ஆண்டாள் ஆய்வுக்குரியவளே – கருத்தரங்கம் 03022018

3E769C23-88F1-40DB-96CC-949C934698CA C772A794-2680-44B4-9CF0-7EB58D052F1A

திராவிடர்_விடுதலைக்_கழகம் நடத்தும்

“ஆண்டாள் ஆய்வுக்குறியவளே” கருத்தரங்கம்.
இடம் : பெரியார் படிப்பகம் ( செக்போஸ்ட், கொளத்தூர்)
நாள்: 03022018 மாலை 6 மணி

ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா ? காமக் காவியமா ?
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமனியில்’ (08.01.2018) அன்று வெளிவந்தது. யார் -அவர் எத்தகையவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார்.
” Andal was herself a devadasi who lived and died in srirangam temple” ஆண்டாள் என்பவர் ஒரு தேவதாசியா ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள் .
இதனைச் சொல்பவர் வைரமுத்துவல்ல அமெரிக்காவின் இண்டியான பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சுபாஸ் சந்திர மாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட “Indian movement some aspects of dissent protest and reform” என்ற நூலில் இது காணப்படிகிறது என வைரமுத்து ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு அவர் மீது விழுந்து பிராண்டுவது ஏன்?
இந்த நூல் 1978 வெளியாகி உலகம் முழுவதும் பரவிவிட்டதே 40 ஆண்டுகள் ஆக என்ன செய்தார்கள் இந்த பார்ப்பன பண்டாரக் கூட்டங்கள்.
2009 ஆம் ஆண்டு ராகவன் என்ற பார்ப்பான் ” ஆண்டாள் ஒரு காமக்கிழத்தி” என்ற நூலை வெளியிடப்பட்டாரே ? அப்போதெல்லாம் எங்கே போனார்கள் இந்த பார்ப்பன பண்டாரங்கள்

ஆண்டாள் கதை ஒரு பொய் என்று கூறினார் ஆச்சாரியார் என்ற பார்ப்பனர் ? அப்போது ஏன் போராடவில்லை.

ஆண்டாளின் சிலப்பாடல்கள் :

காமப்பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்னைக் கமரன்
கோலப்பனைத் தாளோடு அற்றகுற்றமற தீர இணைய அமுக்கி காட்டீரே…!
மேலும்
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாய் முலையும்
அழகழிந்தேன் நான்!
புணர்வதோராசையினால் என்
கொங்கை கிளர்ந்து…
குமைத்துக்
குதூகளித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அக்குயிலே!…

*ஸ்ரீவில்லிபுத்தூர் “வி்ஷ்னுசித்தர் (பெரியாழ்வார் ) ” என்பவரால் துளசி செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்டவர் தான் ஆண்டாள்.
*பிறப்போ , தாய்தந்தையர் ,ஊர் ஆகியவற்றை பற்றி எந்த தகவலும் இல்லாதவர் ஆண்டாள்.

*இவர் கோதை என்ற பெயரால் அழைக்கப்பட்டார்
*கண்ணன் மீது அதிக பற்றுகொண்டு அவரையே காதலித்து திருமணம் செய்வேன் என்று கூறினார்.
*ஆண்டாள் காதலை ஏற்றுக்கொண்ட கண்ணன் அவரை கருவறையில் அழைத்து தம்மோடு வைத்துக்கொண்டார்.

“ஆண்டாளை விவாதிப்பதற்க்கான காரணங்கள்”

பிறப்பு , வளர்ப்புக்கான வரலாற்று ஆவணங்களோ , கல்வெட்டுக்கள் உண்டா ? எதுவும் இல்லையென்றால் ஆண்டாள் கதை கற்பனையே…..!
ஆண்டாளே இல்லையெனில் அவர் எழுதிய “திருப்பாவை , நாச்சியார் திருமொழி ” ஆகியவை யாருடையது.
அவையிரண்டும் காதல் பாடல்களா ? காம பாடல்களா ?

” பார்பனர்களே” ஒருவரின் வரலாற்றை எழுதுவதில் ஒரு நியாயம் வேண்டாமா ?

– ஏறத்தாழ 19 ம் நூற்றாண்டில் தான் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது எனில்…
7 ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்பட்ட ‘ஆண்டாள் ‘ தன்னை அழகுபார்த்த கண்ணாடி எப்படி கற்பனையோ அதேபோல் ” ஆண்டாளும் கற்பனையே” …
மேலும் பல வினாக்களோடு ….. விவாதிப்போம் வாருங்கள்..

ஏற்பாடு
திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர்

You may also like...