காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018
சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக்கோரியும் சேலம் சங்கர மடம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந்திரன் செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டது. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.