தலைமைக் கழகத்தில் ஜாதி – தாலி மறுப்பு மணவிழா
சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையத்தில் 26.2.2018 பகல் 12 மணியளவில் ஜாதி-தாலி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது. சென்னை எம்.கணேசன்-மீனாட்சி ஆகியோரின் மகன் ஜி. இராமகிருஷ்ணன், சென்னை சைதாப்பேட்டை ஜே.ஏ.பார்த்திபன்-ஜூலி ஆகியோரின் மகள் பி.நிவேதா ஆகியோரின் மணவிழாவை உறுதி ஏற்புக் கூறி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார்.
தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டச் செயலாளர் செந்தில், உள்ளிட்ட தோழர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 01032018 இதழ்