சுகாதாரக் கேடு: மயிலைப் பகுதி தோழர்கள் புகார் மனு
சென்னை மயிலாப்பூர் குடிசை மாற்று வாரியம் பகுதி பிள்ளையார் தெருவில் பல மாதங்களாக சாக்கடை நீர் வெளியேறி பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு, பல்வேறு நோய்கள் போன்றவைகளுக்கு அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த அடிப்படை பிரச்சனையை உடனடியாக தீர்வு காண கோரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளரிடம் 05.02.2018 அன்று மயிலாப்பூர் பகுதி தலைவர் இராவணன் மயிலாப்பூர் தோழர்களுடன் கோரிக்கை மனுவை அளித்தார். உடனடி தீர்வு காணா விடில் பகுதி மக்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
பெரியார் முழக்கம் 01032018 இதழ்