விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட கடுவனூர் கிராமத்தில் 11-02-2017 அன்று நடத்தப் பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர். மா.குப்புசாமி தலைமை வகித்தார்.
கடந்த 2017 மே 21 முதல் 11-02-2018 வரை இயக்கம் சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட செயல் பாடுகள் குறித்தும் – போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ சந்தா சேர்பது சார்பாகவும் பேசப்பட்டன. வருகின்ற ஏப்ரல் 14- அன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் பிறந்த நாள் நினைவாகவும் கழம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரு வார அளவில் தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் என்ற தலைப்பில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 01032018 இதழ்