அருஞ்சொற்பொருள்
அருஞ்சொல் பொருள்
அனுகூலித்தவர் – உதவி செய்தவர்
அசூயை – பொறாமை, அவதூறு
அதட்டியினால் – தாக்கத்தால், அழுத்தத்தால்
அதப்பிராயம் – மதிப்பு
அபுரூபன் – மிக அழகுள்ளவன்
அனந்தம் – அளவில்லாதது
அஷ்டகோணல் – எட்டுவிதமாய் திருகிக்கொண்டு
ஆசிக்கிறேன் – விரும்புகிறேன்
ஆவாகனம் – அக்கினிக்குப் பலி கொடுத்தல்(தன்வயப்படுத்திக்கொள்ளுதல்)
இதோபதேசம் – நல்லறிவுரை
இரண்டருத்தம் – இருபொருள்படும்படி
உப அத்யக்ஷரர் – துணைவேந்தர்
எதாஸ்திதித்துவம் – உள்ள நிலையே தொடர்வது, பழமையைப் பாதுகாப்பது
ஏகாங்கி – தனித்திருப்பவன்
கணங்களுக்கு – கூட்டத்திற்கு
கண்டனை – கண்டிக்கை
கண்யம் செய்கின்றனவா? – மதிக்கின்றனவா?
குச்சுக்காரத்தனம் – விபசாரத்தனம்
சங்கல்பம் – கொள்கை
சங்கேத இடம் – குறிப்பிட்ட இடம்
சங்கை – எண்ணம்
சம்பாஷித்தல் – உரையாடுதல்
சாய்க்கால் – செல்வாக்கு
சிடுக்கை – சிட்டிகை (பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து எடுக்கும் அளவு)
சொக்கட்டானாட்டம் – சூதாட்டம் (பந்தயம் கட்டி விளையாடும் தாய விளையாட்டு)
சௌகார் – வடநாட்டு முதலாளி
தத்தம் – நீர்வார்த்துக் கொடுக்கும் கொடை
தியங்கவிட்டு – கலங்கவிட்டு
தின்மை – தீமை
நாசகாலன் – பொருளை அழிப்பவன், கொடியோன்
நாயாடிகள் – திருவிதாங்கூரில் உள்ள காட்டுச் சாதியார்
நிமித்தியம் – சகுனம்
நியாய ரஹிதமாக – நியாய விரோதமாக
நிர்தாக்ஷண்யம் – இரக்கமின்மை
பத்துவளி – ஊதியத்துக்கும் மேலதிகமாக வாங்கியுள்ள தொகை
பந்தகம் – அடமானம், சார்ந்திருத்தல், முடிச்சு
பச்சகானாக்கள் – கூத்தாட்டுச் சிறார்கள், சிறுபிள்ளைத்தனமானவர்கள்
பரத்தில் – மேல் உலகில்
பரதவிக்க – வருந்த
பரியந்தம் – எல்லை
பாரியாள் – மனைவி
பிரதான்யம் – முக்கியம், முதன்மை இடம்
பிரலாபம் – புலம்பல்
வர்மம் – உட்பகை
வனபோஜனம் – காடுகளுக்குள் இயற்கைச் சூழலில் இருந்து உண்ணும் விருந்து
விடுத்தமாவது – தடவையாவது
விசிதமாக – வெளிப்படையாக
3000த்துச் சில்வானம் – 3000த்துச் சொச்சம்
க்ஷய ரோகம் – காசநோய்
ஸ்தாயி – குரல் அளவு
ஜக்காத் – இஸ்லாத்தில் அய்ந்து கடமைகளுள் ஒன்று (தருமம் செய்தல்)
ஜுரிகள் (Jury) – நீதிமன்றத்தில் நடுவர்களுக்கு உதவியா யிருப்பவர்கள்
ஹலாலாக்கி – மதத்தால் தடைசெய்யப்பட்டது
அதிதி – விருந்தினர், புதியவர்
அவடத்திய கடாஷத்தால் – அவ்விடத்து பெரும் அருளால்
அவிழ்தம் – மருந்து
அக்ஷராப்பியாசம் – எழுத்துப்பயிற்சி (முதன் முதலாக எழுதக் கற்றுத் தருதல்)
ஆகுதி – அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம்
உஞ்சவிருத்தி – அரிசிப் பிச்சை யெடுத்து நடத்தும் வாழ்க்கை
உபாதானம் – அரிசிப் பிச்சை
உளமாந்தை – கடு நோய், உட்புண்
கபாத்து – போர்வீரர்கள் பயிலும் உடற்பயிற்சி
கலாபம் – கலகம்
காட்டுப் பிரவாகம் – காட்டாற்று வெள்ளம்
காலாடிகள் – தொழிலற்றுத் திரிவோர்கள்
கூடார்ந்த – உட்கருத்து, மறைபொருட்கருத்து
கொட்டணம் – நெற்குற்றுகை
சண்ட மாருதம் – பெருங்காற்று
சதாசாரம் – நல்லொழுக்கம்
சந்தியா வந்தனம் – காலை, உச்சி, மாலைகளில் வேதமந்திரங்களால் செய்யும் வழிபாடு
சம்சயம் – அய்யம், சந்தேகம்
சன்னது – விருது, பட்டம்
சாங்கோபாங்கமாக – முழுமையாக
சிக்ஷை – தண்டனை,
சொண்டு – குழிவு, செருக்கு
ஞாபகஸ்தம்பம் – நினைவுத் தூண்
டயார்க்கி கவர்ண்மென்ட் – இரட்டை ஆட்சி
தவரத் தெரியாத – தவழ்ந்து போகத் தெரியாத
தாயாதி – ஒரு குடியில் பிறந்த உரிமைப் பங்காளி
நிர்ப்பயம் – பயமில்லாமல்
நிரக்ஷரகுஷி – எழுத்தறிவற்றவன்
நிஷ்டூரம் – கொடுமை,
பலிதமாகாமல் – பலிக்காமல், வெற்றி பெறாமல்
பரதவிக்க – வருந்த
பரியந்தம் – எல்லை, வரைக்கும்
பஹுமானம் – பாராட்டு, பரிசு, வெகுமானம்
பாரியாள் – மனைவி
பிரக்யாதி – புகழ்
பிரசங்கி – பேச்சாளர்
பிரஸ்தாபிக்க முடியவில்லை – அறிவிக்க முடியவில்லை
புரணமான – தோன்றுகின்ற, மயக்கமான
பெற்றி – பெருமை
மாரீச – ஏமாற்று
முட்டு – தடை, குறைவு
முச்சலிக்கா – உடன்படிக்கைப் பத்திரம்
வதியும் – தங்கியிருக்கும்
வஜா – நிலவரி தள்ளுபடி
வாத்சல்யம் – அன்பு, பாசம்
வாயல் – பக்கம்
விசதமாக – விரிவாக
விபசாரக் குச்சுகள் – விபச்சார விடுதிகள்
ஸ்தன்னியங்கள் – தனங்கள், மார்பகங்கள்
ஸ்பஷ்டமாக – தெளிவாக
விருதா செலவு – வீணான செலவு