சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சரத்பிரபு உடல் பிரத பரிசோதனை முடிந்து தில்லியிலிருந்து 18.1.2018 இரவு 11 மணிக்கு திருப்பூரில் அவரின் இல்லத்தை வந்தடைந்தது.  மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, வடசென்னை மாவட்ட  செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கழகத் தோழர்கள் 10 பேர் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்

காலை 7 மணிக்கு இடுவம்பாளையம் இடுகாடு சென்று இறுதியஞ்சலி செலுத்த திட்டமிட்டு தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களோடு மருத்துவர் சரத்பிரபு அவர்களின் இல்லத்தில் ஒன்றுகூடினர். அங்கிருந்து 3 கிலோமீட்டர் வரை இறுதி ஊர்வலம் நடந்தது. இந்த மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலையே என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டு இதன் மீதான மேற்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியிறுத்தினர்.

தமிழ்ப் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, இளந்தமிழகம், அம்பேத்கர் தேசிய இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட தோழர்களை காவல் துறை கைது செய்து இரவு எட்டு மணிக்கு விடுவித்தது.

இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி ஆகியோர் கண்ணீர் உரையாற்றினர். தோரட் குழுவின் அறிக்கைகளை அமுல்படுத்த வலியுறுத் தினர்.  50க்கும் மேற்பட்ட கழகத் தோழர்களோடு தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் மருத்துவர் சரத்பிரபு உருவபடங்கள் மற்றும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக பல்வேறு பதாகைகளை பிடித்து அஞ்சலி செலுத் தினர். அனைத்துக்கட்சி பிரமுகர்கள் மற்றும்

பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு மாணவர்க் கழகத் தோழர் கனல்மதி மற்றும் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு ஆகியோர் தொடரும் இப்படுகொலைக்கு அரசுகள் இதோடு முடிவு கட்டாவிட்டால் தில்லியை நோக்கி அணி வகுப்போம் என்று சூளுரைத்தனர்.

பெரியார் முழக்கம் 02022018 இதழ்

You may also like...