கொளத்தூர் கழக செயல் வீரர் டைகர் பாலன் இல்ல மண விழா
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர், புலிகள் மின்கலப் பணி மையம் டைகர் பாலு – ஜோதிமணி இணையரின் மகள் ஜோ.பா. ஓவியா – கோபிச் செட்டிப்பாளையம் குணசேகரன்- உமா இணையரின் மகன் கோ.கு.முகிலன் ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா, 14-2-2014 அன்று காலை
11-00 மணிக்கு, கொளத்தூர் எஸ்.எஸ்.மகால் திருமண மண்டபத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடந்தேறியது. சேலம் மாவட்ட தி.வி.க. தலைவர் கொளத்தூர் சூரியகுமார் வரவேற்புரை ஆற்றினார். தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறச்செய்து நிகழ்த்திவைத்தார்.
த.பெ.தி.க. அமைப்புச் செயலாளர் கோவை. வெ. ஆறுச்சாமி, தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கோபி கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் (ஓய்வு) பேராசிரியர் செ.சு. பழனிசாமி, கோபி மாவட்ட தி.க. தலைவர் யோகானந்தம், திண்டுக்கல் சம்பத், தூத்துக்குடி பால் பிரபாகரன், கோபி ம.தி.மு.க. மா.கந்தசாமி, சென்னை அண்ணாமலை ஆகியோர் விழா விளக்கவுரை ஆற்றினர். கவிஞர் ஜாகிர் உசேன் வாழ்த்துக் கவிதை வாசித்தார். இறுதியாக, மணமகனின் தந்தை குணசேகரன் நன்றி கூற விழா நிறைவடைந்தது.
விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தி.வி.க., த.பெ.தி.க., தி.க., இயக்கத் தோழர்கள், இன உணர்வாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அரங்கம் நிறைந்து வழிந்தது. மதியம் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இணையேற்பு விழா மகிழ்வாக மணமக்கள் ‘பெரியார் முழக்க வளர்ச்சி நிதி’யாக ரூ. 5,000-00 வழங்கினர்.
பெரியார் முழக்கம் 22022018 இதழ்