களப்பணியில் கழகத் தோழர்கள் தூத்துக்குடி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்ற கழக துண்டறிக்கை

தூத்துக்குடி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக 21.02.2018 அன்று  “மாணவர்களே! இருள் சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் தமிழக மாணவர்கள் எவ்வாறு இந்துத்துவ மோடி அரசால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான அரசுப் பணிகள் எவ்வாறு பிறருக்கு தாரைவார்க்கப்படு கின்றன, நமக்கான வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெளி மாநில மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கெடுக்கும் அளவிற்கு கதவைத் திறந்து விட்டுருக்கிற பா.ஜ.க. எடுபிடி அரசான தமிழக அரசின் நய வஞ்சகத்தை துண்டறிக்கையாக தயார் செய்து அதை தூத்துக்குடியில் அமைந்துள்ள கல்லூரி மாணவர் களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. பல மாணவர்கள் இந்த துண்டறிக்கையை படித்துவிட்டு தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் போன்றவர்களிடம் கேட்டு அறிந்த தோடு, சக மாணவர்களிடம் இந்த செய்தியை எடுத்துக் கூறுகிறோம் என்று சொல்லி தோழர்களின் அலைபேசி எண்களை வாங்கிச் சென்றனர்.

பெரியார் முழக்கம் 01032018 இதழ்

You may also like...