அருஞ்சொற்பொருள்
அருஞ்சொல் பொருள் அனுகூலித்தவர் – உதவி செய்தவர் அசூயை – பொறாமை, அவதூறு அதட்டியினால் – தாக்கத்தால், அழுத்தத்தால் அதப்பிராயம் – மதிப்பு அபுரூபன் – மிக அழகுள்ளவன் அனந்தம் – அளவில்லாதது அஷ்டகோணல் – எட்டுவிதமாய் திருகிக்கொண்டு ஆசிக்கிறேன் – விரும்புகிறேன் ஆவாகனம் – அக்கினிக்குப் பலி கொடுத்தல்(தன்வயப்படுத்திக்கொள்ளுதல்) இதோபதேசம் – நல்லறிவுரை இரண்டருத்தம் – இருபொருள்படும்படி உப அத்யக்ஷரர் – துணைவேந்தர் எதாஸ்திதித்துவம் – உள்ள நிலையே தொடர்வது, பழமையைப் பாதுகாப்பது ஏகாங்கி – தனித்திருப்பவன் கணங்களுக்கு – கூட்டத்திற்கு கண்டனை – கண்டிக்கை கண்யம் செய்கின்றனவா? – மதிக்கின்றனவா? குச்சுக்காரத்தனம் – விபசாரத்தனம் சங்கல்பம் – கொள்கை சங்கேத இடம் – குறிப்பிட்ட இடம் சங்கை – எண்ணம் சம்பாஷித்தல் – உரையாடுதல் சாய்க்கால் – செல்வாக்கு சிடுக்கை – சிட்டிகை (பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து எடுக்கும் அளவு) சொக்கட்டானாட்டம் – சூதாட்டம் (பந்தயம்...