என்ன?

“பார்ப்பனரல்லாதார் கட்சி தோற்று விட்டது” என்று நீலிக்கண்ணீர் விடும் தோழர்களே!

தலைவர்களையும், பாடுபட்டவர்களையும் குறை கூறும் தோழர்களே!!

நீங்கள் அக்கட்சி நலத்துக்கு ஆக என்று என்ன செய்தீர்கள்!!!

ஆங்கிலம் கற்று உத்தியோகத்திலிருக்கும் பார்ப்பனரல்லாதாரும் வக்கீல் பார்ப்பனரல்லாதாரும் அக்கட்சியின் பேரால் மனிதர் என்று மதிக்கப்பட்டு பயன் பெற்றவர்களும் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு சந்தாதாரராகிப் படித்திருப்பீர்களா?

அல்லது வெட்கப்படும் தமிழ் மக்களாவது ஒவ்வொருவரும் “குடி அரசு” “விடுதலை” வாங்கி படித்திருப்பீர்களா?

அப்படியானால் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கும், “விடுதலை” வார இருமுறை பத்திரிகைக்கும், “குடி அரசு”க்கும் முறையே N 2500, 1000, 250 ரூ.வீதம் நஷ்டம் ஏற்படுவானேன்?

பார்ப்பனர்களைப் பாருங்கள், அவர்கள் முயற்சியை பாருங்கள், அவர்கள் பத்திரிக்கைகளை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் ஆதரிக்கிறார்கள், பாருங்கள்.

ஆகவே கட்சி ஏன் ஜெயிக்கவில்லை? யாரால்? என்பதை இப்போதாவது உணருங்கள்.

ஆத்திரப்படுவதில் பயனில்லை.

இப்படிக்கு

கட்சியால் கடுகளவும் பயன் பெறாதவன்.

குடி அரசு – வேண்டுகோள் – 14.03.1937

You may also like...