்கும் தலைவர் உள்பட உள்ளே போகவும் மந்திரி பதவி ஏற்கவும் சம்பளத்தை வாங்கி மூட்டை கட்டவும் அளவு கடந்த ஆசை இருந்தும் கவர்னர் பிரபுவுக்கும் எப்படியாவது இவர்கள் தலையில் மந்திரி பதவியை கட்டி அடித்து தனது காரியத்தை கஷ்டமில்லாமல் ஆக்கிக்கொள்ளலாம் என்கின்ற கருத்தில் தாராளமாய் இடம் கொடுத்தும் போலி வெட்கமும் ஜனங்களுக்குக் கொடுத்த இமயமலை போன்ற வாக்குறுதிகளும் பின்னே நின்று கொண்டு மின்சார சக்தி இழுப்பது போல் இழுக்கிறது. அதுவும் ஒரு அடி முன்னே போனால் இரண்டு அடி பின்னுக்கு இழுக்கிறது. இந்த விதமாக ஒரு காட்சி...

கவர்னர் பிரபு நடத்தை கண்டனம்

கவர்னர் பிரபு நடத்தை கண்டனம்

9.5.37ந்தேதி சென்னையில் நடந்த ஜஸ்டிஸ்கட்சி நிர்வாக சபைக் கூட்டத்தில் சென்னை கவர்னரின் நடத்தையை கண்டித்து ஒரு தீர்மானம் போடப்பட்டிருப்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். இதன் காரணம் மந்திரிசபை அமைப்பதில் கவர்னர் நடந்து கொண்ட மாதிரியேயாகும். இவ்விஷயத்தைப்பற்றி சென்ற மாதத்திலேயே நாம் கண்டித்து எழுதியிருந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதை கவனித்து ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக சபையானது கவர்னர் பிரபு நடத்தையைக் கண்டித்து தீர்மானம் செய்ததை நாம் மனப்பூர்வமாகப் பாராட்டி வரவேற்கிறோம். உண்மையிலேயே எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள், கெட்ட பெயர்கள், வீண் பழிகள், எதிரிகளின் விஷமப் பிரசாரம் ஆகியவைகளுக்கு ஆளாகிக்கொண்டும் இரட்டை ஆòயில் சர்க்கார் மெம்பர்களின் தொல்லைகளை சமாளித்துக்கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல் நிர்வாகத்தை நடத்தி வந்ததற்கு வேலை முடிவில் அரசாங்க தலைமை அதிகாரியான கவர்னர் பிரபு நடந்துகொண்ட மாதிரியானது மிகவும் வருந்தக் கூடியது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்தியாவில் உள்ள இதர 10 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாகாணங்கள் 5. அவ்வைந்து...

யார் வெள்ளைக்கார ஆட்சி  கொண்டுவந்தவர்கள்?

யார் வெள்ளைக்கார ஆட்சி  கொண்டுவந்தவர்கள்?

  காங்கிரஸ் சுலபத்தில் பதவிக்கு வராது காங்கிரஸ் அல்லாதவர்கள் தேசத்துரோகிகளா? தலைவரவர்களே! தோழர்களே!! இந்த பக்கத்துக்கு சுமார் 10, 15 வருஷங்களுக்கு முன் இரண்டு மூன்று தடவை வந்து உபன்யாசம் செய்திருக்கிறேன். அதன் பிறகு இப்போதுதான் உபன்யாசம் செய்கிறேன். அப்போதுள்ள எனது நண்பர்கள் பலரை இப்போது பார்த்து மகிழ்கிறேன். அப்போது எனக்களிக்கப்பட்ட பல வரவேற்பு பத்திரங்கள் போலவே இப்போதும் பல வரவேற்புப் பத்திரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அப்போது காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் என்னை பாராட்டிப் புகழ்ந்து பேசி வரவேற்பு வாசித்தார்கள். இப்போது பகுத்தறிவாளர்களும் சுயமரியாதைக்காரர்களும் ஆதிதிராவிட தோழர்களும் பாராட்டிப் புகழ்ந்து கூறி வரவேற்பு வாசித்தளித்திருக்கிறீர்கள். வரவேற்பு பத்திரங்களில் வழக்கம்போலவே என்னை வானமளாவப் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப் புகழ்ச்சிகளை நான் ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறேன். ஏனெனில் அவ்வளவு பெரும் புகழுக்கும் பாராட்டுதலுக்கும் நான் பொருத்தமுடையவன் அல்ல என்றே கருதுகிறேன். ஆனால் என் மீது உங்களுக்கு உள்ள அன்பும் என்னிடமிருந்து நீங்கள் பெறவிரும்பும் காரியங்களையும் தான் நீங்கள்...

ஜோலார்ப்பேட்டையில் மகுடாபிஷேகம்,  பள்ளிக்கூட ஆண்டு விழா,  வரதராஜ முதலியார் படத் திறப்பு விழா

ஜோலார்ப்பேட்டையில் மகுடாபிஷேகம், பள்ளிக்கூட ஆண்டு விழா, வரதராஜ முதலியார் படத் திறப்பு விழா

  தலைவரவர்களே! தோழர்களே! உலக சரித்திரத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறும் படியான இந்த முக்கியமான நாளில் எனது அன்பிற்குரிய தோழர் வி. பார்த்தசாரதி அவர்களது தந்தையாரும் எனது மதிப்பிற்குரிய நண்பருமான காலம் சென்ற வரதராஜ முதலியார் அவர்களது உருவப்படத்தை இந்தப் பள்ளியில் அலங்கரிக்கும் பெருமையை பெற்றதற்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இம்மாதிரியான உருவப்படங்களை வைப்பது என்பது பூஜைக்கு ஆகவோ பக்திக்கு ஆக நமது குற்றங்களை மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்வதற்கு ஆகவோ மோக்ஷமடைய ஒரு சுருக்கமான வழியை கடைப்பிடிப்பதற்கு ஆகவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மற்றென்னவென்றால் நம்மால் பாராட்டக் கூடியதும் நாம் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும்படியானதுமான பல அரும்பெரும் காரியங்களைச் செய்தவரும் பல அருங்குணங்கள் படைத்தவரும் என்று நாம் கருதும் திவ்விய புருஷர்களது உருவங்கள், பெயர்கள், நடத்தைகள் ஆகியவைகள் நம் முன் தோன்றும் போதெல்லாம் நம் ஞாபகத்துக்கு வரும்போதெல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாகவும் வழிகாட்டியாகவும் நம்பிக்கை...

நீடாமங்கலத்தில் சர்க்கார் தர்பார்

நீடாமங்கலத்தில் சர்க்கார் தர்பார்

“அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் காங்கிரஸ்காரர்கள் சட்டசபையிலும் இரண்டொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் வெற்றி பெற்றுவிட்டதால் அவர்களது தலையைத் திருகிவிட்டது. இன்னது செய்வது என்று தோன்றாமல் தலை விரித்தாடுகிறார்கள். மதுரையில் தெருக்கூட்டிகளுக்கு அவர்களுடைய விளக்குமாறுகளில் காங்கிரஸ் கொடி கட்டிக் கொடுத்து அதைப் பிடித்துக் கூட்டும்படி சேர்மென் உத்திரவிட்டு அந்தப்படியே விளக்குமாறு தோறும் கொடி கட்டி இருந்ததாம். மற்றும் பல இடங்களில் உற்சவங்களில் கோவில் முன் கருடஸ்தம்பம் என்பவைகளிலும் கொடி மரங்களிலும் காங்கிரஸ் கொடிகள் கட்ட முயற்சிப்பதோடு தேர்களிலும் ரதங்களிலும் கூட காங்கிரஸ் கொடி கட்டுவித்து ஊர்கோலம் நடத்தப்படுகின்றனவாம். இதற்கு அதிகாரிகள் அனுகூலமாயிருந்து ஆக்ஷேபணைகளை அடக்கி காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் நடத்த உதவி செய்கிறார்கள் என்றும் சேதிகள் வந்திருக்கின்றன. உதாரணமாக நீடாமங்கலம் ரத உற்சவத்தில் காங்கிரஸ்காரர்கள் கொடிகட்ட முயற்சித்ததும் சிலர் அதை தடுத்ததும் சர்க்கார் அதிகாரிகள் தடுப்பை நிராகரித்து கொடியை ரதத்தில் கட்டச்...