கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்
திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர்.
சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப் போட்டி நிகழ்ச்சிகள், மக்களை பெரிதும் கவர்ந்தன. குழந்தைகள் சிறுவர் களுக் கான விளையாட்டுப் போட்டிகள், நகரின் பல்வேறு குழுக்கள் மோதும் கபடி, வாலிபால், செஸ், ஓவியப் போட் டிகளும் முன்கூட்டியே நடத்தப்பட்டு விழா மேடையில் பரிசுகள் வழங்கப் பட்டன.
நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞ ர்களுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆடை போர்த்தி கவுரவித்தார். சிறப்பு விருந்தினராக சித்த மருத்துவம் படிக்கும் மாணவர் திருநங்கை தாரிகா பானு, தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் மருத்துவர் சரவணன், பகுதி தி.மு.க. பொறுப் பாளர்கள் துரை, செழியன், காமராஜ், கி. குமரப்பா (விடுதலை சிறுத்தைகள், தென்சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர்) மற்றும் ‘புரட்சிப் பாரதம்’ அமைப்பைச் சார்ந்த எஸ்.எஸ்.பிரபு ஆகியோர் போட்டி களில் வெற்றி பெற்றோருக்கு பரிசு களை வழங்கினர். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சிகளை ஒருங் கிணைத்தார். சிறப்பு விருந்தினர் களுக்கு ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட் டுள்ள ‘அம்பேத்கர் : இன்றும் என்றும்’ நூல் பரிசுகளாக வழங்கப் பட்டன. இசை நிகழ்ச்சியின் நிறைவில், கழகத் தோழர்கள், பொது மக்கள் குடும்பம் குடும்பமாக நடனமாடி, தமிழர் பண்பாட்டு உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 14.01.2018 காலை 9 மணிக்கு பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில், திருச்செங்கோடு, பள்ளிப் பாளையம், குமாரபாளையம் பகுதி களிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி, மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட காப்பாளர் அண்ணாதுரை போன்ற மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட காப்பாளர் அண்ணாதுரை தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை யொட்டி பொது மக்களிடம் உரையாற்றினார்.
குமரி : திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 01.01.2049 (14-01-2018) ஞாயிறு மாலை 4.00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் ஆகிய விழாக்களை முன்னிட்டு திரு வட்டார் காங்கரை சந்திப்பு, எம்.ஜி.ஆர் சிலை அருகில் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைப்பெற்றது.
விஸ்ணு வரவேற்புரையாற்றினார். சூசையப்பா, நீதி அரசர், தமிழ் மதி, போஸ் ஆகியோர் சிறப்புரையாக புத்தர், அம்பேத்கர், பகத்சிங், திருவள்ளுவர் போன்றவர்களை ‘இந்துத்துவா’ சக்திகள் கைப்பற்றத் துடிப்பதுப் போல் தமிழர்கள் விழாவான பொங்கலையும் கைப்பற்றி இந்துத்துவாவை திணிக்கும் முயற்சிக்கு வலுச் சேர்க்க விடாமல் கிறித்தவர்களும், இசுலாமியர்களும் தமிழர்களாக நின்று பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டு மென்ற வேண்டுகோளுடன் சிறப்புரை யாற்றினர். அனீஸ் நன்றியுரைக் கூற கூட்டம் முடிவுற்றது. நிகழ்வில் இரமேஸ் பாபு, இராஜேஸ் குமார், மஞ்சு குமார், பெரியார் பிஞ்சு. அபினந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பெரியார் முழக்கம் 25012018 இதழ்