ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி ஏற்கக்கூடாது ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு ஈ.வெ.ரா. தந்தி

 

ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளலாமா என்கின்ற பிரச்சினையின் மீது தோழர் ஈ.வெ. ராமசாமி கட்சித் தலைவரான பொப்பிலி ராஜா அவர்களுக்கு திருவாரூரிலிருந்து 29-ந்தேதி தந்தி மூலம் தெரிவித்த அபிப்பிராயம்.

“ஜஸ்டிஸ் கட்சியானது நன்றியற்றதும் பொறுப்பை உணராததுமான அரசாங்கத்தில் இப்போது கண்டிப்பாக மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது. சர்க்கார் அதிகாரிகளும் சிப்பந்திகளும் நமது கட்சிக்கு செய்த அட்டூழியங்களையும் விஸ்வாசமற்ற தன்மையையும் பற்றி சர்க்கார் சிறிது கூட கவலை எடுத்துக்கொள்ளவில்லை. பதவி ஏற்றுக்கொண்டால் நமது வேலை மிகவும் கஷ்டமாகிவிடும்.”

என்று தெரிவித்து விட்டார். அந்தப்படியே தலைவரும் ஒத்துக்கொள்ள முடியாதென்று கவர்னரிடம் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

குடி அரசு – வேண்டுகோள் – 04.04.1937

You may also like...