Category: திவிக
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் சென்னை 15072017
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம். நாள் : 15.07.2017, சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 மணிக்கு இடம் : வி.எம் தெரு, இராயப்பேட்டை, சென்னை -14 வரலாற்றை நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றுவோர் : தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி (பெரியாரும் காமராசரும்) தோழர்.பழ.கருப்பையா (காமராசரும் சமூக நீதியும்) தோழர்.விடுதலை க.இராசேந்திரன் (காமராசரின் இன்றைய தேவை) மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள். விரட்டு கலைக்குழுவினரின் சமூக நீதி – ஜாதி எதிர்ப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும். “காமராசரின் பிறந்தநாளில் அந்த வரலாறுகளை நினைவு கூறுவதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருமை அடைகிறது. இது காலத்தின் தேவையாகிறது”. வாருங்கள் தோழர்களே காமராசரின் பிறந்தநாளில் அவரின் வரலாற்றை நினைவு கூறுவோம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் 16072017
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! திருப்பூர் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், கழகத் தலைவர் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 16.07.2016 ஞாயிறு நேரம் : மாலை 6 மணி. இடம் : இடுவம்பாளையம், திருப்பூர் சிறப்புரை: தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெறும். மந்திரமல்ல தந்திரமே ! காவை. இளவரசன் அவர்களின் அறிவியல் விளக்க நிகழ்சியும் நடைபெறும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகை காயத்ரி ரகுராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு மதுரை 12072017
சேரி behavior என்றும் மீனவர்களை குடிகாரர்கள் என்றும் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகை காயத்ரி ரகுராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அந்த பேச்சுக்களை வெளியிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரியும் மதுரையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் துனை ஆணையாளர் மகேஷ் குமார் அவர்களிடம் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஆணையாளர் நம்மிடம் உறுதி அளித்துள்ளார். உடன் மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி, மாநகர தலைவர் தமிழ் பிரபாகரன், அழகர் பிரபாகரன் சத்திய மூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்
தோழர் நீதி அரேசர் கைது குமரி 08072017
மக்களைச் சமதர்மம் அடையச் செய்யும் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்கத்துடிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத்தின் குமரி மாவட்ட வருகையைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி (08-07-2017.சனிக்கிழமை)காட்டச்சென்ற கழகத் தோழர் நீதி அரசர் அவர்களை காவல் துறை கைதுச்செய்து பிணை வழங்காமல் 15 நாள் காவலில் வைத்தது. தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களை மதத்தால் உசுப்பி சண்டைப் போடவைத்துவிட்டு அதில் குளிர் காயும் பார்ப்பன மத வெறியருக்கு பாதுகாப்பும்,மக்களுக்காக போராடும் போராளிகளுக்குச் சிறையும் வழங்கும் காவல் துறைக்கு குமரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இடஒதுக்கீட்டு முறையால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இடஒதுக்கீடை ஒழிக்கும் பார்ப்பனனுக்கு ஆதரவாக செயல்படுவது வருந்தத்தக்கது.
சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான ஐ. நா. வின் அகில உலக ஆதரவு நாள் மதுரை 27062017
சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான ஐ. நா. வின் அகில உலக ஆதரவு நாளினை முன்னிட்டு பொதுக்கூட்டம் 27.06.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு விக்டோரியா எட்வெர்ட் திறந்தவெளி அரங்கம் (ரயில் நிலையம் அருகில்) மதுரையில் நடைபெற உள்ளது இதற்கான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம் தங்கள் இதில் பங்கேற்று கருத்துரை வழங்க அன்புடன் அழைக்கிறோம் “சித்திரவதையற்ற உலகு அமைய அணியமாவோம்!” தொடர்புக்கு 99943-68502 9952315757
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 21062017
மாட்டுக்கறியை தடைக்கு தடை விதிக்கும் மதவாத மோடி அரசைக் கண்டித்து…. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒன்றை பண்பாட்டை திணிக்க முயற்சிக்கும் மோடி அரசே.! மாட்டுக்கறி மீதான தடை நீக்கப்படவில்லை எனில் திராவிட நாடு மலர்ந்தே தீரும்.! என்ற கண்டன முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக காஞ்சிபுரம், தாலுக்கா அலுவலகம் எதிரில்…திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் இயக்க தோழர்களும் இணைந்து இன்று (21.06.2017) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் யாதவ சாஷில பரிபரன சபை மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363
சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று! – நடைபயணம் விழுப்புரம் 15062017
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் தலைமையில், ”சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று!” என்ற கோரிக்கையை முன்வைத்து 25 தோழர்களுடன் நடைபயணத்தை 9-6-2017 அன்று சேலத்தில் தொடங்கினர்.. பயணக்குழு வழியில் உள்ள கிராமங்களில் உரை, பாடல்கள், நாடகங்கள் வழியாக கோரிக்கையை விளக்கியவாறு 15 நாட்கள் பயணித்து சென்னையை அடைகின்றனர்.. 15-6-2017 அன்று மாலை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள அரசூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்டக் கழகத் தலைவர் மதியழகன், கழகத் தோழர் மகாலிங்கம், கண்ணன் ஆகியோரோடு பயணக் குழுவினரை வரவேற்று அவர்களுடன் விழுப்புரம் வரை நடந்துசென்றனர். விழுப்புரத்தில் நடந்த பயணக் குழு வரவேற்புப் பொதுக் கூட்டத்தில், மாநில ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் தோழர் வாலண்டினா, பயணக்குழுத் தலைவர் தோழர் சாமுவேல்ராஜ், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பயண நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினர்.
சே குவாராவின் 90ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருச்செங்கோடு 14062017
14-6-2017 அன்று மாலை 6-00 மணியளவில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையத் திடலில், இராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “சே குவாராவின் 90ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நகரக் கழகத் தலைவர் பிடல் சே குவேரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவினரின் பகுத்தறிவு, ஜாதியொழிப்புப் பாடல்கள் பாடப்பட்டன. பொதுக்கூட்டத்தில் இர. சுமதி வரவேற்புரயாற்றினார். தொடர்ந்து இராசிபுரம் கழகத் தோழர் மலர், பள்ளிபாளையம் முத்துபாண்டி, கழக அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ஆகியோரைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர், அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூப நாட்டு விடுதலைக்குப் போராடி, அந்நாடு விடுதலை அடைந்த பின்னர், அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப் பட்டு தலைமை அமைச்சராய், திட்ட அமைச்சராய், தேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னராய் நியமிக்கப்பட்ட பின்னரும், அண்டை நாடான பொலிவியாவில் நடைபெற்ற விடுதலைப் போரில் கலந்துகொள்ளச் சென்று அங்கு...
மய்ய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம் கரூர் 07062017
07062017 புதன்கிழமையன்று மாலை 5-00 மணியளவில் கரூர் திருநீலகண்டர் திருமண மண்டபத்தில், கரூர் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக ‘ மய்ய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம், ஆசிரியர் மா.இராமசாமி அவ்ர்களின் தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காமராஜ் வரவேற்புரையாற்றினார். த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் தனபால், கரூர் வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன், காவேரி உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் போன்றோரின் உரைகளைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் போராளி முகிலன், தோழர் கிறிஸ்டினா , கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில ஆர்ப்பாட்டம் 06062017
புதுச்சேரி – சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 06062017 அன்று காலை 11 மணியளவில் மாநிலக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி விசாரணையில் சாட்சியம் அளித்துவிட்டு பிறழ்சாட்சிகளாக மாறியவர்கள் மீது புதுவை அரசு ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவாக உள்ளநிலையிலும், அவரது வாக்குமூலத்தின் வழியாக தெரியவந்து கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியமும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தும் ஏன் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்றும், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இக்கேள்விகளை எழுப்பியுள்ளநிலையிலேனும் மேல்முறையீட்டுக்கோ, மீள்விசாரணைக்கோ உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு! 24/25/6/17 தேதிகளில் நடைபெறும் மலேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோசிரி டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைப்பார்! இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பேராளர்களாகப் பங்கேற்பு! ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்பெரும் மாநாட்டில் “திராவிட இனத்தின் மீட்சியே; தமிழ் இனம்! தமிழும் திராவிடமும் ஒன்றே!”யென கருத்தரங்கில் விவாதிக்கப்படும் ! இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் என்ற கருப்பொருளால் முன்னெடுக்கப்படும் இம்மாநாட்டு வழி உலகம் தழுவி வாழ்கிற தமிழ் உணர்வாளர்களை ஒரே குடையில் கீழ் கட்டமைக்க முடியுமென்ற சிந்தனையின் வெளிபாடே இம்மாநாட்டுக்குரிய இலக்காகும். அதனால் இம்மாட்டையொட்டி நடைபெறும் இரண்டுநாள் கருத்தரங்கில் பேராசிரியர், சுப வீரபாண்டியன், பேராசிரியர் அ.மார்க்சு, கருத்தாளர் சு.அறிவுக்கரசு, திரைஇயக்குனர் வேலுபிரபாகரன், கருத்தாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் ஆதவன், கருத்தாளர் தோழி ஓவியா, கருத்தாளர் விடுதலை ராசேந்திரன், கருத்தாளர் இளபுகழேந்தி, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கருத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் கலந்து விவாதிப்பதுடன் அவர்களுக்கு...
ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் 18062017
10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்.. திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசு பெரியார் JCB பணிமனையில் இன்று மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.. 24.6.17 முதல் 3.7.17 முடிய பத்து நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 24.6.17 – லோகநாதபுரம்,மோளக்கவுண்டன் பாளையம் 25.6.17 – வைராபாளையம், லட்சுமி தியேட்டர் 26.6.17 – சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு 27.6.17 -சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி போலிஸ் ஸ்டேசன் 28.6.17 – மரப்பாலம், கோணவாய்க்கால் 29.6.17 – பச்சப்பாளி, கொல்லம்பாளையம் 30.6.17 – கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் 1.7.17 – ஆர்.என் புதூர், சி.எம் நகர் 2.7.17 – சூளை, கனிராவுத்தர் குளம் 3.7.17 – வளையக்கார வீதி, சின்னமாரியம்மன் கோவில்.. பேச்சாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர். கோபி வேலுச்சாமி மற்றும் மந்திரமா...
தோழர்கள் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் வீடு முற்றுகை சென்னை 17062017
தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பாஜகவின் பினாமியான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17062017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA என அடக்குமுறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தோழர்கள்...
குமரி மாவட்ட திவிக தோழர் செல்லம் மறைவு, உடல்தானம் 16062017
குமரி மாவட்ட விடுதலைக்காக மார்சல் நேசமணி தலைமையில் போராடிய மொழிப்போர் போராளியும் தற்போதைய திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளருமான தோழர்.செல்லம், அகவை:80, தொடுகுளம், காஞ்சிரகோடு அவர்கள் 16062017 அன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் வீரவணக்க நிகழ்வு கழகத் தோழர் அனீஸ் தலைமையில் நடைப்பெற்றது. தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, மணிமேகலை, மார்த்தாண்டம் மாலை பத்திரிகை ஆசிரியர் தோழர் செபக்குமார், கிறித்துதாஸ் ஆகியோர் உடல் தானம் பற்றிய அறிவியல் செய்திகளை இரங்கல் செய்தியாக பேசினர். தோழர்கள் இளங்கோ, விஸ்ணு, சூசையப்பா, கருணாநிதி, ஜான் மதி, அருள் ராஜ், பிரேமலதா, இராசேந்திரன், கம்யூனிஸ்ட் தோழர் ஜெயன் ஆகியோரின் வீரவணக்க முழக்கங்களுடன், அவரின் இறுதி விருப்பப்படி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ உடற் கூறியல்த் துறைக்கு வழங்கப்பட்டது. அவருக்கு எங்களின் வீரவணக்கங்கள்
மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும் – பொதுக்கூட்டம் பவானி 19052017
19/05/2017 வெள்ளி மாலை 6.00 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் “மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும்” என்ற தலைப்பில் கொடியேற்ற நிகழ்வுடனும் T.K.R பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. நிகழ்வுக்கு முன்னதாக பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்திலும், அந்தியூர் பிரிவில் உள்ள கொடிக்கம்பத்திலும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி ஏற்றினார். தொடக்கத்தில் பகுத்தறிவு பறை இசை, பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டன. தோழர் வேல்முருகன் வரவேற்புரையாற்ற மாவட்ட செயாலாளர் வேணுகோபால் கூட்டத்துக்குத் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி தலைமை கழக பேச்சாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் சுந்தரம், மாநில அமைப்புச் செயாலாளர் இரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயாலாளர் இராம. இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் பெரியாரியமும், அம்பேத்கரியமும் மட்டுமல்லாமல்...
காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – சுவரொட்டியில் மதுரை திவிக பதிலடி
மதுரை முழுதும் பாஜகவினர் நூற்றுக்கணக்கான இடங்களில் “கழகங்கள் இல்லா தமிழகம் ” என்ற விளம்பரத்தை செய்துள்ளது. அதற்கு பதிலடியாக காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – என்ற தலைப்பில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை தயாரித்து மதுரை மாவட்ட திவிக தோழர்கள் மதுரையெங்கும் ஒட்டியுள்ளார்கள்
பெரியாரியல் பயிலரங்கம் உடுமலை 11062017 மற்றும் 12062017
“பயிற்சியாளர்கள் – தலைப்புகள்” பெரியாரியல் பயிலரங்கம் ! ஜூன் 11,12 – உடுமலை. திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை முதல் மாலை வரை. இடம்: கிருஷ்ணா விடுதி,படகுத்துறை, திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிலரங்கிற்கு வரும் தோழர்கள் சனிக்கிழமை இரவே பயிலரங்கு நடக்கும் விடுதிக்கு வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 200/= (ரூபாய் இருநூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி...
மாடுகள் விற்பனை தடை, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்திய அரசே ! மாடுகள் விற்பனை தடைச்சட்டத்தை திரும்பபெறு ! தமிழக அரசே, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு ! கைது செய்யப்பட்டுள்ள மீதேன் திட்ட எதிர்ப்புத்தலைவர் பேராசிரியர் செயராமன் உள்ளிட்ட 11 பேரை உடனடியாக விடுதலை செய் ! சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆய்வு மாணவர் சூரஜ் மீது தாக்குதல் தொடுத்த இந்துத்துவ வன்முறையாளர்கள் அனைவரையும் கைது செய் ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே 09062017 வெள்ளி அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகம்,ஈரோடு.
இந்தி அழிப்புப் போராட்டம் சென்னை 05062017
திராவிடர் விடுதலைக் கழகம் 05062017 காலை 10.30 மணியளவில் சாஸ்திரி பவனில் இந்தி அழிப்புப் போராட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 130 பேர் இவ்வழிப்பு போராட்டத்தில் கலந்து கைதானார்கள். மேலும் செய்திகள் விரைவில்
தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் நினைவு அரங்கத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு” 04062017 மாலை திருவான்மியூர் தெப்பக் குளம் அருகில் நடைபெற்றது
அய்.அய்.டி மாணவர் சூரஜ் சந்தித்து கழகத் தலைவர், பொதுச்செயலாளர் ஆறுதல் சென்னை 03062017
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, துணைப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், கழக வழக்குறைஞர் அருண், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ்யை 03062017 அன்று இரவு 8.30 மணியளவில் பார்த்துவிட்டு தலைமை அலுவலகம் திரும்பினார்கள். அவரின் உறவினர்கள் ராஜகோபால், வாசுதேவன் தலைவரிடமும் பொதுச் செயலாளரிடமும் ஆர்வமாக தமிழகத்தின் ஆதரவை மற்றும் கேரள முதலமைச்சர், திமுக செயல் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் மற்றும் மாணவர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதை விளக்கினர். செய்தி குகன்
மாட்டு அரசியல் செய்யும் மதவாத மோடி அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் சேலம் 05062017
கண்டன உரை தோழர் இரா டேவிட், மாவட்ட செயலாளர்
மாட்டுக்கறிக்கு எதிரான முற்றுகைப் போர் நாமக்கல் 31052017
மாட்டுக்கறி விற்பனைக்கு தடைவிதித்த பாஜக அரசைக் கண்டித்து, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் திருச்செங்கோடு ஸ்டேட் பாங்க்கை முற்றுகையிட்டு போராட்டம். 21 பேர் கைது.
மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சாவூர் 01062017
தஞ்சையில் ஜுன் 12ல் காவிரி நீரை பெற்றுத் தந்து மத்திய அரசிடம் வாழ வழி கேட்டு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர்,பனகல் பில்டிங் அருகில்,ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் அவர்கள் துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் துவக்க நாளான நேற்று 01.06.2017 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன், S.D.P.I. தலைவர் தோழர் தெஹலான் பாகவி,தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி.முருகேசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர்...
இந்தி அழிப்பு போராட்டம் சென்னை 05062017
ஜூன் 5ல் “இந்தி அழிப்பு போராட்டம்” திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. மத்திய அரசு அலுவலகங்களில் “இந்தி அழிப்பு போராட்டம்” தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை.! பா.ஜ.க அரசே.! திணிப்புகளை திரும்பப் பெறு.!! நாள் : 05.06.2017, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு…. இடம் : சாஸ்திரிபவன், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை : கொளத்தூர்.தா.செ.மணி தலைவர்.திராவிடர் விடுதலைக் கழகம் #இந்தி_திணிப்பை_எதிர்ப்போம்.! #இழந்துவரும்_உரிமைகளை_மீட்போம்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363
தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017
04062017 அன்று சென்னையில் “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாடு. இந்தித்திணிப்பை எதிர்ப்போம் ! இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! எனும் முழக்கத்தோடு, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பில்.. நாள் : 04.06.2017. ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 4 மணி இடம் : திருவான்மியூர் தெப்பக்குளம், சென்னை – 41. தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். சிறப்புரை : நீதியரசர்.அரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி,உயர் நீதி மன்றம்,சென்னை. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். பேராசிரியர்.சரசுவதி அவர்கள். மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ! காஞ்சி மக்கள் மன்றத்தினரின் பறையிசை, புரட்சிகர கலை நிகழ்ச்சி இடம்பெறும். விழித்தெழுவோம்.! தடுத்து நிறுத்துவோம்.! தமிழர்களே வாரீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363
ஃபா கலெக்சன்ஸ் கடை திறப்பு விழா கோவை 31052017
தோழர் பாரூக் அவர்களின் துணைவியார் துவங்கியுள்ள ஃபா (faa) collections எனும் புதிய ஆயத்த ஆடை அங்காடியை இன்று 31.05.2017 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் தோழர் பாரூக்கின் குழந்தைகள். Shop address : FAA COLLECTIONS, No:6 60 feet road, North housing unit, OPP TMMK office, Selva puram, Coimbatore – 641026
மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் திருச்செங்கோடு 31052017
.. தடையைத் தகர்க்க ஒன்று கூடுவோம்.. நாள்: 31.05.2017 இடம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முன்பு, திருச்செங்கோடு. திராவிடர் விடுதலைக் கழகம்
பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழா சென்னை 28052017
பேரறிவாளனின் தந்தை ஐயா குயில்தாசன் பவள விழாவில் சென்னையில் நடைபெற்றது. அதில் ஐயாவிற்கு மரியாதை செய்யும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பெரியாரியல்வாதிகள்
மாட்டிறைச்சி தடைச் சட்டம் – திவிக ஈரோடு தெற்கு கண்டனக் வட்டம் 28052017
பாஜக மோடி பாசிச அரசின், மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை செய்த சட்டத்தை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டனக் கூட்டம் 28052017 அன்று, ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் மாலை 6 மணியளவில் தொடங்கப்பட்டது. தோழர் ரங்கம்பாளையம் கிருஷ்ணன் தலைமையேற்க, கிருஷ்ணமூர்த்தி வரவேற்க..சிவா சடையன் (திருச்செங்கோடு) செல்லப்பன் (மாவட்டத் தலைவர் ஈரோடு தெற்கு) சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சரவணன் (நாமக்கல் மாவட்டச் செயலாளர்)வெங்கட், ப.ரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்ற வீரா கார்த்திக் (அறிவியல் மன்றம்) நிறைவுரையாற்ற, கமலக்கண்ணன் நன்றியுரையுடன் முடிந்தது. பங்கு பெற்றோர் சித்தோடு பிரபு , பிரபாகரன், யாழ் எழிலன், சென்னிமலை இசைக்கதிர், இனியன், பாரதி, சத்தியராஜ், திருமுருகன், மணிமேகலை, புனிதா, பேபி, மோகன் (புலி) பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) இளங்கோ, தமிழ்செல்வன், மாதேஷ், கவிப்பிரியா, சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.!
தோழர் ஃபாரூக் துணைவியார் கடை திறப்பு விழா கோவை 31052017
தோழர் பாரூக் துணைவியார் புதிதாக துவங்கவுள்ள பா (faa) collection நாளை காலை 10 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துறை அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வருக.. பேச 9677404315
பாஜகவின் மாட்டிறைச்சி தடைச் சட்டம் – கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ! பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது. பசு மாடு மட்டுமல்லகாளை,எருமை,கன்றுக்குட்டி, கறைவை ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்க்கக்கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம்,விவசாயி என்பதற்கான அடையாள சான்றுபௌள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம்.இப்படி கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம். இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக்குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர்...
ஆணவ கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம் மதுரை 23052017
காதல் திருமணம் செய்த சுகன்யாவை பெற்றோர்களே எரித்து கொண்ட, சாதி ஆவண படுகொலையை கண்டித்து மதுரையில் தலைமை தபால் நிலையம் முற்றுகையில், திராவிடர் விடுதலை கழகம்
மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம் ஈரோடு 28052017
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தெருமுனைக் கூட்டம்…. ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் 28.05.2017 மாலை 6:30 மணிக்கு மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம்.. ஆத்தூர் மகேந்திரனின் மந்திரமல்ல தந்திரமே அறிவியல் நிகழ்ச்சியும், இந்தி திணிப்பு சிறப்புரை தோழர் வீரா கார்த்தி ( தமிழ்நாடு அறிவியல் மன்றம்) தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி….. தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க அழைக்கிறோம்….
பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017
திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடம்: திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை பல்வேறு தலைப்புகளில் இப் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. தலைப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 300/= (ரூயாய் முன்னூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி : ஆனந்த் – 9842815340 சபரி – 9095015269 கோவை...
திராவிடர் விடுதலைக் கழக கிளைக் கழக துவக்க விழா
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் 07.05.2017 ஞாயிற்றுக் கிழமையன்று மாலை5.00 மணிக்கு கிளைக்கழக துவக்கவிழா நிகழ்வும் பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக அப்பகுதியில் கழகத்தின் கொடியை தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர் கா.சு வேலுச்சாமி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காவை இளவரசனின் “மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, பெரியாரின் கொள்கைகளை விளக்கி சிறப்பான உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கழகத்தோழர் மணி தலைமை தாங்கினார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை அப்பகுதியைச் சார்ந்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கொங்கு அமைப்புகளின் ஜாதி ஆதிக்கம் நிறைந்த இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக...
கழகத் தலைவர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் 21052017
21.05.2017 மாலை 3 மணிக்கு விழுப்புரம் (மா) தி.வி.க மாவட்ட கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் நடைபெற்றது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தோழர்கள் க.ராமர், பெரியார் வெங்கட், கா.மதி, ந.வெற்றிவேல், இளையரசன், சி.சாமிதுரை, தீனா( புதுச்சேரி), ந.அய்யனார் (த.செ.கு) உரையாற்றினர். கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். மா.குமார் நன்றி உரையாற்றினர். கூட்டத்தில் கழக இதழ்கள் ‘பெரியார் புரட்சி முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் கழகத்தின் அடுத்தகட்ட செயல் பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கிழக்கு, மேற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழுப்புரம் கிழக்கு (மா) பொறுப் பாளர்கள்: இளையரசன் (மாவட்டத் தலைவர்), தினேஷ் (மா.செ), ஸ்ரீதர் (மா.அ), அழகு முருகன் (மா.து.த), பெரியார் ஜெயரக்சன் (மா.து.செ), விழுப்புரம் மேற்கு மாவட்டம், க. மதியழகன் (மா.த), க.ராமர் (மா.செ), சி.சாமிதுரை (மா.அ), ம.குப்புசாமி (மா.து.செ), மு.நாகராஜ் (த.அ.ம. மாவட்ட அமைப்பாளர்), வீ.வினோத் (த.மா.க. மாவட்ட அமைப்பாளர்),...
சங்கரன்கோவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதல் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நூல் அறிமுக விழா கடந்த மே 14 அன்று அபர்ணாதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு கழக பரப்புரை செயலர் பால்.பிரபாகரன் தலைமை வகித்தார் .நெல்லை மாவட்ட தலைவர் பால் வண்ணம் முன்னிலை ஏற்றார். ஒருங்கிணைப்பு செய்த சங்கரன்கோவில் தோழர் வே.ராமசாமியின் நோக்க உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது .சங்கை பெரியார் தொண்டர் பா.சதாசிவம் வரவேற்புரை நல்கினார் “.பெரியார் இன்றும் என்றும் “அண்ணல் அம்பேத்கரின் “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் “கழக மாத இதழான நிமிர்வோம் ஆகிய நூல்கள் அறிமுகப் படுத்தப்பட்டன . .நிமிர்வோம் இதழ்கள் குறித்து மதுரை தோழர் மா.பா மணிஅமுதனும் ..அம்பேத்கரின் நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் நூல்குறித்து தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இன்றும் என்றும் நூல் பற்றியும் உரையாற்றினர் .பால்.பிரபாகரன் தலைமை உரை ஆற்றினார் ஆதித்தமிழர் பேரவையின் தென்னரசு ,முள்ளிக்குளம்...