மேட்டூரில் அண்ணா – காந்தி நினைவு நாள் கூட்டம்

மேட்டூரில் 5.2.2018 திங்கள் மாலை 6 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பறைமுழக்கத்துடன் கூட்டம் தொங்கியது. அதனைத் தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு நடைபெற்ற வீதி நாடகத்தில் சாமியார்களின் மோசடிகளை விளக்கியும், ‘ஆண்டாள்’ குறித்த கதைப் பற்றிய விழிப்புணர்வு நாடகமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரத் தலைவர்

செ. மார்ட்டின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, ம.தி.மு.க. சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் அ.ஆனந்தராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர்

ந. மகேந்திரவர்மன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், ‘பகுத்தறிவாளர்கள் பார்வையில் அறிஞர் அண்ணா’ என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘திராவிடர் இயக்கப் பார்வையில் காந்தியடிகள்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக இர. பூவழகனின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்திற்கு ஏராளமான பொது மக்களும், பல்வேறு பகுதிகளி லிருந்து தோழர்களும் வந்திருந்து அறிவு விளக்கம் பெற்றனர்.

பெரியார் முழக்கம் 22022018 இதழ்

You may also like...