Category: குடி அரசு 1937

காங்கிரஸ்காரர்கள் அரசியல் ஞானம்

காங்கிரஸ்காரர்கள் அரசியல் ஞானம்

காங்கிரஸ்காரர்களுக்கு காலித்தனம்தான் தெரியுமே ஒழிய – பொய்யும் பித்தலாட்டமும் கூறி தேர்தலில் வெற்றி பெறத்தான் தெரியுமே ஒழிய – தேர்தல்களில் தந்திரமாய் பார்ப்பனர்களை 100க்கு 40, 50 வீதம் புகுத்திக்கொள்ளத்தான் தெரியுமே ஒழிய அவர்களுக்கு அரசியல் ஞானமோ பொதுஜன நன்மை பொறுப்போ சிறிதும் கிடையாது என்று பல தடவை எழுதி வந்திருக்கிறோம். அதற்கு உதாரணங்களும் அவ்வப்போது எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். இப்போது மற்றுமொரு உதாரணம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது சென்னை கார்ப்பரேஷனுக்கு தேர்தல் நடந்து கார்ப்பரேஷனில் காங்கிரஸ்காரர்கள் அமர்ந்து இன்றைக்கு 6, 7 மாத காலமாகிறது. அப்படி இருந்தும் இதுவரை காங்கிரஸ்காரர்கள் எவருக்கும் கார்ப்பரேஷன் வரவு செலவு கணக்கே இன்னதென்று தெரியவில்லை என்பதும் அவர்களில் எவரும் தெரிந்து கொள்ள இதுவரை ஆசைப்பட வில்லை என்பதும் காங்கிரஸ் பத்திரிகைகளாலேயே தெரியவருகிறது. அதாவது கார்ப்பரேஷனுக்கு 2 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் வட்டி நட்டப்படும்படியான பணம் சும்மா தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இந்த விஷயம் இப்போதுதான் அதாவது...

தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை  இப்போதுதான் புத்தி வருகிறது

தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை இப்போதுதான் புத்தி வருகிறது

  தாழ்த்தப்பட்ட மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏய்த்து விட்ட விஷயமாய் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களில் எவ்வளவோ கல்வி அறிவுள்ளவர்களும் உலக ஞானமுள்ள வர்களும் இருந்தாலும் சமயத்தில் மோசம் போகும் புத்தி அவர்களுக்கு வெகுகாலமாகவே இருந்து வருகிறது. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுடன் வாது செய்து வெற்றி பெற்றதின் பலனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு என்று சட்டசபையில் ஒரு அளவு ஸ்தானங்கள் தனித் தொகுதி மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதை காந்தியார் பட்டினி கிடப்பதாகப் பாசாங்கு செய்து அச் சமூக மக்களை ஏமாற்றி தனித் தொகுதி உரிமையை பாழாக்கி அடிமை உரிமைக்கு ஆளாகச் செய்து விட்டார். அப்பொழுதே தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பத்காருக்கு விஷயங்களை விளக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று அதாவது ஒரு காந்தியாரைவிட 6...

கண்டன தீர்மானம்

கண்டன தீர்மானம்

இப்போது காங்கிரஸ்காரர்கள் தாங்கள் மந்திரி வேலையை ஏற்றுக்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தை தங்கள் முட்டாள் தனத்தினால் தவற விட்டு விட்டு மந்திரி பதவி ஏற்றுக்கொண்டவர்கள் மீது பாய்வதும் அவர்களை வைவதுமான இழிவு வேலையில் இறங்கி இருப்பதோடு ஆங்காங்குள்ள பார்ப்பனர்களையும் அடிமைகளையும் பிடித்து புது மந்திரிகளை கண்டித்து தீர்மானம் போட்டு நிறைவேற்றப்பட்டதாக விளம்பரம் செய்து பிரசுரிக்கச் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டு அந்தப்படியே பல தீர்மானங்கள் செய்வதாக பிரசுரித்தும் வருகிறார்கள். இது ஒரு இழிவான தந்திரமேயாகும். வக்கீல்கள் பெரிதும் பார்ப்பனர்களாக இருப்பதாலும் அவர்களுக்கும் பாமர மக்கள் மீது செல்வாக்கு இருப்பதாலும் உள் நாட்டு விரோதத்தால் சுலபத்தில் அடிமைகள் கிடைப்பதாலும் இம்மாதிரி காரியங்கள் செய்ய நினைக்கப் பார்ப்பனர்களுக்கு செளகரியமிருக்கிறது. ஆனபோதிலும் நாம் அதற்குப் பயப்படவில்லை. ஆனால் பொது ஜனங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம். அதாவது ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனரல்லாத சங்கங்களும் அனுதாபிகளும் சுயமரியாதைச் சங்கக்காரர்களும், காங்கிரஸ்காரர்கள் பொய்யும் புளுகும் பேசி பாமர மக்களை ஏமாற்றி...

மந்திரிகள் வேலைத் திட்டம்

மந்திரிகள் வேலைத் திட்டம்

சென்னை மாகாண மந்திரிகள் தங்கள் வேலைத் திட்டத்தில் வெற்றி பெற்று விட்டதாகத் தெரிகிறது. அதாவது நிலவரியில் மொத்தத்தில் 100-க்கு 25 வீதம் – ரூபாய்க்கு கால் ரூ. வீதம் குறைத்து விட திட்டம் போட்டு வரவு செலவு கணக்கு சரிகட்டிக் காண்பித்து கவர்னரிடம் சம்மதம் பெற்று விட்டதாகச் சேதி வெளியாகி இருக்கிறது. இது ஒரு நல்ல காரியம்தான். இதன் மூலம் குடியானவர்களுக்கு அதாவது பூமி உடையவர்களுக்கு இந்த மாகாணத்தைப் பொறுத்த வரை M 1-க்கு 75 லக்ஷ ரூபாய் லாபம் ஏற்படலாம். இது தவிர குடியானவர்களின் கடன்களைத் தீர்க்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிவைக்கத் தீர்மானித்து அதற்கும் சம்மதம் பெற்று விட்டதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு நல்ல காரியம்தான். ஏனெனில் குடியானவர்கள் வரிக்கொடுமையை விட கடன் கொடுமையிலேயே வட்டிக் கொடுமையிலேயே அதிக கஷ்டப்படுவதோடு பொது செல்வமும் பாழாகின்றது என்பதோடு கோர்ட்டுகள் நிலைக்கவும் பார்ப்பன வக்கீல்கள் பிழைக்கவும் பார்ப்பன குமாஸ்தாக்கள் கொள்ளை அடிக்கவுமான...

மும்மூர்த்திகள் கண்டனம்

மும்மூர்த்திகள் கண்டனம்

அகில இந்திய முஸ்லிம் தலைவர் ஜனாப் ஜின்னாவும், முஸ்லீம் மிதவாதத் தலைவர் ஸர். முகமது யாகூபும், ஆதிதிராவிடர் தலைவர் திவான் பகதூர் ஆர். ÿநிவாஸனும் வெளியிட்டுள்ள மூன்று அறிக்கைகள் இன்றையப் பத்திரிகையில் வெளிவருகின்றன. அம்மூன்று அறிக்கைகளையும் முஸ்லீம்களும் பார்ப்பனரல்லாத ஹிந்துக்களும், ஒடுக்கப்பட்டவர்களும், கிறிஸ்தவர்களும் ஊன்றிப் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். காங்கரஸ் – இந்திய விடுதலையின் பேரால் – இந்தியாவுக்கும் மைனாரட்டி சமூகங்களுக்கும் செய்துவரும் தீமைகளை அம்மூன்று அறிக்கைகளும் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. அரசியல் விஷயங்கள் பலவற்றில் அம்மூன்று தலைவர்களும் மாறுபட்ட அபிப்பிராய முடையவர்களா யிருந்தும் காங்கரஸ் விஷயத்தில் அம்மூவரும் ஒற்றுமையான அபிப்பிராய முடையவர்களாயிருப்பது முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம். காந்தி காங்கிரசில் ஆதிக்கம் பெற்றது முதல் காங்கிரஸ் ஒரு ஹிந்து ஸ்தாபனம் ஆகிவிட்டதென்று ஸர். முகமது யாக்கூப் கூறுகிறார். தென்னாட்டைப் பொறுத்த வரையில் காங்கரஸ் ஒரு பார்ப்பன அக்கிரகாரமாக இருப்பது வெளிப்படை. பிரிட்டிஷ் சர்க்கார் தயவினால் விடுதலை பெற்ற சமூகங்களை காங்கரஸ் பேரால் பார்ப்பனர்களுக்கு...

ஈரோடு முனிசிபல் சந்தைப்பேட்டை  அபாய சம்பவம்

ஈரோடு முனிசிபல் சந்தைப்பேட்டை அபாய சம்பவம்

  – விசிட்டர் ஈரோடு முனிசிபாலிட்டியார் சென்ற வாரம் கூடிய தங்கள் மீட்டிங்கில் சந்தைப்பேட்டை அபாயத்துக்கு ஆளானவர்கள் சகாய நிதிக்கு ஆக 5000 ரூபாய் ஒதுக்கிவைப்பது என்று தீர்மானித்து இருக்கிறார்கள். சேர்மென் அவர்களும் கமிஷனர் அவர்களும் கவுன்சிலர்களும் இது விஷயத்தில் மிக்க அனுதாபம் காட்டிப் பேசியதோடு மிகவும் கஷ்டப்பட்டு கஷ்ட நிவாரண வேலையும் செய்தும் வருகிறார்கள். சர்க்கார் டாக்டரும் மிக்க கவலையோடு வேலை செய்து வருகிறார். இவற்றை எல்லா மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். விஷயம் இப்படி இருக்க, தந்திரத்தில் கவுன்சிலர்களாக ஆசைப்படும் சிலர் இவற்றிற்கு மாறாக பொய் நோட்டீசுகளும் பித்தலாட்ட விளம்பரங்களும் முதலைக்கண்ணீர் அழுகைகளும் கொண்டு ஊசியை மலையாக்கிப் பேசி மக்களை மயக்கப் பார்க்கிறார்கள் என்றாலும் முடிவில் அவர்கள் நிலை பரிதாபப்படக் கூடியதாகத்தான் இருக்கும் என்று இப்போதே கூறிவிடுகிறேன். பொது ஜனங்கள் பேரால் பண வசூல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் எனக்குப் பொறாமை இல்லை. சிலருக்கு அவசரமாய் சாப்பாட்டுக்கு வழிகள் வேண்டியிருக்கிறது. “ஆத்துத் தண்ணீரை...

பார்ப்பனரல்லாதாருக்குப்  பத்திரிகை இல்லை  அறிக்கை

பார்ப்பனரல்லாதாருக்குப்  பத்திரிகை இல்லை அறிக்கை

  “ஜனநாயகம்” நின்று விட்டது. “திராவிடன்” மறைந்து 4, 5 வருஷங்கள் ஆகிவிட்டன. “தமிழ்நாடு”ம் அனேகமாய் மறைந்து விட்டது என்றே சொல்லலாம். “விடுதலை” இப்பவோ பின்னையோ என்று இருக்கிறது. மற்றும் வாரப் பத்திரிக்கைகள் பலவற்றில் பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தைக் குறி வைத்து நடத்தப்பட்டு வந்தவைகள் பல ஒழிந்துவிட்டன. இரண்டொன்று பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படுகின்றன என்றாலும் அவைகள் பார்ப்பனரல்லாதார் குறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வகுப்புவாதம் என்று எழுதி பார்ப்பனர்களுக்கு அடிமையாகவே ஆகி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வையும் வேலையில் ஈடுபட்டு வாழவேண்டிய நிலையில் இருக்கின்றன. மற்றபடி வேறு எங்காவது ஒன்று இரண்டு வாரப்பத்திரிக்கையோ மாதப் பத்திரிக்கையோ இருந்தால் அவைகளும் காங்கிரஸ் பத்திரிகையாகத்தான் இருந்து வருகின்றன. “விதிவிலக்காக” “குடி அரசு”, “நகரதூதன்”, “விடுதலை” முதலாகிய பத்திரிகைகள் இருந்த போதிலும் அவைகள் இன்று வாரப்பத்திரிக்கைகளாக இருக்கின்றனவே ஒழிய தினப் பத்திரிகை இன்று பார்ப்பனரல்லாதார் குறைகளை நீக்கவோ நாட்டு நடவடிக்கைகளின் உண்மையை எடுத்துச் சொல்லவோ, ஒன்று கூட இல்லவே...

காங்கிரஸ் பூச்சாண்டி

காங்கிரஸ் பூச்சாண்டி

காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய மானங்கெட்ட பிகுவைக் காட்டிக்கொள்வதற்கு – அதாவது பொது ஜனங்களை ஏமாற்ற ஏனெனில் இதற்கு முன் பல தடவைகளில் சட்டசபைகள் “கழுதைகளும் நாய்களும் போகக்கூடியவை” என்றும் சட்ட சபைகளினால் ஒரு காரியமும் செய்ய முடியாதென்றும் கூப்பாடு போட்டுக்கொண்டு திரிந்ததோடு இரண்டு ஒரு சமயங்களில் சட்டசபையில் இருந்தே காலஞ்சென்ற மோதிலால் நேரு போன்றவர்கள் “சட்டசபைக்கு வந்ததே முட்டாள்தன” மென்றும் “இப்போதுதான் புத்தி வந்தது” என்றும் சொல்லி “வீரகர்ஜனை” செய்துவிட்டு வெளியேறி வந்தும், சமீபகாலமாக 2 வருஷத்திற்கு மேல் இந்திய சட்டசபையில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி பலம் இருந்தும் ஒரு காரியமும் செய்ய முடியாமல் போய் அறிவுள்ள ஓட்டர்கள் முன் தலை குனிய நேர்ந்தும் இருப்பவைகளான பல காரணங்களால் இப்போது காங்கிரசுக்காரர்கள் சட்டசபைக்குப் போனதற்கும் மந்திரி பதவி ஏற்று சம்பளம் பெற்று அதிகாரம் செய்வதற்கும் ஆசைப்பட்ட பிறகு பொதுஜனங்களுக்கு ஏதாவது ஒரு ஏமாற்றுதலான காரியம் செய்யாவிட்டால் தங்களை பழையபடி அதாவது தாங்கள் முன் சொன்னபடி...

காங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை  ஏற்பதும் – மறுப்பதும் ஒன்றே  ஆச்சாரியார் ஆத்திரம்

காங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை ஏற்பதும் – மறுப்பதும் ஒன்றே ஆச்சாரியார் ஆத்திரம்

  ~cmatter தோழர்களே! எலக்ஷன் முடிந்த இந்த இரண்டு மாதகாலமாய் எவ்வளவோ இடத்துக்கு நாங்கள் அழைக்கப்பட்டும் பொதுக் கூட்டங்களில் 2, 3 – மாதத்துக்கு பேசக்கூடாது என்கின்ற கருத்தின் மீது பேச மறுத்துவிட்டோம். சமுதாய விஷயமாகவே பேசினோம். இங்கு (பூவாளூரில்) இதற்கு ஆகவே எங்களை வரவழைத்து ஆடம்பர ஊர்வலங்கள் செய்து பல வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக்கொடுத்து அரசியலைப்பற்றி பேச வேண்டுமென்று கட்டளை இட்டு இருக்கிறீர்கள். ஏதோ எனது அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் தயவு செய்து பொறுமையாய்க் கேட்டு நன்றாகச் சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். வெறுப்பாகவும் கருதி விடாதீர்கள். தற்கால அரசியல் நிலை தற்கால அரசியல் என்றால் எதைப் பேசுவது? இன்று மிக்க பிரபலமான பேச்சாய் இருக்கும் அரசியல் காங்கிரஸ் வெற்றியும் ஆணவப் பேச்சும் அவர்களது கூப்பாடுகளும் விஷமப் பிரசாரங்களுமல்லாமல் வேறு எதைச் சொல்லுவது என்பது எனக்கு விளங்கவில்லை. எலக்ஷனில் தோல்வியுற்றதாகக் கருதிய ஜஸ்டிஸ் கட்சியார்...

இத்தொல்லை என்று ஒழியும்?

இத்தொல்லை என்று ஒழியும்?

இன்று இந்நாட்டில் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் முதலாகிய துறைகளின் சீர்திருத்தம் முழுவதும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார், இந்துக்கள் – முஸ்லீம்கள் என்கின்ற வகுப்பு சச்சரவுகளாகவும் மதக்கலவரங்களாகவும் இருந்து வருகிறது. சென்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி – தமிழ்நாட்டு காங்கிரஸ் தத்துவம் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு போரிலும் வடநாட்டு காங்கிரஸ் தத்துவம் பெரிதும் இந்து முஸ்லீம் என்கின்ற மதப்போரிலும் இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் காங்கிரசுக்கும் காங்கிரஸ் எதிர்ப்புக் கòக்கும் உள்ள பேதத்தின் காரணம் 100க்கு 90 பாகம் வகுப்புக்கும் மதத்துக்கும் பாதுகாப்புக்கும் சுதந்திரமும் சமஉரிமையும் கேட்கும் பிரச்சினையே முக்கியமாக இருக்கிறது. இவற்றை மறுப்பதே தேசியம் – தேசாபிமானம் என்று காங்கிரஸ் சொல்லுகிறதே ஒழிய வேறு கொள்கை எதையும் தேசாபிமானத்துக்கு அறிகுறியாய் சொல்லுவதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்பிரிவினையானது பார்ப்பனர்களை ஒன்று சேர்த்து கட்டுப்பாடாய் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை அழுத்தி வருகிறது. காங்கிரஸ் தேசாபிமானம் என்பதின் பயனாய் வர வர...

ஈரோடு சந்தைப்பேட்டை  அபாய சம்பவம்  உண்மை விபரம்

ஈரோடு சந்தைப்பேட்டை  அபாய சம்பவம் உண்மை விபரம்

  “எதிர்பாராத அபாயம்” என்னும் தலைப்பில் சென்ற வாரம் ஈரோடு சந்தைப்பேட்டையில் வேலை முடியாத கொட்டகையில் ஜனங்கள் புகுந்து தூண்களில் சாய்ந்ததால் கொட்டகை சாய்ந்து ஆபத்து ஏற்பட்டதைப்பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றிய உண்மையை சரிவர விசாரித்ததில் கீழ்க்கண்ட சரியான புள்ளி விபரம் கிடைத்திருக்கிறது. அதாவது சந்தைப்பேட்டையில் கொட்டகை சாய்ந்ததில் அதற்குள் சிக்கி காயப்பட்டவர்கள் மொத்தம் 55 பேர்கள் என்றும், காங்கிரஸ்காரர் களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் செய்த விஷமப்பிரசாரப்படி 200 பேர்கள் அல்ல என்றும், மற்றும் அந்த இடத்தில் மடிந்தவர்கள் 4 பேர்களே ஆவார்கள் என்றும், காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் செய்யும் குறும்புத்தனப் பிரசாரப்படி 20 பேர்கள் அல்ல என்றும், ஆஸ்பத்திரியில் சேர்த்துக்கொண்டவர்கள் 35 பேர்கள் என்றும் மீதிபேர்கள் தாங்கள் சொந்த சிகிச்சை செய்து கொள்ளுகிறார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களில் 4 பேர்கள் தான் இறந்தவர்கள் என்றும், அடிபட்டு வெளியூருக்குப் போய்விட்டவர்களில் சுமார் 4 அல்லது 5 பேர்களே இறந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது....

துறையூரில் சுயமரியாதைப் பிரசாரம்  கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்

துறையூரில் சுயமரியாதைப் பிரசாரம் கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்

~cmatter எந்தவிதமான கேள்விக்கும் பதில் சொல்லி பொதுமக்களை திருப்திப்படுத்தத்தான் வந்திருக்கிறோம் என்றும், காங்கிரஸ்காரர்களைப் போன்று பதில் சொல்லாது கூட்டத்தை கலைத்துவிட்டுப் போக வரவில்லை என்றும், தேசபக்தி என்பது தற்கால காங்கிரஸ் நவீன பக்தர்களுக்கு மட்டும் சொந்தமல்லவென்றும், ராஜகோபாலாச்சாரியார் கூட்டம் நாளைய தினம் சுயராஜ்யம் வருகிறது என்றால் நான் இன்றைய தினமே சுயராஜ்யம் வரவேண்டும் என்று சொல்லுகிறேன் என்றும், ஆனால் இன்று சுயராஜ்யம் கிடைக்குமானால் பார்ப்பனரல்லாதாரின் உரிமைக்கு யார் உத்திரவாதி என்றும், இன்று மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் ஆதிக்கம் செலுத்தும் பிராமணக் கூட்டம் காங்கிரசின் பேரால் நம்மீது ஆதிக்கம் வகிக்க சட்டசபையில் 160 ஸ்தானங்களைக் கொண்ட கட்சியில் 49 பார்ப்பனர்கள் ஆதிக்கம் வகிக்கவும் 40 ஸ்தானங்களைக் கொண்ட சென்னை கார்ப்பரேஷனில் 11-பார்ப்பனர்கள் ஆதிக்கம் வகிக்கிறார்கள் என்றும் பதவி ஏற்று மக்களுக்கு நன்மை செய்வதாக ஓட்டுப்பெற்று இப்பொழுது உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்திகள் போன்று விழிக்கிறார்கள் என்றும், திரும்பவும் தேர்தல்...

ஆச்சாரியாருக்கு பைத்தியம்

ஆச்சாரியாருக்கு பைத்தியம்

ஏமாற்ற மடைந்தவர்கள், சொத்தை இழந்தவர்கள் முதலியவர்களுக்கும் புத்தி சுவாதீனமற்று பைத்தியம் பிடிப்பது வழக்கம். அதிக புத்திசாலி என்பவர்களுக்கும் கூறுகெட்டு மூளை கலங்கி பைத்தியம் பிடிப்பதும் வழக்கம் என்று உடல்கூறு வல்லவர்கள் சொல்லுவதுண்டு. நமது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அதை மெய்ப்பிக்கிறார். தான் எதிர்பார்த்து திட்டம் போட்டு வீடு முதலானவைகள் வாடகைக்கு அமர்த்தத் தெரிந்தெடுத்து “அடுத்த நடை கவர்னர் வீட்டுக்குப் போகவேண்டியதுதான் பாக்கி, வரும்போது மந்திரி தாக்கீது பெற்று வரப்போகிறோம்” என்று மனப்பால் குடித்து ஆசையோடு – பேராசையோடு எதிர்பார்த்திருந்த மந்திரி வேலை கிடைக்கவில்லை என்று திடீரென்று ஏற்பட்டவுடன் மூளை கலங்கி கண்டபடி உளற ஆரம்பித்துவிட்டார். இந்த நிலை மாறாதிருக்குமானால் கூடிய சீக்கிரம் அவரை பைத்தியகார ஆஸ்பத்திரியில் தான் பார்க்க நேரும் என்றே கருதுகிறோம். அவரது வாயும் நாக்கும் அறிஞர்கள் மிகவும் வெறுக்கத்தகுந்த தன்மைக்கு வந்து விட்டன. சத்தியமூர்த்தி, குப்புசாமி, உபயதுல்லா நிலைக்கு இறங்கிவிட்டார். இதன் காரணம் எல்லாம் ராமாயணக் கதையில் ராமனின் அயோக்கியத்தனத்தை...

அனாமத் மந்திரிகள் வேலைத் திட்டம்

அனாமத் மந்திரிகள் வேலைத் திட்டம்

தற்கால மந்திரி சபையை நாம் அனாமத் மந்திரி சபை என்று ஏன் சொல்லுகிறோம் என்பது வாசகர்கள் அறிந்ததே யாகும். ஏனெனில் இவர்களுக்கு ஆயுள் இவ்வளவு என்று குறிக்கப்படவில்லை. மேலும் இவர்கள் பொது ஜனங்களின் பொது நன்மைகள் என்று பொதுவாய் சொல்லப்படுபவைகளைத் தவிர ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட எந்த கொள்கையையோ ஏற்கனவே உள்ள எந்தக் கò சார்பையோ உடையவர்கள் அல்ல. தாங்களாகவே ஒரு நெருக்கடியை சமாளிக்க ஒப்புக்கொண்டவர்கள் என்பதைத் தவிர எவ்வித வேறு கவலைகொண்டும் நியாயம் கொண்டும் அப்பதவிகளை ஒப்புக்கொண்டவர்களும் அல்ல. அதோடு கவர்னர் பிரபு எந்த நிமிஷத்தில் 6 பேர்களையும் கூப்பிட்டு ரைட் எபவுட்டர்ன் மார்ச் – (பின்னால் பக்கம் திரும்பி நட) என்றால் பேசாமல் வெளியில் நடக்க வேண்டியவர்களே. ஆதலால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு நிர்ப்பந்தம் இல்லாமல் அனாமத்தாய் இருந்தாலும் இம்மந்திரிகளுக்கு பொது நாணையத்தை உத்தேசித்து பொறுப்பு இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இஷ்டப்பட்டால் இவர்களால் நன்மையான காரியம்...

கட்சி மாறுதல்

கட்சி மாறுதல்

இப்போது பலர் கட்சிவிட்டு கட்சி மாறுகிறார்கள். அதிலும் பல கட்சிகளை விட்டு காங்கிரசில் பலர் வேகமாய்ச் சேருகிறார்கள். உத்தியோகம் பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்தால்தான் கிடைக்கும் என்கின்ற எண்ணத்தை சிலருக்கு சமீபத்தில் நடந்த முட்டாள் தேர்தல் காட்டிவிட்டதால் அவசரத்தில் யார் யாருக்குப் பதவிகள் வேண்டுமோ அவர்களும் பதவிகள் இல்லாவிட்டால் யார் யாருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்காதோ அவர்களும் வாழ்வுக்கும் வேறு யோக்கியமான வழியில்லாதவர்களும் இப்போது வேகமாகக் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். சிலர் பட்டத்தையும் விடுகிறார்கள். தரித்திரம் வந்த பல குடும்பங்கள் தங்களது உயர்ந்த விலையுள்ள பட்டுச் சேலைகளை எவ்வளவு புதிதாயும் நல்லதாயும் இருந்தாலும் பகுதி விலைக்கும் கால் விலைக்கும் விற்று குடும்பம் நடத்தத் துணிவது போல் தங்கள் பட்டங்களை இப்போது அவசர விலைக்கு விற்று வருகிறார்கள். இச்செய்கை அவரவர்களின் தரித்திர நிலைமையைக் காட்டுகிறதே தவிர இதனால் எவ்வித உயர்குணமும் ஏற்பட்டு விடவில்லை. தோழர் சீதாராம ரெட்டியார் ராவ்பகதூர் பட்டத்தை விட்டார். எப்போது...

எதிர்பாராத அபாயம்

எதிர்பாராத அபாயம்

ஈரோடு முனிசிபல் வாரச் சந்தை நடைபெறும் பேட்டையில் 10 அடி அகலத்தில் 200 அடி நீளத்தில் சில்லறை வியாபாரிகளுக்காக ஓட்டுக் கொட்டகை போடுவதற்கான வேலைகள் ஆரம்பித்து வேலை நடந்து கொண்டிருந்ததானது 21-4-37ந்தேதி தூண் நிறுத்தி வெட்டுக்கை போட்டு ரீப்பர் அடித்து ஓடுகள் மேலேற்றி மேயாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22-4-37ந் தேதி சந்தை கூட வேண்டிய நாள் ஆனதால் அன்று வழக்கம் போல் சந்தை கூடியது. அன்று மாலை 5 மணிக்குப் பெரிய காற்றும் மழையும் வந்ததால் மேல் குறிப்பிட்ட சரிவர முடிவடையாத கொட்டகையின் கீழ் ஜனங்கள் போய் தங்கினார்கள். பூரா வேலை முடியாமல் ஒருபுறம் ஓடு பாரம் ஏற்றப்பட்டு மறுபுறம் பாரமில்லாமல் இருந்த கொட்டகை காற்றினால் சாய்ந்து விட்டது. அது சமயம் அதற்குள் இருந்த ஜனங்கள் அதில் அகப்பட்டுக்கொண்டார்கள். இதன் பயனாய் சுமார் 150 பேர்களுக்கு மேல் பலத்த காயமடைய வேண்டியதாகிவிட்டது. காயமடைந்தவர்களுக்கு முனிசிபல் கமிஷனரும், பொதுஜனங்களும், இவ்வூரில்...

தலைவிதி  சாஸ்திரிகள் அழுகை

தலைவிதி சாஸ்திரிகள் அழுகை

  சென்னை தோழர் சி. விஸ்வநாத சாஸ்திரியார் சென்னை றெளலட் சாஸ்திரிகள் என்று உலகப் பிரசித்தப் பெயர்பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜி சி. குமாரசாமி சாஸ்திரிகளின் சகோதரர். (இவர் கூட ஒருதரம் கொஞ்சநாள் ஹைகோர்ட் ஜட்ஜி வேலை பார்த்ததாக ஞாபகம், அது எப்படியோ போகட்டும்) இவர் 20.4.37ந் தேதி “இந்து” பத்திரிகைக்கு ஒரு சேதி அனுப்பியிருக்கிறார். அதாவது கல்வி இலாக்கா காலேஜúகளில் படிக்கும் பிள்ளைகள் 100க்கு 60 பேர் பார்ப்பனர்கள் என்றும் பிள்ளைகளைச் சேர்க்கும் கமிட்டிக்கு 4 காலேஜ் கமிட்டிகளுக்கும் பார்ப்பனர்களில் ஒருவரைக்கூட சர்க்காரார் மெம்பராகப் போடவில்லை என்றும் இரட்டை ஆட்சி காலத்திலாவது (அதாவது ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலாவது) ஒவ்வொரு கமிட்டிக்கு ஒவ்வொரு பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்றும் இப்போது அதுகூட இல்லையென்றும் இப்போதுள்ள மந்திரிகள் ஜஸ்டிஸ்கட்சி மந்திரிகளாகவும் அல்லது பார்ப்பனர்களின் எதிரிகளான மந்திரிகளாகவுமே இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் சூசனை என்னவென்றால் பார்ப்பனர்கள் எல்லாம் இந்த மந்திரிகளுக்கு விரோதமாக இருந்து இவர்களை...

சுயராஜ்யமா? பார்ப்பன ராஜ்யமா?

சுயராஜ்யமா? பார்ப்பன ராஜ்யமா?

சென்னையில் இம்மாதம் 10ந் தேதி சனிக்கிழமை நடந்த கார்ப்பரேஷன் எலக்ஷனில் காங்கிரசால் நிறுத்தப்பட்ட அபேக்ஷகரான தோழர் ஜகநாததாஸ் தோல்வி அடைந்து விட்டார். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆரம்ப கர்த்தாவாகவும் தூணாகவும் இருந்த தோழர் நடேச முதலியார் அவர்கள் தம்பி தோழர் தாதுலிங்க முதலியார் வெற்றி பெற்று விட்டார். ஓட்டு விபரம் தாதுலிங்க முதலியாருக்கு 470 ஓட்டுகளும் காங்கிரஸ் அபேக்ஷகருக்கு 289 ஓட்டுகளுமாய் கிடைத்து இருக்கின்றன. ஜெயிப்பும் தோல்வியும் அபேக்ஷகர்கள் யோக்கியதையையும் ஓட்டர்கள் யோக்கியதையையும் நிச்சயிக்க சரியான கருவி ஆகிவிடும் என்று நாம் கருதுவதில்லை. வேறு அநேக தேர்தல்களில் அயோக்கியர்களும் தகுதி அற்றவர்களும் வெற்றிபெற்று விடுகிறார்கள். இப்போது எலக்ஷன் மோகம் கொண்டவர்கள் பெரிதும் எலக்ஷனில் வெற்றி பெறுவதன் மூலம் வயிறு வளர்க்கலாம் – வாழலாம் என்கின்ற சுயநலக்காரர்களே. அதுவும் ஓட்டர்கள் ஆவதற்கு நியாயமான யோக்கியதை இல்லாமல் குறைந்த அளவு யோக்கியதையை நாணயக்குறைவாய் பயன்படுத்தி ஓட்டர் லிஸ்டில் புகுந்து கொள்ளுகிறவர்களே பெரிதும் தேர்தல்களில் போட்டியும் கவலையும்...

புதிய மந்திரிகள்

புதிய மந்திரிகள்

இன்று நமது சென்னை அரசாங்கத்தில் உள்ள மந்திரிகள் அறுவரும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அல்ல என்பதை ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். இன்றும் நமது அபிப்பிராயம் அதுவேயாகும். ஆனால் அவர்களுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்றும் அவர்களால் எவ்வித காரியமும் எதிர்பார்க்க மக்களுக்கு உரிமை இல்லை என்றும் யாரும் சொல்லிவிட முடியாது. அவர்கள் நமது வரிப்பணத்தில் இருந்தே சம்பளம் பெறுகிறார்கள். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் மக்களுக்கு எவ்வளவு பொறுப்பாளிகளோ அவர்களிடமிருந்து மக்கள் எவ்வளவு எதிர்பார்க் கிறார்களோ அவ்வளவும் இந்த மந்திரிகளிடமும் எதிர்பார்ப்பது தவறல்ல, அதனாலேயே இந்த மந்திரிகளை ஆதரிக்கவோ வரவேற்கவோ நாம் கட்டுப்பட்டவர்கள் என்று யாரும் கருதிவிடமாட்டார்கள். பொதுவாக நோக்குமிடத்து இம் மந்திரிகளை பதவியில் அமர்த்தக் காரணம் அரசியல் சட்டத்தில் கண்டுள்ள நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டும் அதன் கருத்துக்குக் கட்டுப்பட்டும் காங்கிரஸ் மந்திரிகள் நடந்து கொள்ளுவார்கள் என்கின்ற விஷயத்தில் சர்க்காருக்கு உள்ள அவநம்பிக்கையாலேயே அவர்கள் கேட்ட சட்டமற்ற வாக்குறுதியை சர்க்கார் மறுத்து இந்த மந்திரிகளை...

சட்டசபை மெம்பர்களும் ஓட்டர்களும்

சட்டசபை மெம்பர்களும் ஓட்டர்களும்

சட்டசபை மெம்பர்கள் அதிகப்படியான ஓட்டுகளால் தெரிந்தெடுக்கப் பட்டார்கள் என்பதில் யாதொரு ஆட்சேபணையுமில்லை. ஆனால் ஓட்டர்களுக்கு மெம்பர்கள் எந்த விதத்திலாவது ஜவாப்தாரியென்றோ மெம்பர்களுக்கு ஓட்டர்கள் எந்த விதத்திலாவது ஜவாப்தாரியென்றோ சொல்லிவிடமுடியாது. ஏனெனில் சட்டசபைக்கு போய் நாங்கள் இன்னது செய்கிறோம் என்று எவ்வித பொறுப்புள்ள வாக்குறுதியும் மெம்பர்கள் ஓட்டர்களுக்கு கொடுக்கவில்லை. ஓட்டர்களும் சட்டசபை மெம்பர்களை இன்னது செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு ஓட்டு செய்யவில்லை. ஏதோ இருவருக்கும் புரியாததும் சாதாரணத்தில் முடியாததுமான ஆகாயக்கோட்டை போன்ற பேச்சுகளையும் மத நம்பிக்கை போன்ற மூட உபதேசங்களையும் செய்து ஓட்டர்கள் தங்கள் கடமையை உணராமல் கண்மூடித்தனமாய் நடந்துகொள்ளும் படியான பிரசார வலிமையினாலேயே ஓட்டுச்செய்திருக்கிறார்கள். புதிய அரசியலையோ சட்டசபை அதிகாரங்களையோ நன்றாய் உணர்ந்த ஓட்டர்கள் ஓட்டு செய்தவர்களில் 100க்கு ஒருவர் இருவர்கள்கூட இருக்கமாட்டார்கள். பொதுவாக நித்திய வாழ்வில் தற்கால வாழ்க்கை முறையின் பயனாக ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத “இயற்கை” கஷ்டங்கள் அடியோடு மாற்றப்பட்டு விடும் என்கின்ற பேராசையை ஓட்டர்களுக்கு உண்டாக்கி விட்டதின்...

பிரிட்டிஷ் அதிகாரிகளின்  நன்றியற்ற தன்மை

பிரிட்டிஷ் அதிகாரிகளின்  நன்றியற்ற தன்மை

பிரிட்டிஷ் அரசாங்கம் உலகிலுள்ள மற்ற அரசாங்கத்தைவிட கட்டுப்பாடும் சட்டரீதியுமானது என்பது நமது அபிப்பிராயம். பிரிட்டிஷ் சமூகத்தாரும் மற்ற தேசத்தாரைவிட நாணையமுள்ளவர்கள் என்பதும் நமதபிப்பிராயம். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகளின் முறையானது “அரசியல் என்பது நாணையமற்றது, நன்றியற்றது, விஸ்வாசமற்றது” என்று ஒரு பெரியார் கூறியது போல் சிறிதும் நன்றி விஸ்வாசமற்றது என்று சொல்லுவோம். ஒரு காரியத்துக்கு நன்றி விஸ்வாசம் காட்டுவது என்றால் அது லேசானதல்ல என்பதும் தனது சுயநலத்தை விட்டுக் கொடுக்க வேண்டு மென்பதும் நன்றி விஸ்வாசம் காட்டுவது ஒரு தியாகத்துக்கு ஒப்பான தென்பதும் நமதபிப்பிராயமானாலும் உலகில் நல்ல பெயரோ புகழோ சம்பாதிக்கவும் மற்றவர்கள் வெறுக்காதிருக்கவும் நன்றி விஸ்வாசம் காட்ட வேண்டியது மனிதத்தன்மையின் முதல் காரியமாகும். அந்தக் காரணத்தாலேயே நன்றி விஸ்வாசத்தை அவ்வளவு முக்கியமாகவும் அதில்லாத் தன்மையை அவ்வளவு தாழ்மையாகவும் குறிப்பிடுகின்றோம். இந்தியாவில் மாத்திரமல்லாமல் மற்றும் வேறு நாடுகளிலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் இந்தியா உதவி வந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அராஜகம் ஏற்பட...

யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு

யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு

காங்கிரஸ்காரர்களின் ஆசை நிராசையாக ஆகிவிட்டது. அவர்கள் ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி பார்ப்பன ஆதிக்கத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாட்டைப் பழைய கால வருணாச்சிரம மனு ஆட்சி நாடாக ஆக்க முயற்சித்துப் பார்த்தார்கள். இதற்காக அவர்கள் செய்யக்கூடாத சூழ்ச்சிகளையும், பித்தலாட்டங்களையும் செய்து பார்த்தார்கள். கடைசியில் ஏமாற்றமடைந்து தோல்வி அடைந்தார்கள். இன்று அவிழ்த்து விட்ட குதிரைகள் போல் தலைமாடு கால்மாடு தெரியாமல் அளவு கடந்து பேசுவதும் வெறிபிடித்தவர்கள் போல் சீறிச் சீறி எதிரி மீது விழுகிறதுமாய் இருக்கிறார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் இந்த சமயத்தில் தன்னை மறந்து விட்டார். தனக்கு இந்த சந்தர்ப்பத்தில் மந்திரி பதவி கிடைத்தால்தான் உண்டு இல்லாவிட்டால் தன் ஆயுளில் மந்திரியாக முடியாது என்று முடிவு செய்து கொண்டு “சாகிறவனுக்கு சமுத்திரம் முழங்கால் தண்ணீராகத் தோன்றும்” என்பது போல் தனது வாயைத் தாராளமாய் திறந்துவிட்டு சத்தியமூர்த்தியாரைவிட மோசமாய்ப் பேச ஆரம்பித்து விட்டார். 2-4-37ந் தேதி சென்னை மாம்பலம் காங்கிரஸ் சபையில் பேசியதாகக் காணப்படும் சேதியில்...

மந்திரி சபை

மந்திரி சபை

மந்திரிசபை ஏற்பட்டு விட்டது. காங்கிரஸ்காரர்கள் அடிபட்ட சுணங்கன் குரைப்பது போல் தங்களது ஆத்திரத்தை மந்திரிகள் மீது காட்டுகிறார்கள். மந்திரிமார்களை தினமும் கழுதை, நாய் என்று வைத வண்ணமாயிருக்கிறார்கள்; தினமும் கண்டித்து தீர்மானம் போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். இந்த மந்திரிசபை நாளைக்குப் போய்விடும், இன்றைக்குப் போய்விடும் என்று அறிவில்லாமல் பொய்யையும் புளுகையும் வேண்டுமென்றே அளந்தவண்ணமாய் இருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் தங்கள் தவறை உணர்ந்து தங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்தை ரத்து செய்து கொண்டு வந்து அரசாங்கத்தை அடிபணிந்தாலொழிய இந்த மந்திரி சபை சீக்கிரத்தில் ஒழிந்துவிடும் என்று சட்டம் தெரிந்தவர்கள் யாரும் கருதமாட்டார்கள். சட்டத்தில் – சீர்திருத்த சட்டத்தில் விஷயம் தெளிவாக இருக்கிறது. மெஜாரிட்டி கட்சியார் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள நிலைமை இடம் கொடுக்கவில்லையானால் கவர்னர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தன்னிஷ்டப்படி நடத்தலாம் என்பது ஸ்பஷ்டமாக இருக்கிறது. அதை கவர்னர் பின்பற்றியாக வேண்டும். இப்போது மெஜாரிட்டி கட்சியாருக்கு (காங்கிரஸ்காரருக்கு) மந்திரி பதவி ஏற்க...

கேளம்பாக்கத்தில்  சுயமரியாதைத் திருமணம்

கேளம்பாக்கத்தில்  சுயமரியாதைத் திருமணம்

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இல்வாழ்க்கை நடத்துவதேயாகும். ஆனால் இப்போது நமது இந்து மதத்தில் திருமண விஷயத்தில் நடைபெறும் கொடுமையைவிட வேறு எந்த மதத்திலும் நடைபெறுவதில்லை. திருமண விஷயத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது, தாய் தந்தையர்கள் பார்த்து மொண்டியையோ, கிழவனையோ திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறோம். அதற்குக் கட்டுப்பட்டு அப்பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விபசாரம் கற்பிக்கிறோம். மகமதிய மதத்தில் பெண்களுக்குக் கோஷா முறை இருந்தாலும் திருமண விஷயத்தில் உரிமை வழங்கி இருக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்து மதத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கி வருகிறார்கள். குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு அடுத்த படூரில் 04.04.1937 ஆம் நாள் நடைபெற்ற தோழர் வி.டி. ஏழுமலை – தோழர் கே. இராதாபாய் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் சுருக்கம். குடி அரசு – சொற்பொழிவு – 11.04.1937

வாக்குறுதிப் பித்தலாட்டம்  காங்கிரசின் கோழைத்தனம்

வாக்குறுதிப் பித்தலாட்டம் காங்கிரசின் கோழைத்தனம்

  காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க மறுத்தது கோழைத்தனம் என்றே சொல்லுவோம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) மந்திரி பதவி ஏற்க எவ்வளவோ ஆசையாகவும் ஆத்திரமாகவும் இருந்தும் வெளி மாகாண காங்கிரஸ்காரர்களும் சில தலைவர்களும் மந்திரி பதவி ஏற்றால் வெளுத்துப் போகுமே என்று பயந்து மெல்ல முதுகு காட்டி விட்டார்கள். கவர்னர்களிடம் வாக்குறுதி கேட்பது என்பது பொது ஜனங்களை ஏமாற்றக் கண்டுபிடித்த வழியே ஒழிய அதில் எவ்வித அருத்தமும் இல்லை. இதை சென்ற வாரமே எடுத்துரைத்தோம். அப்படி இருந்தும் கவர்னர்கள் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல வார்த்தையே கொடுத்திருக்கிறார்கள். அதாவது சட்டப்படி தமக்கு உள்ள நிர்ப்பந்தங்கள் தவிர மற்ற விஷயங்களில் தன்னால் கூடியவரை எல்லா வழிகளிலும் ஒத்துழைத்து உதவி செய்வதாய்க் கூறியிருக்கிறார். இதை ஆச்சாரியார் பாராட்டி நன்றி செலுத்தி ஏற்றுக்கொண்டு போனவர் பிறகு என்ன காரணத்தாலோ மந்திரி பதவியை அமைக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். இது கவர்னர் அறிக்கையில் இருக்கிறது. “ஏடிண் உதுஞிஞுடூடூஞுணஞிதூ டிணtடிட்ச்tஞுஞீ...

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி ஏற்கக்கூடாது  ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு ஈ.வெ.ரா. தந்தி

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி ஏற்கக்கூடாது ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு ஈ.வெ.ரா. தந்தி

  ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளலாமா என்கின்ற பிரச்சினையின் மீது தோழர் ஈ.வெ. ராமசாமி கட்சித் தலைவரான பொப்பிலி ராஜா அவர்களுக்கு திருவாரூரிலிருந்து 29-ந்தேதி தந்தி மூலம் தெரிவித்த அபிப்பிராயம். “ஜஸ்டிஸ் கட்சியானது நன்றியற்றதும் பொறுப்பை உணராததுமான அரசாங்கத்தில் இப்போது கண்டிப்பாக மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது. சர்க்கார் அதிகாரிகளும் சிப்பந்திகளும் நமது கட்சிக்கு செய்த அட்டூழியங்களையும் விஸ்வாசமற்ற தன்மையையும் பற்றி சர்க்கார் சிறிது கூட கவலை எடுத்துக்கொள்ளவில்லை. பதவி ஏற்றுக்கொண்டால் நமது வேலை மிகவும் கஷ்டமாகிவிடும்.” என்று தெரிவித்து விட்டார். அந்தப்படியே தலைவரும் ஒத்துக்கொள்ள முடியாதென்று கவர்னரிடம் கண்டிப்பாக மறுத்துவிட்டார். குடி அரசு – வேண்டுகோள் – 04.04.1937

யாருக்குக் கணக்குத் தெரியவில்லை?

யாருக்குக் கணக்குத் தெரியவில்லை?

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் மந்திரி பதவி ஒப்புக்கொண்டதால் நாயுடு அவர்களுக்குக் கணக்கே தெரியவில்லை என்றும், சுயமரியாதை இல்லை என்றும் டில்லியிலிருந்து பத்திரிக்கைகளுக்குச் சேதி விட்டிருக்கிறார். காரணம் என்ன சொல்லுகிறார் என்று பார்த்தால், 215 மெம்பர்கள் உள்ள சட்ட சபையில் 16 மெம்பர்கள் மாத்திரம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவி ஏற்றிருக்கிறார்களே, 16ஐ விட மீதி 199 பெரிய எண் என்று தெரிந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார். இது அயோக்கியத்தனத்தின் மீது எழுந்த ஆத்திரத்தால் புத்தி மழுங்கிப்போன ஒருவர் குடி வெறியால் பேசுவது போலவே இருக்கிறதே ஒழிய இதில் உண்மையோ யோக்கியமோ ஏதும் சிறிதும் இருப்பதாகக் காணவில்லை. ஏனெனில் முதலாவது சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி மெம்பராகவோ “16 பேர்” தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்சி சார்பாகவோ (அவர்) மந்திரி சபை அமைக்கவும் இல்லை. மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதை ஜஸ்டிஸ் கட்சித்...

நல்ல சந்தர்ப்பம் வீணாக்கப்பட்டது

நல்ல சந்தர்ப்பம் வீணாக்கப்பட்டது

காங்கிரஸ்காரர்கள் மந்திரி சபையை ஏற்று சீர்திருத்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதின் மூலம் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யக்கூடும் என்பதையும் கவர்னர்கள் தங்கள் விசேஷாதிகாரங்களைச் செலுத்துவதில்லை என்று வாக்குறுதி கொடுத்துவிட்டதினாலேயே காங்கிரஸ்காரர்கள் என்ன செய்ய முடிந்துவிடும் என்பதையும் காங்கிரஸ்காரர்களிடம் குடிகளின் நன்மைக்கு என்று அனுபவத்தில் செய்வதற்கு ஏதாவது கொள்கைகள் இருக்கிறதா என்றும் பார்ப்பதற்கு இருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் வீணாகிவிட்டது. அதாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்காமல் தப்பித்துக்கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கவலை கொண்டு பார்ப்பதாயிருந்தால் காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க முடியாமல் போனது பற்றி பார்ப்பனர்களுக்கு துக்கமும் பார்ப்பனரல்லாதாருக்கு மகிழ்ச்சியுமாய்த்தான் இருக்கும். இதன் உண்மை அறிய வேண்டியவர்கள் எந்த ஊரிலாவது அக்கிராஹார வழி நடந்து பார்த்தால் ஒவ்வொரு பார்ப்பனர் முகத்திலும் அன்று தாலியறுத்த விதவைக் களை ஜொலிப்பதைப் பார்க்கலாம். அது போலவே பார்ப்பனரல்லாதார் தெருக்களைப் பார்த்தால் பண்டிகை போல் காணப்படுவதும் விளங்கும். இக்காட்சி நமக்கு முக்கியமானதல்ல...

உத்தியோகத் தடை

உத்தியோகத் தடை

  “ஜஸ்டிஸ் கட்சி “தலைவர்களுக்கு” சர்க்கார் இனி பெரிய உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது” என்பதாக சேலம் ஜஸ்டிஸ் – சுயமரியாதைத் தொண்டர்கள் வேலைக்கூட்டத்தில் ஒரு தோழரால் ஒரு தீர்மானம் பிரேரிக்கப்பட்டது. அதற்கு அத்தீர்மானம் கொண்டு வந்தவர் சொன்ன காரணம் மிகவும் கவனிக்கத் தக்கதாகும். காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களுக்கு நாட்டில் செல்வாக்கில்லையென்றும் அவர்கள் நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை யென்றும் அவர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள் என்றும், தான் அதில் ஒரு திருத்தம் செய்து அதே தீர்மானத்தையே பிரேரேபிக்கிறதாகவும் சொன்னார். அதாவது, உத்தியோகம் கொடுக்கக் கூடாது என்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அதற்கு ஆக சொல்லப்படும் காரணத்தை மாத்திரம் மாற்ற வேண்டுமென்கிறேன் என்றும் சொன்னார். காரணம் என்னவென்றால் எந்தக் கட்சியின் பேரால் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் தலைவர்கள் என்பவர் பெரும் பெரும் பதவி பெற்றார்களோ அந்தகட்சிக்கு அவர்கள் நன்றி காட்டவில்லை. பல வழிகளில் துரோகம் செய்துவிட்டார்கள். பொது ஜனங்களையும் சர்க்காரையும் திருப்தி...

காங்கிரசும் வரி குறைப்பும்

காங்கிரசும் வரி குறைப்பும்

காங்கிரஸ்காரர்கள் சமீப தேர்தலில் வெற்றி பெற்ற உடன் சர்க்காரார் தங்களைக் கண்டு நடுங்குவதாக பித்தலாட்டப் பிரசாரம் செய்து வருகிறார்கள். எதில் நடுங்குகிறார்கள் என்று பார்ப்போம். சட்டசபையில் “ஏராளமான வெற்றி” “வெற்றிமேல் வெற்றி” “எதிர்பாராத வெற்றி” என்பதெல்லாம் பெற்ற பிறகே டில்லி சட்டசபையில் சர்க்காரார் 3 வித வரிகளை அதிகமாகப் போட்டிருக்கிறார்கள். அதாவது வெள்ளிக்கு வரி, சர்க்கரைக்கு வரி, தபாலுக்கு வரி. இந்த மூன்றில் காங்கிரஸ்காரர்கள் வெள்ளி வரியைப் பற்றி கவலைப்படவில்லை. சக்கரை, தபால் வரியைப்பற்றி கூப்பாடு போட்டார்கள். ஒன்றும் ஜபம் சாயவில்லை. பட்ஜட்டில் கைவைக்கவிட மாட்டேன்” என்று சர்க்கார் மெம்பர் சொன்னார். வைசிராய் பிரபு மேலொப்பம் போட்டுவிட்டார். உளி முறிந்த ஷுமேக்கர் மாதிரி காங்கிரஸ் மெம்பர்கள் தலை குனிந்து கொண்டு வாய்ச் சவடால் அடிக்கிறார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்களால் வரி குறைக்கப்படும் என்பதற்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று கேட்கிறோம். அசம்பிளியில் காங்கிரஸ் கò தலைவர் தோழர் தேசாய் காங்கிரஸ் தீர்மானத்தை வைசிராய் குப்பைத்...

பதவியும் “நிபந்தனை”யும்

பதவியும் “நிபந்தனை”யும்

  கவர்னர்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக அ.இ. காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்துவிட்டது. ஆனால் எந்த மாதிரி வாக்குறுதி பெறுவது என்பதும் அத்தீர்மானத்திலேயே இருக்கிறது. அதாவது “காங்கிரஸ்காரர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு அரசியலை நடத்திக்கொடுக்கும்போது கவர்னர் எதேச்சாதிகாரம் செலுத்தக்கூடாது” என்கின்ற வாக்குத்தத்த ஒப்பந்தம் பெற்று அரசியலை நடத்திக் கொடுப்பது. இதில் இரண்டு விஷயம் யோசிக்க வேண்யடிதாகும். சட்டத்துக்கு கீழ்பட்டு அரசியல் சட்டப்படி நடந்து அரசியலை நடத்திக்கொடுக்கும்போது கவர்னர் எதேச்சா (விசேஷா) திகாரத்தை ஏன் உபயோகிப்பார் என்பது. ஒருசமயம் உபயோகிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டால் என்ன செய்வது என்று சொல்லப்படுமானால் அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கவர்னருக்கு சொந்த அதிகாரம் ஏதாவது உண்டா? பொதுஜன நன்மைக்கோ பிரிட்டிஷ் அரசியல் தத்துவத்துக்கோ விரோதமில்லாமல் நடத்தவே அரசியல் சீர்திருத்தம் கட்டுப்பட்டதாகும். அம்மாதிரி காரியம் மந்திரிகள் செய்யாமல் இருக்கும் வரை கவர்னர் எதேச்சாதிகாரம் செலுத்த ஏன் முற்படுவார்? மந்திரிகள் செய்யும் எந்தக்...

பார்ப்பானுக்கு ஏன் ஆத்திரம் வராது?

பார்ப்பானுக்கு ஏன் ஆத்திரம் வராது?

  சென்ற மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்கள் தங்கள் கட்சிக்கு வெற்றி ஏற்பட வேண்டுமென்று உத்தியோகப் பார்ப்பான் முதல் கொண்டு எச்சில் கிண்ணம் கழுவும் பார்ப்பான் வரை பெண்டு பிள்ளை குடும்ப சமேதமாய் கட்டுப்பாடாய் அக்கரையாய் ஆத்திரமாய் அலைந்து திரிந்து வேலை செய்தார்கள் என்பதைப் புகழ்ந்து அச்சமூகத்தை மெச்சிப்பேசுவதே இன்றைய எந்தக் கூட்டத்தினுடையவும் முதல் பேச்சாய் இருக்கிறது. அது உண்மைதான். ஆச்சரியப்படத் தக்கதுதான். ஆனால் அதன் காரணம் அவர்களுடைய பொது நல சேவை என்று சொல்ல முடியுமா? அல்லது அதிகாரம், பதவி ஆகியவற்றின் ஆசை என்று சொல்லிவிட முடியுமா? என்றால் இரண்டும் அல்ல என்று தான் சொல்லுவோம். மற்றென்னவென்றால் பார்ப்பனர்களை நாம், (ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும்) அந்த நிலையில் கொண்டு வந்து வைத்து விட்டோம். அவர்களது வாழ்க்கையை சமூகத்துறையிலும் அரசியல் துறையினும் மிக்க நெருக்கடியானதாக ஆக்கிவிட்டோம். சகல தொழிலிலும் பிரவேசிக்க அவர்கள் துணிந்தும் நாம் ஒவ்வொன்றிலும் தடுத்து கஷ்டமாக்கி...

தோழர் C.S.R.க்கு “5 வருஷம்”

தோழர் C.S.R.க்கு “5 வருஷம்”

  காங்கிரஸ்காரர்கள் என்னும் நமது பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு ஆணவம் படைத்தவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதற்கு அவர்கள் அடிக்கடி போடும் கரணங்களும் பித்தலாட்டங்களும் வஞ்சகங்களும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சிகளும் ஒருபுறமிருந்தாலும் தங்களை ஒரு கொடுங்கோன்மை பழிவாங்கும் தன்மையினராக நினைத்துக்கொண்டு அடக்கு முறைத் திட்டங்களையும் கடுமையான தண்டனைகளையும் கையாளுவதாக மக்களுக்குக் காட்டி மிரட்டி வருகிறார்கள். இதனால் மற்றவர்களைக் காங்கிரசுக்குள் – தங்களுக்குள் அடங்கி சரணாகதியாய் நடக்கச் செய்ய இது ஒரு சூழ்ச்சிமார்க்கம் என்று கருதிச் செய்கிறார்கள். இந்த சூழ்ச்சி எந்த அளவுக்குப் போய்விட்டது என்று பார்த்தால் கோயமுத்தூர் தோழர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களை “5 வருஷகாலத்துக்குப் பொது வாழ்வில் காங்கிரசில் எவ்வித ஸ்தானத்துக்கும் தகுதி இல்லை” என்பதாகத் தீர்மானித்து விட்டார்களாம். இன்று காங்கிரசில் தலைவராயிருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தோழர் சி.எஸ்.ஆர். அவர்கள் வீட்டிற்கு நடையாய் நடந்து கடிதத்தின் மேல் கடிதம் எழுதி அவரை சட்டசபை அபேக்ஷகரிலிருந்து பின் வாங்கிக் கொள்ளும்படி...

விதவை கர்ப்பம்  சூதகக்கட்டி ஆய்விட்டது”

விதவை கர்ப்பம் சூதகக்கட்டி ஆய்விட்டது”

    காங்கிரஸ்காரர்கள் நாம் கூறி வந்தபடியே நிபந்தனையில்லாமல் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளுவது என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டதோடு 5 வருஷ காலத்துக்கும் மந்திரி பதவி தங்களை விட்டுப் போகாமல் இருப்பதற்கு சர்க்காருக்கு தாங்களாகவே நிபந்தனையும் கொடுத்து விட்டார்கள். அதாவது மந்திரிகள் அரசியல் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் – நடப்போமாகவும் என்பதை காங்கிரஸ் மூலமே தீர்மானித்து சர்க்காருக்கும் தெரிவித்து விட்டார்கள். சட்டசபை மெம்பர் ஆகி சர்க்கார் கட்டிடத்துக்குள் பிரவேசிக்கும்போதே பிரிட்டிஷ் அரசருக்கும் அரச சந்ததிக்கும் அரச சட்டங்களுக்கும் ஆக்கினைக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடக்கிறேன் என்று (ராஜவிசுவாச) பிரமாணம் செய்து ஆகவேண்டும் என்பது ஒருபுறமிருந்தாலும் அதற்கு காங்கிரஸ்காரர்கள் ஒரு மாதத்திற்கு முன் ஒரு வியாக்கியானம் செய்தது. அதாவது “மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாயில் ஒரு விதமாய் பிரமாணம் செய்தால் அந்த பிரமாணம் உண்மையான பிரமாணமாகாது” என்று வியாக்கியானம் செய்ததால் சர்க்கார் எங்கு தப்பிதமாய் நினைத்துக்கொண்டு மந்திரி சபை அமைக்க தங்களை கூப்பிடாமல் விட்டுவிடுவார்களோ...

காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும்

காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும்

– “ஜஸ்டிஸ்” எழுதுவது   தோழர் சி.ஆர். ரெட்டி அவர்களிடம் நமக்கு அனுதாபம் இல்லை. அவரும் நமது அனுதாபத்துக்கு உரியவரல்ல. ஆனால் அவரால் வெளிப்படுத்தப்பட்ட கடிதப்போக்குவரத்தானது காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாதாரின் கதியை நிச்சயிக்க மிகவும் முக்கியமான ஆதாரமாகும். நாம் வெகு காலமாகவே அதாவது நமது கட்சி ஆரம்பித்த காலம் முதல்கொண்டே நமது நாட்டில் பார்ப்பனர்கள் “தேசீயம்” “தேசாபிமானம்” “சுதந்திரப்போர்” என்று கூப்பாடு போட்டு வந்ததெல்லாம் பார்ப்பன சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அச்சமூகம் மற்ற சமூகத்தை அடக்கி ஆள்வதற்கும் மற்ற வகுப்பார் சமீப காலமாக அரசியலிலும் சமூகத்துறையிலும் அடைந்து வரும் நலங்களை ஒழித்து பழய பார்ப்பனீய ஆட்சியை ஏற்படுத்தவும் தானே ஒழிய வேறில்லை என்று கூறி வந்திருக்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியானது பார்ப்பனர்களின் இவ்வெண்ணங்கள் நிறைவேறாமலிருக்கும்படியும் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையை அழித்து அவர்களது ஆதிக்கத்திலிருந்து மக்கள் விடுதலை அடையும்படியும் தன்னால் ஆனதையெல்லாம் செய்து வந்திருக்கிறது என்றாலும் அதற்கு பார்ப்பனரல்லாத மக்கள் போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்து...

என்ன?

என்ன?

“பார்ப்பனரல்லாதார் கட்சி தோற்று விட்டது” என்று நீலிக்கண்ணீர் விடும் தோழர்களே! தலைவர்களையும், பாடுபட்டவர்களையும் குறை கூறும் தோழர்களே!! நீங்கள் அக்கட்சி நலத்துக்கு ஆக என்று என்ன செய்தீர்கள்!!! ஆங்கிலம் கற்று உத்தியோகத்திலிருக்கும் பார்ப்பனரல்லாதாரும் வக்கீல் பார்ப்பனரல்லாதாரும் அக்கட்சியின் பேரால் மனிதர் என்று மதிக்கப்பட்டு பயன் பெற்றவர்களும் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு சந்தாதாரராகிப் படித்திருப்பீர்களா? அல்லது வெட்கப்படும் தமிழ் மக்களாவது ஒவ்வொருவரும் “குடி அரசு” “விடுதலை” வாங்கி படித்திருப்பீர்களா? அப்படியானால் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கும், “விடுதலை” வார இருமுறை பத்திரிகைக்கும், “குடி அரசு”க்கும் முறையே N 2500, 1000, 250 ரூ.வீதம் நஷ்டம் ஏற்படுவானேன்? பார்ப்பனர்களைப் பாருங்கள், அவர்கள் முயற்சியை பாருங்கள், அவர்கள் பத்திரிக்கைகளை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் ஆதரிக்கிறார்கள், பாருங்கள். ஆகவே கட்சி ஏன் ஜெயிக்கவில்லை? யாரால்? என்பதை இப்போதாவது உணருங்கள். ஆத்திரப்படுவதில் பயனில்லை. இப்படிக்கு கட்சியால் கடுகளவும் பயன் பெறாதவன். குடி அரசு – வேண்டுகோள் – 14.03.1937

காங்கிரஸ்காரர்களின் சமத்துவம்

காங்கிரஸ்காரர்களின் சமத்துவம்

– நேரில் கண்டோன் ஈரோடு தாலூகாவில் சென்னை சட்டசபைக்கு காங்கிரஸ் அபேட்சகராக நின்று வெற்றி பெற்ற தோழர் கே.எஸ். பெரியசாமி அவர்களுக்கு ஈரோடு காங்கிரஸ் தலைவர் ஒரு விருந்து நடத்தினார். அவ்விருந்தில் பார்ப்பனரைக் கொண்டே சமையல் செய்யப்பட்டது. அவ்விருந்திற்கு பார்ப்பன வக்கீல்களும், சில பார்ப்பனரல்லாதார்களும் சென்றிருந்தார்கள். பார்ப்பனர்களுக்குத் தனி யிடமும், பார்ப்பனரல்லாதார் களுக்கு தனியிடமுமாக அமைத்து சாப்பாடு போடப்பட்டது. இதையறிந்த சில பார்ப்பனரல்லாத மானமுள்ள வாலிபர்கள் வெறுப்புக் கொண்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள். பின் அவர்களை சமாதானம் செய்யப்பட்டது. மேலும் இந்த விருந்திற்கு ஒரு முஸ்லீம் தோழரும், ஒரு பார்ப்பன தோழரும் ஜோடியாகச் சேர்ந்து சென்றார்கள். விருந்து காரியங்களை கவனித்து வந்த மற்றொரு பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலைவர் அந்த பார்ப்பன தோழரை நோக்கி “நீ அங்கே போய் சாப்பிடு” “நீ இங்கே போய் சாப்பிடு” என்று தனித் தனியான இடத்தைக் காண்பித்தார். அந்த முஸ்லீம் தோழர் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டசபை...

காங்கிரஸ் சாதித்தது

காங்கிரஸ் சாதித்தது

– வம்பளப்போன் காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போன பிறகு எவ்வளவு வரியைக் குறைத்தார்கள், என்ன காரியம் சாதித்தார்கள் என்பதை ஓட்டர்கள் அறிந்திருந்தால் அல்லது ஓட்டர்களுக்கு அறியும் சக்தி இருந்திருந்தால் அல்லது ஓட்டர்கள் அறியும்படி யாராவது செய்திருந்தால் சமீப தேர்தலில் பெரும்பான்மை ஓட்டர்கள் இம்மாதிரி தேசத்துக்குக் கேடு சூழத்தக்கதும் முட்டாள் தனமானதுமான காரியத்தைச் செய்திருக்கமாட்டார்கள். எப்படியோ மோசம் போய் விட்டார்கள். அயோக்கியர்களாலும், காலிகளாலும், கூலிகளாலும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதில் பயனில்லை. காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போனபின்பு வரிகள் மொத்தத்தில் பல துறைகளில் அதிகப்படுத்தப்பட்டதே தவிர காங்கிரஸ்காரர்களால் குறைவு படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு ஆதரவு இல்லை. சென்ற முந்தின வருஷங்களுக்கு அரிசி முதலிய உணவுப் பொருள்களுக்கு வரி போட்டது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க இப்போதும் தபால் இலாக்காவில் சில அய்ட்டங்களில் வரிகள் ஒன்றுக்கு இரண்டாய் மூன்றாய் அதிகப்படுத்தப்பட்டு விட்டது. அதாவது பர்மாவுக்கு – ரங்கூன் முதலிய ஊர்களுக்கு முன் கார்டுக்கு...

காங்கிரஸ்காரர்கள் பக்தி விசுவாசப் பிரமாணங்கள்

காங்கிரஸ்காரர்கள் பக்தி விசுவாசப் பிரமாணங்கள்

  சட்ட சபைகளுக்கு வெற்றிபெற்ற காங்கிரஸ்காரர்கள் இரண்டு பிரமாணங்கள் செய்ய வேண்டியதாக ஏற்படும் போல் இருக்கிறது. அதாவது:- தேசபக்திக்கும் காங்கிரஸ் கட்டுதிட்ட பக்திக்கும் ஒரு பிரமாணம் டெல்லியில் கூடப் போகும் கன்வென்ஷன் என்பதில் செய்ய வேண்டுமாம். ராஜாவுக்கும் ராஜ சந்ததிக்கும் அரசாங்கத்திற்கும் அரசாங்க சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துகொள்ளுவதாக ஒரு பிரமாணம் சர்க்கார் கோட்டைக்குள் சென்று செய்யவேண்டுமாம். ஆகவே இந்த இரண்டு பிரமாணமும் ஒன்றுக்கொன்று முரணானதாகும். இரண்டையும் காங்கிரஸ்காரர்கள் செய்வதாய் இருந்தால் எதாவது ஒன்றை “சும்மா வெறும் சத்தியம்” – “பொய் சத்தியம்” – “மனதுக்குள் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு ஏமாற்றுவதற்கு ஆக செய்யப்பட்ட சத்தியம்” என்று (சைவப் பெரியார்களில் சுந்தரமூர்த்தி செய்தது போல்) கருதி செய்யப் போகிறார்களோ என்னமோ தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ஒரு சத்தியம் மாத்திரம் உண்மையானதும் உறுதியானதுமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது சர்க்காரையும் ஏமாற்றி காங்கிரசையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி தேசத்தையும்...

வேடிக்கை அல்லாத பேச்சு

வேடிக்கை அல்லாத பேச்சு

– சித்திரபுத்திரன்   “ராஜகோபாலாச்சாரிக்கும் ஜின்னாவுக்கும் வித்தியாசமில்லை”யாம் உண்மைதான், ஜின்னா முதலில் முஸ்லீம் சமூக நன்மை அப்புறம் தேசீயம் என்கிறார். ராஜகோபாலாச்சாரியும் முதலில் பார்ப்பன ஆதிக்கம், அப்புறம் தேசீயம் என்கிறார். இது தெரிந்துதான் ஜின்னா சொன்னார், ஆச்சாரியும் ஏற்றுக்கொண்டார்; தேசீயப் பத்திரிகைகளும் மேலொப்பம் செய்தன. ராஜபக்தி கூடாது பறையனும் பார்ப்பானும் கருப்பப் பறையன்:- ராஜ பக்திக்கு வருகிறாயா போகலாம். சுப்பையர்:- போன வாரம்தான் “ராஜாவையே விரட்டி விடுவது” என்ற பிரச்சினை மீது தேர்தல் நடந்து எலக்ஷனில் வெற்றிபெற்றுவிட்டோமே. இப்பொழுது வந்து ராஜபக்திக்குக் கூப்பிடுகிறாயே உனக்குப் புத்தி இல்லையா? கரு:- அடே பைத்தியமே! ராஜாவிடம் பக்தி காட்ட நான் கூப்பிட வில்லை. “ராஜ பக்தி” என்று நம்ம ஊரில் ஒரு சினிமா நடக்கிறது உனக்குத் தெரியாதா? அதற்குக் கூப்பிட்டேன். மகா பதிவிரதை மாதிரி பேசுகிறாயே. சுப்:- அதுகூட பார்க்கக் கூடாது. அந்தப் பேச்சே காதில் விழுகக் கூடாது தெரியுமா? கரு:- சரி, சரி....

முஸ்லீம் ஜட்ஜி

முஸ்லீம் ஜட்ஜி

சென்னை ஐகோர்ட்டுக்கு ஒரு முஸ்லீம் ஜட்ஜியை நியமித்திருக் கிறார்கள். ஹைகோர்ட் மூடி திறக்கப்பட்டவுடன் உத்தியோகத்தை ஏற்றுக்கொள்ளுவார். சர். அப்துல் ரகீமுக்குப் பின் சுமார் 20-வருஷ காலமாக சென்னை ஹைகோர்ட்டுக்கு முஸ்லீம் ஜட்ஜி நியமிக்கப்படவே இல்லை. சுமார் 20-வருஷம் பொறுத்து இப்போதுதான் சர். அப்துல் ரஹிமான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது கேட்கப்பட்ட பின்பும் குறிப்பாக முஸ்லீம்கள் முஸ்லீம் லீக் ஆரம்பித்து அதன் மூலம் தாங்கள் சமூக உரிமைகளை வலியுறுத்த ஆரம்பித்த பிறகும் தான் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் அல்லாமல் இந்தியா எங்கும் முஸ்லீம்கள் அரசியலில் உரிமை பெற்று ஹைகோர்ட் ஜட்ஜி கவர்னர் முதலிய பதவிகள் பெற்று அதன் மூலம் நாட்டுக்கும் அச்சமூகத்திற்கும் சேவை செய்யும் சந்தர்ப்பம் பெறவும் தகுதி உள்ளவர்கள் பயன்பெறவும் சவுகரியம் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். வகுப்பு உரிமை தேசீயத்துக்கு விரோதமென்றும் வகுப்பு உரிமையை ஒழித்தாலொழிய தேசீயம் உருப்படாதென்றும் பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகிறார்கள். காங்கிரசையும் வகுப்பு உரிமை...

முஸ்லீம்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

முஸ்லீம்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

  முஸ்லீம்களுக்கு அனேகமாய் மதம் வேறு, சமூகம் வேறு, தேசம் வேறு என்கின்ற வித்தியாசம் கிடையாது. மூன்றையும் வேறு வேறாய்க் கருதும்படியான நிலை ஏற்பட்டு விட்டால் முதலில் மதத்தையும் பிறகு சமூகத்தையும் அப்புறம் தான் தேசத்தையும் கருதுவார்கள். அவர்களுக்கு மதம் ஒன்றேயாகும்; சமூகம் ஒன்றேயாகும்; தேசம் பலவாகும். துருக்கி, ஈஜிப்ட், பர்ஷியா, ஈராக், ஆப்கானிஸ்தானம் முதலிய பல தேசங்கள் உண்டு. கடவுளும் நபியும் ஒன்றேயாகும். இஸ்லாம் சமூகம் ஒன்றேயாகும். இஸ்லாம் சமூகத்துக்கு ஆபத்துண்டாக்கக்கூடிய அல்லது கேடுண்டாக்கக்கூடிய நிலையில் தேசத்தை இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் சமூகத்தைக் காப்பார்களே ஒழிய தேசத்தை லஷியம் செய்யமாட்டார்கள். அவர்கள் சமூகம் முன்னேறி வருவதற்கும் அவர்கள் மதம் தலை சிறந்து விளங்குவதற்கும் அதுதான் காரணம். அப்படிப்பட்டவர்கள் இன்று இந்தியாவில் ஜன சமூகத்தில் சுருங்கின எண்ணிக்கை உள்ளவர்களாய் இருந்தும் எப்படிப்பட்ட நெருக்கடியிலும் சமூகத்தை விட்டுக் கொடுக்காததாலேயே அவர்கள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். சமபங்கு – சில விஷயங்களில்...

வெற்றி – தோல்வி

வெற்றி – தோல்வி

  சட்டசபைத்தேர்தல் நடந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. காங்கிரசுக்கு 5, 6 மாகாணங்களில் தோல்வியும் 5, 6 மாகாணங்களில் எண்ணிக்கையில் வெற்றியும் ஏற்பட்டிருக்கிறது. தோல்வி அடைந்த மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரிசபை ஏற்றுக்கொள்ளுவதில்லை என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் காரணம் இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) ஆசைப்பட்டாலும் முடியாது. ஆகவே இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் பெரியதொரு “தியாகம்” செய்து விட்டார்கள். அதுமாத்திரமல்லாமல் தோல்வி அடைந்த மாகாணங்களில் ஏற்படப்போகும் மந்திரிகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து மந்திரி சபை நடக்காமல் தடைமுறைகளை கையாளப் போகிறார்களாம். இதுவும் வெகுகஷ்டப்பட்டு கண்டு பிடித்த சங்கதியாகும். இல்லாவிட்டால் இவர்கள் தோல்வியுற்ற சபைகளில் வேறு என்னதான் செய்ய முடியுமோ தெரியவில்லை. ~subhead காங்கிரஸ் தடுமாற்றம் ~shend நிற்க, வெற்றி பெற்ற மாகாணங்கள் என்பவைகளில் என்ன செய்வது என்பதுபற்றி தலைவர்கள் முதல் வாலர்கள் வரை தைரியமாய் ஒன்றும் வெளியில் சொல்லமுடியாமல் ஆளுக்காள் உளறிக்கொட்டிய வண்ணமாக இருக்கிறார்கள். ஆனால் அந்தரங்கத்தில் அவரவர்கள் உள் எண்ணத்தில் தோழர் ஜவஹர்லால் முதல் எல்லோரும் ஆதிமுதற்கொண்டே...

அஞ்சேல்! அஞ்சேல்!! அஞ்சேல்!!!

அஞ்சேல்! அஞ்சேல்!! அஞ்சேல்!!!

  எந்த நாட்டிலும் எந்தக் கட்சியும் யுகாந்த காலம் வரை அதிகார பதவி வகித்ததில்லை. எந்தக் கட்சிக்கும் பொதுஜன கோரிக்கைகளை யெல்லாம் சரிவர நிறைவேற்றி வைக்க முடியாது. ஆகவே அதிகார பதவி வகிக்கும் கட்சி மீது பொதுஜனங்களுக்கு சில காலத்துக்குப் பிறகு அதிருப்தி ஏற்படுதல் இயல்பே. இந்நிலைமை எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதே. பிரிட்டனிலே மிகவும் முற்போக்குக் கட்சி எனக் கூறப்படும் தொழிற் கட்சி தோழர் ராமஸே மாக்டோனால்டு தலைமையில் அதிகார பதவி ஏற்றது. கொஞ்ச காலம் அக்கட்சி செல்வாக்குப் பெற்றும் இருந்தது. ஆனால் அந்தச் செல்வாக்கு நெடு நாள் நிலை நிற்கவில்லை. வெகு சீக்கிரம் மறுதேர்தலை நடத்தும் நிலைமை ஏற்பட்டது. தேர்தலிலே தொழிற்கட்சியார் முறியடிக்கப்பட்டார்கள். பிற்போக்குக் கட்சி எனக் கூறப்படும் கன்சர்வேட்டிங் கட்சியார் மெஜாரட்டி பெற்று அதிகார பதவி ஏற்றார்கள். தொழிற்கட்சித் தலைவர் தோழர் ராம்ஸே மாக்டோனால்டு தமது கட்சியை நட்டாற்றில் விட்டுவிட்டு கன்சர்வேட்டிங் கட்சியாரிடம் சரணாகதியடைந்தார். இன்று தொழிற்கட்சி மைனாரிட்டி...

காங்கரஸ் வாலாக்கள் திகைப்பு

காங்கரஸ் வாலாக்கள் திகைப்பு

  “காங்கரஸே இந்தியா, இந்தியாவே காங்கரஸ்” எனப் பொக்கம் பேசும் காங்கிரஸ் வாலாக்களுக்கு 11- மாகாணங்களில் 6- மாகாணங்களில் தான் இந்த தேர்தலில் மெஜாரட்டி கிடைக்குமாம். அந்த மெஜாரட்டியுங்கூட மாய மெஜாரட்டிதான். மந்திரி சபை அமைக்கும் தருணம் வரும்போதோ அல்லது மந்திரிசபை அமைத்துச் சில காலத்துக்குப் பிறகோ அந்த மெஜாரட்டிகள் மைனாரட்டிகளாகி விடவும் கூடும். ஏனெனில் தற்கால காங்கரஸ் ஒரு நெல்லிக்காய் மூட்டை. தேர்தலில் பேப்பர் மெஜாரட்டி காட்டி நாட்டை ஏய்க்கும் பொருட்டு காங்கிரஸ் பற்றே அணுவளவும் இல்லாதவர்களை காங்கரஸ் பிரகஸ்பதிகள் காங்கரசில் சேர்த்திருக்கிறார்கள். புதுச் சட்ட சபைகள் உருவான பிறகு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு சட்டசபை மெம்பர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று அகில இந்திய காங்கரஸ் காரியக் கமிட்டியார் உத்தரவு பிறப்பித்தால் தற்காலக் காங்கரஸ் பக்தர்களாக விளங்கும் மாஜி ராவ்பகதூர்களும், மாஜி திவான்பகதூர்களும் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படி வார்களா? அவர்கள் வீணாகவா திவான்பகதூர் பட்டங்களையும், ராவ்பகதூர் பட்டங்களையும் துறந்தார்கள்?...

ஆரம்பமுதல் ஜஸ்டிஸ் கட்சி

ஆரம்பமுதல் ஜஸ்டிஸ் கட்சி

  நாட்டின் முன்னேற்றத்திற்கே உழைத்திருக்கிறது ஒருநாளும் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லை மந்திரி கனம் செட்டிநாட்டுக் குமாரராஜா அவர்களின் வீரமுழக்கம் ~cmatter தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் வகுப்புச் சலுகை வெளியான மர்மம் காந்தியாரையும் காங்கிரசையும் தாக்கியவருக்கு ஓட்டுக்கொடுக்கவேண்டுமாம் காங்கிரஸ் வாக்கும் தற்கால போக்கும் காங்கிரஸ் இதுவரை தேசத்திற்கோ அல்லது குறிப்பாக நம் மக்களுக்கோ உருப்படியான காரியம் இன்ன செய்திருக்கிறது, செய்யப்போகிறது, அதற்கு திட்டங்கள் இன்னின்னவைகள் என்று பொது மக்களுக்கு எடுத்துக்காட்டி தங்கள் கட்சி அபேட்சகர்களுக்கு ஆதரவு தேடுவதற்கு பதிலாக ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோக கட்சியென்றும், அதைச் சேர்ந்த பிரமுகர்கள் சுயநலமிகள், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்லியும் வந்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களில் சிலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் புதிய சீர்திருத்தத்தை தகர்த்துவிடப் போவதில்லை. சபையில் நுழைந்தவுடன் ராஜவிஸ்வாசப்பிரமாணம் செய்துகொண்டு சர்க்காரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அடங்கி இருக்கப்போகிறார்கள். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? தோழர் சத்தியமூர்த்தியாரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் இந்திய சட்ட சபையில் ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்யவில்லையா? ஏமாளிகளாகிய...

தோல்வி ஆனால் நன்மைக்கே

தோல்வி ஆனால் நன்மைக்கே

  தேர்தல் தொல்லை ஒழிந்தது போலவே தேர்தல் முடிவுபற்றிய கவலையும் ஒழிந்தது. எண்ணிக்கையில் காங்கிரஸ் பெருமை அடித்துக் கொள்ளத்தக்க அளவுக்கு அதிகமாக அடைந்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கட்சிப் பிரசாரமில்லாமலும் எதிரிகளால் சுமத்தப்பட்ட ஈனப்பழிகளும் மனதறிந்து பொய்ப் பிரசாரங்களும் பாமரமக்கள் மனதைக் கெடுத்து விடுமே என்கின்ற கவலையே சிறிதும் இல்லாமல் அலட்சியமாயும் ஆணவமாயும் இருந்து வந்த பலனை அடைந்து விட்டார்கள் என்றாலும் நிலைமையில் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாக யாரும் சொல்ல முடியாது. ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எவ்வித கெடுதியும் வந்து விட்டது என்றோ, இனிமேலாகிலும் வந்துவிடும் என்றோ யாரும் யோசிக்கவேண்டிய அவசியமில்லாத நிலைமையிலேயே இருக்கிறோம். எப்படியெனில் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான கொள்கை எல்லாம் அரசியலில் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவமும் சமுதாயத்துறையில் சமத்துவமும் அடையவேண்டும் என்பதேயாகும். மற்றபடி அரசியல் சுதந்திர விஷயத்தில் சாத்தியமான அளவுக்கு எவ்வளவு அதிதீவிரமான கொள்கையானாலும் அடைய ஆவலாகத்தான் இருந்து வருகிறது. ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் தக்க அளவுக்கு...

ஈணூ. நடேசன் நலிந்தார்

ஈணூ. நடேசன் நலிந்தார்

  டாக்டர் சி. நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம்நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி விஸ்வாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலுமிருக்கமாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமாகும். சூதற்றவனும் வஞ்சகமற்றவனும் உலகப்போட்டியில் ஒரு நாளும் வெற்றிபெறமாட்டான் என்கின்ற தீர்க்கதரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள் தனது தொண்டிற்கும் ஆர்வத்திற்கும் உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் சொந்தத்துக்கு அடையாமல் போனதில் நமக்கு சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கு என வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார். சென்னை வாசிகள் யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்கின்ற வேண்டுகோளின் மீது ஒருவார்த்தை சொல்லுகிறோம். அதாவது...

தேர்தல் கொந்தளிப்பு முடிந்து விட்டது

தேர்தல் கொந்தளிப்பு முடிந்து விட்டது

  சாகப்போகும் காயலாக்காரனுக்கு கோமாரி ஜன்னி கண்டால் பத்துப்பேர்கள் போட்டு அமிழ்த்தினாலும் திமிரிக்கொண்டு எழுந்திருக்கும் படியான பலம் ஏற்படுவதுண்டு. அதுபோல் காங்கிரஸ் கூப்பாட்டுக்கும் காலித்தனங்களுக்கும், பொய் பித்தலாட்டங்களுக்கும் போலி ஆணவங் களுக்கும் சாவுகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் பிணமாகி சுட்டுக்கொளுத்தப்பட்டு சாம்பலாக்கி கரைத்து விடப்படக்கூடிய நிலை காங்கிரசுக்கு எய்திவிட்டது. காங்கிரஸ்காரர்கள் தங்களால் ஆன சகல காரியங்களையும் செய்து பார்த்து விட்டார்கள். காங்கிரஸ் தேர்தல் கொந்தளிப்பு அடங்கி முடிவு தெரிவதற்கு முன்னாலேயே காங்கிரஸ் கொள்கையும் சவடால் வீரமும் செத்து அரசாங்கத்தின் காலுக்குள் நுழைந்து “வார்த்த அளவுக்குக் கஞ்சி வாருங்கள்” என்று இரு கை நீட்டிக் கெஞ்சும் நிலையைக் கொண்டுவந்து விட்டது என்பதில் யாரும் இனிச் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இதை ஆரம்ப காலத்திலிருந்தே நாம் எதிர்பார்த்ததே ஒழிய இந்த நிலை நாம் திடீரென்று மகிழ்ச்சி அடையத்தக்க சேதியல்ல. பட்டம் விடுதல், பள்ளி விடுதல், பதவி விடுதல், சட்டசபை விடுதல், சீர்திருத்தத்தைத்...

தோழர் சின்னயா பிள்ளை காங்கிரசிலிருந்து ஏன் விலகினார்?

தோழர் சின்னயா பிள்ளை காங்கிரசிலிருந்து ஏன் விலகினார்?

– ஒரு நிருபர்   தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசின் கட்டுப்பாட்டுக்கு விரோதமாய் காங்கிரசு அல்லாதவர்களுக்கு ஓட்டுப்பிரசாரம் செய்ததால் தனக்கு காங்கிரசில் இருக்க பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிவிட்டார். ஆச்சாரியார் தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாருக்கு ஒரு ஓட்டுப்போடுங்கள் என்று பிரசாரம் செய்தார். காங்கிரசுக்கு மாறாக வேறு பல அபேட்சகர்கள் நிற்கும் போது காங்கிரஸ் ஓட்டு வேறு அபேட்சகரை பலப்படுத்தினால் காங்கிரஸ் அபேட்சகர் பலவீனமடைய முடியாதா என்று கேட்டார். ஒவ்வொருவருக்கு மேல் சபைக்கு மூன்று ஓட்டுகள் இருந்தாலும் அந்த மூன்றையும் காங்கிரசு அபேட்சகரில் யார் பலவீனமானவர்களோ அவருக்கு ஒரு ஓட்டு அதிகமாய் போடும்படி செய்யாமல் அதை சாஸ்திரியாருக்கு போடும்படி சொன்னால் வேறு அபேட்சகரான தோழர் சாமியப்ப முதலியார் அவர்கள் மூன்று ஓட்டுகளும் தனக்கே போடும்படி சிலரைப் பிடித்து சரி செய்து கொண்டால் தனது சொந்த ஓட்டுக்களுடன் காங்கிரஸ் ஓட்டும் சேர்ந்து சாஸ்திரியார் வெற்றி பெறுவதுதான் நிச்சயமாகுமே தவிர மற்ற காங்கிரஸ் அபேட்சகரில்...