கூட்ட மேடையில் தமிழர் ‘பீப்’ பகோடா
திருவொற்றியூர் பொதுக் கூட்ட மேடையில் ஒரு மேஜை மீது ஸ்டவ் அடுப்பும், அதற்கு மேல் எண்ணெய் சட்டியும் வைக்கப்பட்டு, கீழே அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட் டிருந்தது.
மோடியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் “தமிழர் பீப் பகோடா இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். உரிமையாளர் ஜெயா, எம்.ஏ., எம்.பி.எல்., பி.எச்டி.” என்று எழுதப்பட் டிருந்தது. பகோடா விற்று நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கும் இளைஞர்கள்கூட எங்கள் ஆட்சியின் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற்றவர்கள்தான் என்று பிரதமர் மோடி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியை கிண்டல் செய்து, இந்தக் காட்சியை மேடையில் தோழர்கள் அரங் கேற்றியிருந்தனர். கூட்டத்தினர் இதை மிகவும் பாராட்டி இரசித்தார்கள்.
பெரியார் முழக்கம் 15022018 இதழ்