பொன்மலை சுயமரியாதைச் சங்கம்

4-வது ஆண்டுவிழா

“நானொரு அபேதவாதிதான். நான் தினசரி அபேதவாதத்தைப் பற்றிப் பேசுகிறேன். எழுதுகிறேன். நான் பொருளாதார அபேதவாதத்தை விட சமூக சமத்துவத்தை – உயர்வு தாழ்வை ஒழிப்பதை முதல் அபேதவாத மாகக் கருதுகிறேன். பிறகு தான் பொருளாதார சமத்துவ அபேதவாதம். இது எனது அபிப்பிராயம். அபேதவாதத்தைப்பற்றி பலர் பலவிதமாக பாஷ்யம் கூறலாம். அதுவும் இடத்திற்கும் – சமயத்திற்கும் தக்கபடி அர்த்தம் செய்யும்படி அபிப்பிராயம் கூறலாம். ஆனால் நமது நாட்டில் பிறவி காரணமாக உயர்வு தாழ்வு கூறப்பட்டு முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு உள்ளவரை பார்ப்பான் பறையன் என்ற வித்தியாசமுள்ளவரை பொருளாதார சமத்துவம் பேசுவதால் எவ்வித பயனுமில்லை. இது என்னுடைய அபிப்பிராயம்.”

குறிப்பு: 25.07.1937 ஆம் நாள் பொன்மலை தொழிலாளர் சங்கத்திடல் அருகில் நடைபெற்ற பொன்மலை சுயமரியாதைச் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழாவில் “அபேதவாதத்தைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்ற கேள்விக்குப் பதில் அளித்து பேசியதன் சுருக்கம்.

குடி அரசு – சொற்பொழிவு – 01.08.1937

You may also like...