கேளம்பாக்கத்தில்  சுயமரியாதைத் திருமணம்

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இல்வாழ்க்கை நடத்துவதேயாகும். ஆனால் இப்போது நமது இந்து மதத்தில் திருமண விஷயத்தில் நடைபெறும் கொடுமையைவிட வேறு எந்த மதத்திலும் நடைபெறுவதில்லை. திருமண விஷயத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது, தாய் தந்தையர்கள் பார்த்து மொண்டியையோ, கிழவனையோ திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறோம். அதற்குக் கட்டுப்பட்டு அப்பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விபசாரம் கற்பிக்கிறோம். மகமதிய மதத்தில் பெண்களுக்குக் கோஷா முறை இருந்தாலும் திருமண விஷயத்தில் உரிமை வழங்கி இருக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்து மதத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கி வருகிறார்கள்.

குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு அடுத்த படூரில் 04.04.1937 ஆம் நாள் நடைபெற்ற தோழர் வி.டி. ஏழுமலை – தோழர் கே. இராதாபாய் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் சுருக்கம்.

குடி அரசு – சொற்பொழிவு – 11.04.1937

You may also like...