வாக்குறுதிப் பித்தலாட்டம் காங்கிரசின் கோழைத்தனம்

 

காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க மறுத்தது கோழைத்தனம் என்றே சொல்லுவோம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) மந்திரி பதவி ஏற்க எவ்வளவோ ஆசையாகவும் ஆத்திரமாகவும் இருந்தும் வெளி மாகாண காங்கிரஸ்காரர்களும் சில தலைவர்களும் மந்திரி பதவி ஏற்றால் வெளுத்துப் போகுமே என்று பயந்து மெல்ல முதுகு காட்டி விட்டார்கள்.

கவர்னர்களிடம் வாக்குறுதி கேட்பது என்பது பொது ஜனங்களை ஏமாற்றக் கண்டுபிடித்த வழியே ஒழிய அதில் எவ்வித அருத்தமும் இல்லை. இதை சென்ற வாரமே எடுத்துரைத்தோம். அப்படி இருந்தும் கவர்னர்கள் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல வார்த்தையே கொடுத்திருக்கிறார்கள். அதாவது சட்டப்படி தமக்கு உள்ள நிர்ப்பந்தங்கள் தவிர மற்ற விஷயங்களில் தன்னால் கூடியவரை எல்லா வழிகளிலும் ஒத்துழைத்து உதவி செய்வதாய்க் கூறியிருக்கிறார். இதை ஆச்சாரியார் பாராட்டி நன்றி செலுத்தி ஏற்றுக்கொண்டு போனவர் பிறகு என்ன காரணத்தாலோ மந்திரி பதவியை அமைக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். இது கவர்னர் அறிக்கையில் இருக்கிறது.

“ஏடிண் உதுஞிஞுடூடூஞுணஞிதூ டிணtடிட்ச்tஞுஞீ tடச்t Mணூ. கீச்டீச்ஞ்ணிணீச்டூச்ஞிடச்ணூடிச்ணூ ஞிணிதடூஞீ ணூஞுடூதூ தணீணிண ணூஞுஞிஞுடிதிடிணஞ் ச்டூடூ ணீணிண்ண்டிஞடூஞு டஞுடூணீ, ண்தூட்ணீச்tடதூ ச்ணஞீ ஞிணி-ணிணீஞுணூச்tடிணிண டிண tடஞு ஞுதிஞுணt ணிஞூ டடிண் ஞூணிணூட்டிணஞ் ச் Mடிணடிண்tணூதூ. அஞூtஞுணூ ச் ண்ஞுணூடிஞுண் ணிஞூ திஞுணூதூ ச்ட்டிஞிச்ஞடூஞு ஞிணிணதிஞுணூண்ச்tடிணிணண், Mணூ. கீச்டீச்ஞ்ணிணீச்டூச்ஞிடச்ணூடிச்ணூ டச்ண், தீடடிடூஞு ஞுதுணீணூஞுண்ண்டிணஞ் ச்ணீணீணூஞுஞிடிச்tடிணிண ணிஞூ டடிண் ஏடிண் உஞிஞுடூடூஞுணஞிதூ”ண் ச்ண்ண்தணூச்ணஞிஞுண், ஞூடிணச்டூடூதூ டிணtடிட்ச்tஞுஞீ tணி-ஞீச்தூ tடச்t டஞு டிண் தணச்ஞடூஞு tணி ச்ஞிஞிஞுணீt tடஞு டிணதிடிtச்tடிணிண tணி ச்ண்ண்டிண்t டிண ஞூணிணூட்டிணஞ் ச் Mடிணடிண்tணூதூ.”

அதாவது தோழர் ஆச்சாரியாருக்கு கவர்னர் தெரிவித்ததில் சில வாக்குறுதிகள் கொடுக்க சட்டப்படி எனக்கு அதிகாரமில்லை என்றும் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்பிலிருந்து தான் விலகிக்கொள்ள முடியாதென்றும் சொல்லி விட்டு “மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் தன்னை நம்பும் படியும் தன்னால் கூடிய எல்லா ஒத்துழைப்பையும் உதவியையும் ஆதரவையும் அன்பையும் அளிக்கத் தயாராய் இருப்பதாயும் சொன்னார்.

மற்றும் இருவரும் ஒரு தீர்மானத்துக்கு வரும்படியான அனேக விஷயங்களை மிகக் கருத்தோடு பேசிவிட்டு கவர்னரின் வாக்குறுதிகளைப் பாராட்டிவிட்டு இன்று முடிவாக மந்திரி சபை அமைக்க உதவி செய்ய வரமுடியாது என்று தெரிவித்து விட்டார்” என்று பிரைவேட் செகரட்டரி வெளியிட்டிருக்கிறார்.

ஆகவே தோழர் ஆச்சாரியார் கவர்னரிடம் பேசும்போதும் அவர் உதவி செய்வதாகவும் ஒத்துழைப்பதாகவும் வாக்குறுதி கொடுத்த போதும் அதற்குப் பின் அவரிடம் மேல் கொண்டு மற்ற காரியங்களைப் பற்றி பேசும்போதும் கவர்னர் வாக்குறுதி கொடுக்கவில்லை என்றோ அல்லது கொடுத்தது போதாது என்றோ கருதிக்கொண்டு ஆச்சாரியார் வீட்டுக்குப் போகவில்லை என்று தெரிகிறது. ஆனால் மற்ற மாகாணங்களில் இருந்து வந்த சேதிகள் தான் ஆச்சாரியாரின் ஆசையை கட்டுப்படுத்தி விட்டன. எப்படியானாலும் சரி, வாக்குறுதி எந்த விதத்தில் காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்பதை தடுத்து விட்டது என்பது நமக்கு புலனாகவில்லை. பார்லிமெண்டில் ஏற்பட்ட சட்டத்துக்கு கவர்னர் வாக்குறுதி எப்படி கொடுக்கமுடியும் என்பது யாரும் அறியாததல்ல. அப்படி கவர்னர்கள் ஏதாவது வாக்குறுதி கொடுக்க முடியுமானால் சென்னை கவர்னர் கொடுத்த வாக்குறுதிக்கு மேல் யாரும் கொடுக்க முடியாது. அவர் வெகுகாலமாகவே காங்கிரசுக்கு பல வழிகளிலும் உதவிசெய்து வந்திருக்கிறார். காங்கிரசு சார்பான அதிகாரிகளிடம் மிக்க சலுகை காட்டியும் வந்திருக்கிறார். ஆகையால் சட்டத்துக்கு விரோதமில்லாமல் கவர்னர்களுடைய சொந்த அதிகாரத்தின் பலன் காங்கிரசுக்கு அனுகூலமாய் இருக்கவேண்டுமென்று கருதி காங்கிரஸ் வாக்குறுதி கேட்டிருக்குமானால் அதற்கு சென்னை கவர்னர் வாக்குறுதி தேவைக்கு மேற்பட்டதென்றே சொல்லலாம். ஆனால் காங்கிரஸ்காரர்கள் பயந்து விட்டார்கள். தாங்கள் பொது ஜனங்களுக்கு கொடுத்த வாக்குறுதி இமயமலை போன்ற பெரியதாயும் தங்கள் கவர்னர்களிடம் வாங்கும் வாக்குறுதி கடுகளவு சிறியதாயும் இருப்பதோடு சட்டம் ஜஸ்டிஸ் கட்சியார் செய்த நன்மையைவிட அதிகமாய் ஒன்றும் செய்ய முடியாதபடி நிர்ப்பந்தமாயும் இருந்ததால் எப்படியாவது தப்பித்துக்கொண்டு ஓடுவதுதான் புத்திசாலித்தனமென்று கருதி புறமுதுகு காட்டிவிட்டு ஓடிவிட்டார்கள்.

காங்கிரஸ்காரர்கள் ஜெயித்து விட்ட மூன்றாம்நாளே காங்கிரஸ் பத்திரிக்கைகள் இனிமேல் என்ன செய்வது என்பது புரியாமல் அழத்தொடங்கிவிட்டன. எப்படியெனில்

“காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்றால் வரி இருக்காது என்று எண்ணுவது முட்டாள்தனமென்றும், படியாத பட்டிக்காட்டு மக்கள் அப்படி எண்ணுவது மாத்திரமல்லாமல் அந்தப் படி படித்தவர்களும் எண்ணுவது ஆச்சரியமாய் இருக்கிறது” என்றும் எழுதி மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப்போட்டவர்களையெல்லாம் மடையர்கள் என்று தாம் கருதியதை வெளிப்படுத்திக்கொண்டு விட்டன.

காங்கிரஸ் தலைவர்களும் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளப் போவதாகவே உறுதிகொண்டு “ஜனங்களுக்கு நன்மை செய்வது எங்கள் பிரதான நோக்கமல்ல, சீர்திருத்தத்தை உடைப்பதும் சுயராஜ்யத்தை நெருக்குவதும் தான் எங்கள் அபிப்பிராயம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ஆகவே மாகாண சுயாட்சி என்கின்ற பேரால் – இரட்டை ஆட்சி ஒழிந்தது என்கின்ற பேரால் முன் ஜஸ்டிஸ் மந்திரிகள் நடத்திய சீர்திருத்த ஆட்சியை விட அதிகமான அதிகாரம் வந்தும் ஜஸ்டிஸ் கட்சியினருக்கு இருந்ததை விட அதிகமான மெஜாரிட்டி இருந்தும் பதவி ஏற்று தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற லாயக்கில்லாமல் முதுகுகாட்டி பேடித்தனமாய் ஓடுவது என்பது காங்கிரஸ்காரர்கள் வாய்ச் சவடால்காரர்களே தவிர காரியத்துக்கு கையாலாகாத கோழைகள் என்றல்லாமல் வேறெதைக் காட்டுகின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.

சுமார் 10, 12 வருஷகாலமாகவே காங்கிரஸ்காரர்களுக்கு அரசியல் ஞானம் இல்லை என்றும் இன்னது செய்தால் இன்னது விளையும் என்கின்ற முன் யோசனை இல்லை என்றும் சொல்ல வந்திருக்கிறோம்.

தேர்தலில் வெற்றி பெறுவதே ஒரு வேலைத் திட்டமோ வீரத்தனமோ ஆகிவிடாது. அதிலும் இப்போதைய நிலையில் நமது பாமர மக்களுக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கும் அவர்கள் செய்த கட்டுப்பாடான பொய்ப் பிரசாரத்துக்கும் சென்ற தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் ஒரு டஜன் கழுதைகளையும் எருமைக்கிடாக்களையும் நிறுத்தி இருந்தால் கூட வெற்றி பெற்றிருப்பார்கள். காங்கிரஸ் பிரசாரமெல்லாம் மஞ்சள் பெட்டியை பொறுத்திருந்ததே தவிர மனுஷாளையோ அபேட்சகர்களையோ பொறுத்தில்லவே இல்லை. இம்மாதிரியான செல்வாக்கை எப்படியோ அடைந்து விட்டு அதை தாங்கமுடியாமல் பொறுப்பு வந்தவுடன் பயந்து கொண்டு ஒடி விட்டதானது பெரும் அரசியல் மோசடி என்றுதான் சொல்லவேண்டும். இவ்வளவோடு நிற்க மாட்டார்கள். இந்த பித்தலாட்டத்தை மறைக்க காங்கிரஸ்காரர்கள் இனி மறுபடியும் சண்டித்தனம் ஆரம்பிப்பார்கள் என்று எண்ண வேண்டியிருக்கிறது. மறுபடியும் மக்களை ஜெயிலுக்கு அனுப்புவார்கள். சோத்துக்கு வழியற்றவர்களும் சோம்பேறி வாழ்க்கையில் ஊறிவிட்டவர்களும் பகுத்தறிவற்றவர்களும் காங்கிரசுக்காரர்களுக்கு தாராளமாய் கிடைக்கக்கூடும். அவர்களை கைமுதலாக வைத்து ஒரு கை பார்க்கப்போகிறார்கள். இதுவரை காங்கிரஸ்காரர்கள் செய்துவந்த சகல காரியங்களும் ஒரு பயனும் தராமல் போனதை நமது மக்கள் உணர்ந்திருந்தும் பிரசார பலத்தால் காங்கிரசினிடம் ஜனங்களுக்கு ஒரு பைத்தியம் இருந்து வருகிறது. அது இனியும் இருந்து வருமா என்பதையும் எத்தனை நாளைக்கு மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏமாற்றுவார்கள் என்பதையும் பார்ப்போமாக.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 04.04.1937

You may also like...