“விடுதலை” காலணா தினசரி
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சார்பாக சென்னையில் வாரம் இரு முறையாக நடந்துவந்த தமிழ் “விடுதலை” பத்திரிக்கையானது ஈரோட்டில் இருந்து தினசரி பத்திரிக்கையாக நடந்து வர சகல ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசாங்க அனுமதி ஒரு வாரத்திற்குள் கிடைத்து விடும். அனேகமாய் இம்மாதம் 3 வது வாரத்தில் பத்திரிக்கையை வெளியாக்க தீவிர முயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஏஜண்டுகளாய் இருக்க விருப்பமுள்ளவர்கள் உடனே தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 35 பத்திரிக்கைகளுக்கு குறைவாக ரயில்வே பார்சலில் அனுப்பப்படமாட்டாது. 3 மாதகாலத்துக்கு கம்மி இல்லாமல் பத்திரிக்கை ஒன்றுக்கு ஒரு பை. கமிஷன் கொடுக்கப்படும். தினம் 50 பத்திரிக்கைகள் வரை தருவிப்பவர்கள் 25 ரூபாய் டிப்பாசிட் கட்ட வேண்டும்.
~subhead
சந்தா விபரம்:-
~shend
தபால் மூலம் தெரிவித்துக் கொள்ளுபவர்களுக்கு முன் பணமாக
மாதம் ஒன்றுக்கு சந்தா 0-11-0
6 மாதத்திற்கு 4-0-0
ஒரு வருஷத்துக்கு 7-8-0
ஏஜண்டுகள் உள்ள இடத்தில் சந்தாதாரர்களாய் சேர விரும்புகின்றவர்களுக்கு முன் பணமாக
ஒரு பத்திரிக்கை 0-0-3
ஒரு மாதத்துக்கு 0-6-6
ஒரு வருஷத்துக்கு 4-8-0
விடுதலை விளம்பர விகிதம்
சர்க்கார், ரயில்வே, முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, கோர்ட்டு, கம்பெனி, பாங்கி ஆகியவைகள் சம்பந்தப்பட்டவைகளுக்கு பத்தி அங்குலம் 1-க்கு ரூ. 2-0-0. ஒப்பந்தமில்லாத தனிப்பட்ட வியாபார விளம்பரங்களுக்கு அங்குலம் 1-க்கு 1-0-0. ஒப்பந்த விளம்பரங்களுக்கு எழுதித்தெரிந்து கொள்ளலாம்.
ஈ.வெ. ராமசாமி,
“விடுதலை” ஆபீஸ், ஈரோடு.
குடி அரசு – அறிவிப்பு – 06.06.1937