பார்ப்பனரல்லாதாருக்குப்  பத்திரிகை இல்லை அறிக்கை

 

“ஜனநாயகம்” நின்று விட்டது. “திராவிடன்” மறைந்து 4, 5 வருஷங்கள் ஆகிவிட்டன. “தமிழ்நாடு”ம் அனேகமாய் மறைந்து விட்டது என்றே சொல்லலாம். “விடுதலை” இப்பவோ பின்னையோ என்று இருக்கிறது. மற்றும் வாரப் பத்திரிக்கைகள் பலவற்றில் பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தைக் குறி வைத்து நடத்தப்பட்டு வந்தவைகள் பல ஒழிந்துவிட்டன. இரண்டொன்று பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படுகின்றன என்றாலும் அவைகள் பார்ப்பனரல்லாதார் குறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வகுப்புவாதம் என்று எழுதி பார்ப்பனர்களுக்கு அடிமையாகவே ஆகி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வையும் வேலையில் ஈடுபட்டு வாழவேண்டிய நிலையில் இருக்கின்றன. மற்றபடி வேறு எங்காவது ஒன்று இரண்டு வாரப்பத்திரிக்கையோ மாதப் பத்திரிக்கையோ இருந்தால் அவைகளும் காங்கிரஸ் பத்திரிகையாகத்தான் இருந்து வருகின்றன.

“விதிவிலக்காக” “குடி அரசு”, “நகரதூதன்”, “விடுதலை” முதலாகிய பத்திரிகைகள் இருந்த போதிலும் அவைகள் இன்று வாரப்பத்திரிக்கைகளாக இருக்கின்றனவே ஒழிய தினப் பத்திரிகை இன்று பார்ப்பனரல்லாதார் குறைகளை நீக்கவோ நாட்டு நடவடிக்கைகளின் உண்மையை எடுத்துச் சொல்லவோ, ஒன்று கூட இல்லவே இல்லை. எல்லாம் பார்ப்பனப் பத்திரிக்கைகளாகவே இருக்கின்றன. பார்ப்பனீயத்துக்கு உழைப்பனவாகவே இருக்கின்றன. அவை (பார்ப்பன தினசரிப் பத்திரிக்கைகள்) ஒரே கட்டுப்பாடாக பார்ப்பனரல்லாதார் சமூக நலன் சம்மந்தமான சகல விஷயங்களையும் வேண்டுமென்றே மறைத்து வருவதோடு விரோதமாகவும் வேண்டுமென்றே திரித்தும் கற்பனையாகவும் அனேக விஷயங்களை பிரசுரித்து மக்களை பார்ப்பனரல்லாத பிரமுகர்கள், தலைவர்கள் ஆகியவர்கள் மீது தப்பபிப்பிராயம் கொள்ளும்படி செய்து சகல காரியங்களையும் கெடுத்து வருகின்றன. எவ்வளவு நியாயமான விஷயமானாலும் அதை கிரமமாக எடுத்துச் சொல்லுவதன் மூலம் தான் நியாயம் விளங்குமே அல்லாமல் தானாக விளங்கி விடாது. நல்ல கெட்டிக்கார வக்கீலை வைப்பதினால் தப்பான – பொய்யான வழக்குகள் வெற்றிபெற்று விடுகின்றன. திறமையற்ற வக்கீலை வைப்பதினால் உண்மையான வழக்குகள் தோல்வி அடைந்து விடுகின்றன. அதுபோலத்தான் இன்றைய அரசியல், சமூக இயல் விஷயங்களில் நியாயமான விஷயங்களை மக்கள் தவறுதலாய் உணரும்படியும் தவறான காரியங்களை மக்கள் சரியானதென்று உணரும்படியாகவும் செய்து தனிப்பட்ட ஒரு கூட்டத்தாரே – பார்ப்பனர்களே உலக போக போக்கியங்களை தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக்கொண்டு மற்ற மக்களை தங்களுக்கு அடிமையாய் இருந்தாலொழிய வாழமுடியாத நிலையில் இருத்தி வைத்திருக்கிறார்கள்.

சட்டசபை தேர்தல் நடந்து 2லீ மாதங்கள் ஆகிவிட்டன. பொது ஜனங்களின் ஆதரவு தங்களுக்கே இருந்து வருவதாகப் பெருமை பேசிக்கொள்ளும் பார்ப்பனர்கள் – காங்கிரசுக்காரர்கள் தவறான வழியில் வெற்றி பெற்று விட்டதால் அத்தவறை மறைத்துக்கொள்வதற்கு ஆக ஏதோ பொருத்தமற்ற காரணங்களைச் சொல்லிக்கொண்டு அரசியல் உலகைப் பாழாக்கி வருகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் காங்கிரசுக்காரர்களது தவறுதல்களையும், முட்டாள் தனமான காரியங்களையும் அவர்கள் செய்துவரும் பித்தலாட்டங்களையும் பொதுஜனங்களுக்கு அறிவிப்பதற்கு பத்திரிகை இல்லாமல் போய்விட்டதேயாகும்.

நாளைக்கு காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டாலும் அதை ஏற்று அவர்கள் செய்யும் தவறுதல்களையும் சுயநல சூழ்ச்சிகளையும் அவ்வப்போது வெளியிட்டுவர பத்திரிக்கைகள் இல்லையானால் அவர்கள் – பார்ப்பனர்கள் சமூக இயலில் மற்ற சமூகங்களை அடியோடு பாதாளத்தில் தள்ளிவிட்டு பழைய காலப்படி பூதேவர்களாக ஆகிவிடுவார்கள். அரசியலிலும் பழையபடியே சகல இலாக்காவிலும் புகுந்து அக்கிரார ஆò ஆக்கிக்கொள்வார்கள். இவற்றை பார்ப்பனரல்லாத மக்கள் சரியாக உணர்ந்து கொள்ளாமல் அலòயமாக இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

இம்மாதம் 9-ந் தேதி சென்னையில் கூடும் பார்ப்பனரல்லாதார் கò (ஜஸ்டிஸ் கò) நிர்வாக சபைக் கூட்டத்தில் “விடுதலை”யை தினசரியாக நடத்த அக்கò பிரமுகர்கள் ஒப்புக்கொள்ளாத பக்ஷம் ஈரோட்டில் “குடி அரசு” ஆபீசில் இருந்து ஒரு காலணா தினசரி ஆரம்பித்து நடத்த உத்தேசித்து இருக்கிறோம். அதற்கு குறைந்தது ஒரு வருஷ காலத்துக்கு ஆவது N 500ரூ. நஷ்டமேற்படலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது சுமார் N 300 ரூபாய்வரை செலவை சொந்தப் பொறுப்பு ஆக்கிக்கொள்ளப்பட்டும் N 500 ரூ. நட்டம் ஏற்பட்டு தீரும்போல் இருக்கிறது. இதற்கு ஆக N 50 ரூபாய் வீதம் ஒரு வருஷத்துக்கு உதவுபவர்கள் 5 பேரும் N 25ரூ வீதம் ஒரு வருஷத்துக்கு உதவுபவர்கள் 10 பேரும் முன் வந்தால் கண்டிப்பாக தினசரி பத்திரிக்கை ஆரம்பித்து விடலாம் என்று உத்தேசித்து இருக்கிறோம். இதுவரை 50 ரூபாய்க்கு ஒருவரும் 25 ரூபாய்க்கு மூவரும் உதவுவதாக முன் வந்திருக்கிறார்கள். பாக்கிக்கு சில தோழர்களை சந்திக்க உத்தேசித்து இருக்கிறோம். காகித விலை அபாரமாய் ஏறிவிட்டது. பவுன்ட் 0-1-3 ஆக இருந்தது. இப்போது 0-2-3 ஆக இருக்கிறது.

நாம் உத்தேசித்து இருக்கும் சைஸ்ஸாகிய குடி அரசு அளவு 8 பக்கம் 3000 பத்திரிக்கை (ஆரம்பம்) வீதம் தினம் பிரசுரிப்பதாய் இருந்தாலும் காகித விலை மாத்திரம் N 600 ரூபாய்க்கு மேல் ஆகும். அச்சுக்கூலி, ஆசிரியர் குழாம் முதலியவைகள் N 400ரூ. ஆகலாம், ரயில் பார்சல் சார்ஜ் குறைந்தது N 200 ஆகலாம். ஸ்டாம்புகள் N 100ரூ. ஆகலாம். ஆக மொத்தம் குறைந்தது N 1300 ரூபாய் செலவு ஏற்படலாம். இதில் குறிப்பிட்டவர்கள் பண உதவியும் சொந்தப் பொறுப்பும் பத்திரிக்கை வருமானமும் N 800ரூ. எதிர்பார்த்து N 500 ரூபாயே நட்டம் எதிர்பார்க்கப் படுகிறது. எப்படியானாலும் ஒரு வருஷத்துக்கு நடத்திவிட்டால் அடுத்த வருஷம் தன் காலில் நிற்கும் சக்தியை பத்திரிகை அடையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பத்திரிகை ஈரோட்டில் நடத்தப்பட்டால் மாத்திரமே இந்த நஷ்டத்தில் நடக்க முடியும். இல்லாதவரை N 1000 ரூபாய் நஷ்டம் எதிர்பார்த்தாக வேண்டும். இப்பத்திரிகை காங்கிரஸ் பித்தலாட்டங்களையும் உண்மை நடப்புகளையும் வெளியாக்குவதைத் தான் முக்கிய வேலையாய்க் கொள்ளும். பிறகு செளகரியப்பட்டால் பல செளகரியமான காரியங்களும் இதனிடம் எதிர்பார்க்கலாம். ஆதலால் இந்த அளவுக்கே இப்போதே இந்த அபிப்பிராயத்தை வெளியிடுகிறோம்.

ஏனெனில் இந்த 2 மாத காலத்துக்குள் தினசரி பத்திரிகையை நடத்தவேண்டுமென்று கோரி பல தீர்மானங்கள் பல இடத்திலிருந்து நிறைவேற்றி அனுப்பப்பட்டிருப்பதோடு சுமார் 40, 50 கடிதங்கள் வரை இது விஷயமாய் நம் மீது குறை கூறியும் எழுதப்பட்டிருப்பதால் நமது அபிப்பிராயத்தை இதன் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். ஆங்காங்குள்ளவர்கள் கவனித்து N 25 ரூபாய்க்கு பொறுப்புள்ளவர்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பினால் சீக்கிரம் பத்திரிகை துவக்க அனுகூலப்படும் என்று கருதுகிறோம்.

மற்றபடி ஒரு ஸ்தாபனமோ ஒரு கமிட்டியோ பத்திரிகை நடத்துவ தென்றால் அது முடியாத காரியமென்றே கருதுகிறோம். இதுவரை ஜஸ்டிஸ் பத்திரிக்கைகளுக்கு ஆக 4, 5 லக்ஷ ரூபாய் செலவு செய்தும் இன்னமும் N 2000, 3000, 4000 ரூ. கைப்பொறுப்பில்தான் நடைபெறுகின்றன.

தனிப்பட்டவர்கள் முயற்சி இல்லாமல் பொது முயற்சியாகி நடப்பதானால் நடத்தும் சிப்பந்திகளால் ஒரு ரூபாய் ஒரு அணாவாகக்கூட மதிக்கப்படுவதில்லை. “யார் சொத்தோ போனால் போகிறது, நமக்கென்ன? அனுபவித்தவரை லாபம்” என்கின்ற மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. தனி முயற்சி இல்லாதிருக்குமானால் “குடி அரசு” கூட வெகு நாளைக்கு முன்னமே மறைந்திருக்கும். ஆதலால் தான் இம்மாதிரி முயற்சி செய்யப் படுகிறது என்பதை வாசகர்கள் உணரவேண்டுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 09.05.1937

~cstart

“சுதேசமித்திர”னின் விஷமம்

~cmatter

அனாமத்து மந்திரிகள் என்னும் இடைக்கால மந்திரிகள் விஷயத்தில் பார்ப்பனர்கள் வேண்டுமென்றே அயோக்கியத்தனமாக விஷமப்பிரசாரம் செய்து வருவது பற்றியும் தோழர் ராஜ கோபாலாச்சாரியார் கோஷ்டி செய்துவரும் இழி பிரசாரங்களைப் பற்றியும் பலதடவை எழுதி இருக்கிறோம். காங்கிரஸ் பத்திரிக்கைகள் – தேசீயப் பத்திரிகைகள் என்பவைகளும் சிறிதும் மானம், ஈனம் என்பவை இல்லாமல் தங்கள் சுபாவங்களை காட்டி வருகின்றன. எவ்வளவு எழுதினாலும் சிறிதும் அவைகளுக்கு ரோஷம் உண்டாக்க முடிவதில்லை. எப்படியாவது ஜனங்களை முட்டாள்களாக்கி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டவேண்டும் என்பதைத் தவிர வேறு இலட்சியமே இல்லாமல் நடந்து வருகின்றன.

“உதாரணமாக 5-5-37ந் தேதி மித்திர”னில் “இவ்வருஷம் இல்லையாம்” என்னும் தலையங்க தலைப்பின் கீழ் இடைக்கால மந்திரிகள் இவ்வருஷம் வரி குறைக்கவில்லை என்றும், அடுத்த வருஷத்துக்குத் தான் வரி குறைப்பார்களாம் என்றும், ஆகவே விவசாயிகளுக்கு கையை விரித்து விட்டார்கள் என்றும், ஏன் இந்தப் பசலியிலேயே குறைத்து இருக்கக் கூடாது என்றும் ஆகவே அவர்கள் சொல்லுவது உண்மையல்ல என்று கருதும்படி எழுதி இருக்கிறது.

இதில் எவ்வளவு அயோக்கியத்தனம் இருக்கிறது என்பதை பொது ஜனங்கள் உணர வேண்டுகிறோம்.

இடைக்கால மந்திரிகள் பதவி ஏற்றது ஏப்ரல் முதல் தேதியில் என்பதும் அவர்கள் வரவு செலவு புள்ளிகள் தயாரித்துப்பார்க்க நேர்ந்தது ஏப்ரல் 10, 20-ந் தேதிகளுக்குப் பின்தான் செளகரியமாயிருக்கு மென்பதும் அதற்குள் வரிகள் பெரிதும் வசூலிக்கப்பட்டு இருக்கும் என்பதும் பொது ஜனங்கள் உணர்ந்ததேயாகும். 100-க்கு 25 வீதம் வரி குறைக்கும்படியான பெரிய திட்டத்தைப் போடுகிறார்கள். வசூலான பணத்தை – தாங்கள் பதவிக்கு வருமுன் வசூலிக்கப்பட்ட பணத்தை ஏன் திருப்பிக்கொடுக்கவில்லை என்று கேட்பதில் ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்க முடியுமா என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறோம்.

ஆகவே எது செய்தாலும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்துக்கு ஆகவே குறை கூறி விஷமம் செய்வது என்பது இப்பார்ப்பனக் கூட்டத்திற்கு என்று ஒழியுமோ?

குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.05.1937

You may also like...