திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

கழக சார்பில் திருப்பூரில் ஜன.14 அன்று காலை 8 மணி முதல் மாலை வரை, வீரபாண்டிப் பிரிவு பெரியார் திடலில் கோலாகலமாக கொண் டாடப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வழங்கி நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆடிட்டர் பழனிச்சாமி பொங்கல் வழங்கி தொடங்கி வைத்தார். 9 மணியளவில் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமுதம் இரா. கணேசன் தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமையில் பரிசளிப்பு விழா பொங்கல் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பு களைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

பங்கேற்றோர் : முகில்ராசு (மாவட்டத் தலைவர்), மு. ரவிச்சந்திரன் (மாவட்ட பொருளாளர்), சு. நீதிராசன் (மாவட்ட செயலாளர்), க. அகிலன் (மாவட்ட அமைப்பாளர்), வி. தனபால் (மாநகர தலைவர்), சி. மாதவன் (மாநகர செயலாளர், த.சங்கிதா (மாவட்ட அமைப்பாளர்), மா. இராம சாமி (தெற்கு பகுதி செயலாளர்), அ.க. கருணாநிதி (வடக்குப் பகுதி செயலாளர்), சு. முத்துக்குமார் (மாநகர அமைப்பாளர்), ஆசிரியர் வீ.சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), ஆர்.எசு. ஈசுவரமூர்த்தி (திமுக), ஆர். குமார் (மாவட்டத் தலைவர் தமுஎகச), பழனி சிவகுமார் (திருப்பூர் மாநகர காங்கிரசு), அ. கோவிந்தராசு (முன்னாள் ஊராட்சித் தலைவர், வீரபாண்டி), சு. சோமசுந்தரம் (முன்னாள் ஊராட்சித் தலைவர், வீரபாண்டி), துரை. பரிமள ராசன் (மாநில முகநூல் பொறுப்பாளர், தி.வி.க.),

மு. இராமசாமி (முன்னவர் ஆர்டுவேர், வீரபாண்டி பிரிவு) மற்றும் சி. இலட்சுமணன். விழா தொடங்கும் முன் எழுச்சியான பறை இசை நிகழ்ச்சி நடந்தது.

பெரியார் முழக்கம் 25012018 இதழ்

You may also like...