மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

2018க்கான திருப்பூர் திவிக செயல் திட்டம் குறித்து விவாதிக்க மாவட்ட கலந்துரையாடல் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 11/2/2018 மாலை 5 மணிக்கு மாநகர் அமைப் பாளர் முத்து தலைமையில் நடந்தது. நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி உள்ளிட்ட 15 தோழர்கள் கலந்து கொண்டனர்

கழக செயல்பாடுகளை 2018 ஆம் வருடம் மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, தமிழ்நாடு மாணவர் கழகம் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டன.

கருணாநிதி 10 இளைஞர்களுக்கு பறையடிக்கப் பயிற்சித் தர முன் வந்தார்.

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு சிறப்புடன் நடந்தேற ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. இராயபுரத்தில் சிறப்பாக மாநாட்டை நடத்துவது எனவும் பெரியார்சிலை முதல் மாநாட்டு திடல் வரை அணிவகுப்பு ஊர்வலம் செல்லவும் முடிவெடுக்கப்பட்டது. தோழர் பார்வதி நன்றியுரையுடன் 7:30 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது.

பெரியார் முழக்கம் 01032018 இதழ்

You may also like...