குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்- தமிழ்த் தேசியம் கருத்தரங்கம்!

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஆரியம்-திராவிடம்-தமிழ்த்தேசியம் குறித்த கருத்தரங்கம் மற்றும் விவாத நிகழ்ச்சி குமாரபாளையம் சி.எஸ்.அய். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (11.02.2018) மதியம்  2.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலளார் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் மற்றும் மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு பகுதித் தோழர் கவுதமன் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் கிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார். இதையடுத்து குமாரபாளையம் பகுதி தோழர் கலைமதி ஆரியம்-திராவிடம்-தமிழ்த் தேசியம் பற்றி விரிவாகவும், வரலாற்று ரீதியாகவும் விளக்கவுரை யாற்றினார். பின்னர் தோழர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் வந்திருந்தனர். இறுதியாக குமாரபாளையம் பகுதி நகர செயலாளர் தண்டபாணி நன்றியுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 22022018 இதழ்

You may also like...