நீடாமங்கலத்தில் சர்க்கார் தர்பார்
“அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் காங்கிரஸ்காரர்கள் சட்டசபையிலும் இரண்டொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் வெற்றி பெற்றுவிட்டதால் அவர்களது தலையைத் திருகிவிட்டது. இன்னது செய்வது என்று தோன்றாமல் தலை விரித்தாடுகிறார்கள். மதுரையில் தெருக்கூட்டிகளுக்கு அவர்களுடைய விளக்குமாறுகளில் காங்கிரஸ் கொடி கட்டிக் கொடுத்து அதைப் பிடித்துக் கூட்டும்படி சேர்மென் உத்திரவிட்டு அந்தப்படியே விளக்குமாறு தோறும் கொடி கட்டி இருந்ததாம். மற்றும் பல இடங்களில் உற்சவங்களில் கோவில் முன் கருடஸ்தம்பம் என்பவைகளிலும் கொடி மரங்களிலும் காங்கிரஸ் கொடிகள் கட்ட முயற்சிப்பதோடு தேர்களிலும் ரதங்களிலும் கூட காங்கிரஸ் கொடி கட்டுவித்து ஊர்கோலம் நடத்தப்படுகின்றனவாம்.
இதற்கு அதிகாரிகள் அனுகூலமாயிருந்து ஆக்ஷேபணைகளை அடக்கி காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் நடத்த உதவி செய்கிறார்கள் என்றும் சேதிகள் வந்திருக்கின்றன. உதாரணமாக நீடாமங்கலம் ரத உற்சவத்தில் காங்கிரஸ்காரர்கள் கொடிகட்ட முயற்சித்ததும் சிலர் அதை தடுத்ததும் சர்க்கார் அதிகாரிகள் தடுப்பை நிராகரித்து கொடியை ரதத்தில் கட்டச் செய்ததையும் அதற்காக தடுக்கிறவர்களை கைதியாக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளப் போகும் விஷயத்தையும் சென்றவாரம் “குடி அரசி”லும் “ஜனநாயக”த்திலும் கண்டிருக்கலாம். இம்மாதிரி அதிகாரிகள் ஆதரவு இருந்தால் காங்கிரஸ்காரர்கள் எப்படி காலித்தனம் செய்யாமல் இருப்பார்கள்? மத சம்மந்தமான தேர் திருவிழாக்களில் அரசியல் கொடிகளைக் கட்டுவது என்பது எப்படி ஞாயமாகும் என்று கேட்கிறோம். அரசியல் சம்மந்தப்பட்ட ஒரு கòயார் தங்கள் கொடிகளை கட்டினால் மற்ற கòயார் தங்களின் கொடிகளைக் கட்ட முன் வரமாட்டார்களா? அப்பொழுது கலகமானால் யார் பொறுப்பேற்பது? நீடாமங்கலம் சம்பவத்துக்கு அவ்வூர் சப்மேஜிஸ்டிரேட் அய்யங்கார் பார்ப்பனரும் பொறுப்பாளி என்று தெரிகிறது. அதோடு நீடாமங்கலம் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டையும் கைதியாக்கி ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதிலிருந்து பிரிட்டிஷ் ஆò ஒழிந்து பார்ப்பனர் ஆò தலைவிரித்தாடுவதாகத் தான் பாமர மக்கள் கருதுவார்கள். இதற்கு அரசாங்கத்தார் வேண்டுமென்று இடம் கொடுக்கிறார்களா அல்லது அலôயமாய் இருக்கிறார்களா என்பது நமக்கு விளங்கவில்லை. நீடாமங்கலத்தில் காங்கிரசுக்கு விரோதமாய் இருக்கிறவர்களை இதற்கு முன்னும் அதிகாரிகள் கைதியாக்கி நடவடிக்கை நடத்தி கடசியாக அரசாங்கத்தார் வழக்கை பின்வாங்கிக் கொள்ள உத்திரவு போட்டார்கள். இப்போது மறுபடியும் ஸ்தல அதிகாரிகள் அதே காரியம் ஆரம்பித்து இருக்கிறார்கள். ஏதாவது ஒரு பிரமாதமான சமதான பங்கமோ அல்லது கலவரமோ ஏற்பட்ட பிறகுதான் சென்னை சர்க்காரோ மந்திரிகளோ இதில் பிரவேசிப்பார்கள் போல் தெரிகிறது. அப்படி ஏற்படும் பக்ஷம் அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பாளியாகும் என்பதை இப்போதே எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 09.05.1937