Category: திருப்பூர்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி ! பிப்.10 ஞாயிறு அன்று ! ”மோடியே திருப்பிப்போ!” எனும் முழக்கத்தோடு ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்கிறார் ! நாள் : 10.02.2019 ஞாயிறு நேரம் : பிற்பகல் 1.00 மணி இடம் : புதிய பேருந்து நிலையம், திருப்பூர் தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை அறிவிக்கும் மோடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு ! பன்னாட்டு முதலாளிகளின் எடுபிடி மோடியே திரும்பிப் போ ! ஒருங்கிணைப்பு : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு. தொடர்பு எண் : முகில் இராசு – 98422 48174

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

கழகத்தின் “நிமிர்வோம்” இதழ் அரங்கு கடந்த ஆண்டைப் போலவே திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரங்கு (எண்.35) தனியே எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறுகிறது. அரங்கில் கழக வெளியீடுகள்,  பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சிய நூல்களும் கிடைக்கும். தொடர்புக்கு  : முகில் ராசு 9842248174, விஜய்குமார் 9841653200, கவிஞர் தம்பி 9789381010 பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019  திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு

திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019 திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு

“திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019” அரங்கு எண் : 35 திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு. நாள் : ஜனவரி 31 to பிப்ரவரி 10 வரை. நேரம் : காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. இடம் : பத்மினி கார்டன்,காங்கேயம் சாலை, திருப்பூர். எமது அரங்கில் பெரியாரிய,அம்பேத்கரிய மார்க்சிய புத்தகங்களும், திவிக மாத இதழ், வார ஏடு ஆகியவை கிடைக்கும். தொடர்புக்கு : தோழர் முகில் ராசு 9842248174

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

சென்னை : திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டாக தமிழர் திருநாள்…பொங்கல் விழா 13.01.2019 இராயப்பேட்டை வி.எம்.தெருவில் (பெரியார் சிலை அருகே) மாலை 6 மணிக்கு புதுவை அதிர்வு கலைக்குழுவினரின் பறை யிசை முழக்கத்தோடு தொடங்கியது. கிராமிய கலை பண்பாட்டு பாடல்களோடு பகுதி பொதுமக்களின் ஆரவாரத் தோடும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, பேராசிரியர் சரசுவதி, மக்கள் நீதி மய்யம் சௌரிராஜன், மணிமேகலை மற்றும் திருநங்கைக்காண உரிமை மீட்பு இயக்கத்தைச் சார்ந்த அனுஸ்ரீ, ஆர்.என்.துரை (திமுக, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்வினை இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஒருங்கிணைத்தார். தொடர்ச்சியாக சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறுவர், சிறுமியர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக அருண் ரிதம்ஸின் சென்னை கானா, திரைப்படப் பாடல்களோடு மகிழ்ச்சியோடு விழா நிறைவுற்றது. திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்...

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும்  விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் ! இசை நிகழ்ச்சி ! நாள் : தை1 (15.01.2019) செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை வரை. இடம் : பெரியார் திடல்,பெரியார் படிப்பகம்,வீரபாண்டி பிரிவு திருப்பூர். அனைவரும் வருக

மதவாதிகளின் முயற்சி முறியடிப்பு

மதவாதிகளின் முயற்சி முறியடிப்பு

திருப்பூரில் இந்து முன்னனி அமைப்பைச் சார்ந்தவர் களின் மகா யாக பூஜைக்கு பள்ளி மாணவர் களிடம் செங்கல், பூ, நெய் ஆகியவை எடுத்து வர வலியுறுத்தப்பட்டார்கள் அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரிடமும், கல்வி முதன்மை அதிகாரியிடமும் திருப்பூர் கழகம் சார்பில் 3.12.2018 அன்று புகார் மனு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனு மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நிகழ்வில்    திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பதியம் இலக்கிய அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. பெரியார் முழக்கம் 13122018 இதழ்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்: கழகத் தோழர்கள் கைது !

திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்: கழகத் தோழர்கள் கைது !

திருப்பூரில் கடந்த 22.10.2018 திங்கள் கிழமை அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி ஒன்று வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி ஒரு சுற்றறிக்கையை வெளியிட் டிருந்தார். அதில் என்ன பயிற்சி என்றோ, யார் நடத்துகிறார்கள் என்றோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட் டிருந்தது. 22.10.2018 அன்று காலை பயிற்சி வகுப்புக்குச் சென்ற சுமார் 600 ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வகுப்பை நடத்த வந்தவர்கள் “இதிகாச சங்காலன சமிதி” என்ற வடமொழிப் பெயருடனும் வரலாற்றுத் தொகுப்புப் பேரவை என்று தமிழிலும் அறிமுகப் படுத்திக் கொண்டனர். பயிற்சியை நடத்தி யவர்கள் சுப்பிரமணியம் மற்றும் டி.வி.ரங்கராஜன் ஆகியோர். இதனை ஒருங்கிணைத்தவர் இந்துத்துவ அமைப்பின்...

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – திருப்பூரில் கல்வியில் மதத்தை திணிப்பதை எதிர்த்து

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – திருப்பூரில் கல்வியில் மதத்தை திணிப்பதை எதிர்த்து

ஆர்ப்பாட்டம் – கைது – 25.10.2018 – திருப்பூர். மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழம்மை அமைப்புகளுடன் இணைந்து 25.10.2018 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் காவல்துறையின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி தோழர்கள் 63 பேர் கைதாகினர். அப்போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் : * திணிக்காதே திணிக்காதே பள்ளிக்கூட பாடத்திலே மூடநம்பிக்கை திணிக்காதே விதைக்காதே விதைக்காதே பிஞ்சுகளின் நெஞ்சிலே காவி நஞ்சை விதைக்காதே ஊரூராய் பறக்குற நாடு நாடாய் சுத்துற அதானி விமானத்துல ஏர் இந்தியா விமானத்துல எங்க போச்சி எங்க போச்சி புஷ்பக விமானம் எங்க போச்சி எங்க போச்சி நாகாஸ்திரம் இருக்குதாம் பிரம்மாஸ்திரம் இருக்குதாம் வஜ்ராயுதம் இருக்குதாம் இன்னும் பல ஆயுதம் இருக்குதாம் வேதத்துல கதைகதையா புராணத்துல இருக்குதாம் இருக்குதாம் எதுக்கு...

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018

கண்டன ஆர்ப்பாட்டம் ! அக்.25 – திருப்பூர். மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வழிகாட்டும் இந்திய அரசியல் சட்ட சாசனத்திற்கெதிராக கல்விக்கூடங்களில் மதமூட நம்பிக்கைகளை வளர்க்க மதவாதிகளுக்கு துணைபோய் தன் கடமையிலிருந்து தவறி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் இழைக்கும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! நாள் : 25.10.2018 வியாழக்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில், திருப்பூர். கண்டன உரை : தோழர் துரைவளவன்,மாநில துணைசெயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர் அபுதாஹிர்,மாவட்டத்தலைவர்,SDPI கட்சி, தோழர் சம்சீர் அஹமது,மாவட்டச்செயலாளர்,SFI. தோழர் தேன் மொழி,மாவட்டச்செயலாளர்,...

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் அக்.13, 2018 பிற்பகல் 2 மணியளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு  அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். களப்பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றை 5 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை 10 கழகப் பொறுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுகளை விடுதலை இராசேந்திரன் அறிவித்தார். கழக ஏடுகளுக்கான சந்தா சேர்ப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கழகத் தோழர்களை கழகத் தலைவர் பொதுச்செயலாளர் சந்தித்து, கழக...

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் செயலவையில் பங்கேற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கருத்துகளை முன் வைத்தனர். செயலவைக் கூட்டங்களில் கழகத் தலைவருக்கு வணக்கம் கூறுவதற்கு பதிலாக நன்கொடை வழங்கி உரையைத் தொடர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து, மடத்துக்குளம் மோகன் தலைவருக்கு ரூ.500/- வழங்கி உரையைத் தொடர்ந்தார். தோழர்கள் ஆர்வமாக வரவேற்றனர். சிலர் அதேபோல் ரூ.100, ரூ.200 என்று தலைவரிடம் வணக்கம் கூறி நன்கொடை வழங்கினர். மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. சாக்கோட்டை இளங்கோவன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களைப் பாடி தோழர்களை மகிழ்வித்தார். தலைமைக்குழு மற்றும் செயலவைக் கூட்டங்களுக்கு திருப்பூர் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. கழகக் கட்டமைப்பு நிதி – கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பில் மாவட்டங்களின் பங்களிப்பைத் தோழர்கள் அறிவித்தனர். நிமிர்வோம் இதழுக்கு மாதம் 1000 நன்கொடை தருவதாக அறிவித்த ஆசிரியர் சிவகாமி, முதல் தவணையாக ரூ.5,000 வழங்கினார். சென்னை அன்பு தனசேகர் மாதம் ரூ.1000 வழங்குவதாக...

எச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்

எச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்

திருப்பூரில் பெரியார் சிலையின் சுற்றுச் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த எச்.ராஜாவின் பிறந்தநாள் சுவரொட்டிகள் பா.ஜ.க.வினரை வைத்தே கிழித்தெறியப் பட்டது. தமிழகம் முழுவதும் பெரியார் சிலையை சேதப்படுத்தல் மற்றும் சிலையை அவமானப்படுத்தும் விதத்தில் இந்துத்துவவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலைகள் உள்ள இடத்தின் சுற்றுச்சுவரில் வெள்ளியன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. திட்டமிட்டு வன்முறையை உண்டாக்கும் வகையில் இந்துத்துவவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த செயலை அறிந்த பெரியாரிய அமைப்பினர் அவ்விடத்தில் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு தயாராகினர். இதற்கிடையே, இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டுவதற்காக திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை பாஜகவினரே கிழித்து எறிய வேண்டும் என பெரியார் அமைப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து பாஜக நிர்வாகிகளிடம் பேசிய காவல்துறையினர், அக்கட்சியைச் சேர்ந்தவர்களை...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

ஈரோடு தெற்கு : 17.09.2018 பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. காலை, ஈரோடு ப.செ. பூங்கா பெரியார் சிலை வளாகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின் தி.க., த.பெ.தி.க., தி.வி.க. அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் ஊர்வலமாக பெரியாரின் இல்லத்தை அடைந்து அங்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கருஞ்சட்டை தோழர்கள் பெரியாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இறுதியாக சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பேரணியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும்...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

குமரி மாவட்டம் : திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் நடத்திய பெரியார்140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு, விண்ணரசு வித்யா கேந்திரா, அழகிய மண்டபத்தில் தக்கலை எஸ்.கே.அகமது (பெரியாரியலாளர்) தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஷ்ணு “பெரியார் பார்வையில் கடவுள் மறுப்பு” என்னும் தலைப்பிலும், நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழகம், மாவட்டத் தலைவர்) “பெரியார் பார்வையில் இடஒதுக்கீடு” என்னும் தலைப்பிலும், தமிழ் மதி (மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) “பெரியார் பார்வையில் நீட்” என்னும் தலைப்பிலும், போஸ் (மார்க்சியலாளர்) “பெரியார் பார்வையில் பொதுவுடைமை” என்னும் தலைப்பி லும், மகிழ்ச்சி (ஒருங்கிணைப்பாளர், பொது வுடைமை தொழிலாளர் கட்சி) “இளைஞர்கள் எதை நோக்கி பயணிப்பது” என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். பின்பு கலந்துக்கொண்ட அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சூசையப்பா (முன்னாள்மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) நன்றி கூறமுடிவுற்றது. கூட்டத்தில் மஞ்சு குமார் (மாவட்டப்...

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுசூழல் பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்யவும்,உச்சநீதி மன்றம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்துள்ள உத்தரவுகளை அமுல் படுத்த வலியுறுத்தியும்,மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரியும் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த ஆட்சித்தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு அவர்கள் தலைமையில் 10.09.2018 மாலை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கழகத் தோழர்கள் மனுவை அளித்தனர். அப்போது கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் விஜயகுமார்,அகிலன், ராமசாமி,தனபால்,முத்து, நீதிராசன் ஆகிய பொறுப்பாளர்கள் உடன்...

பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது

பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது

திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09.09.2018 அன்று வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு மற்றும் மாவட்ட மாநகர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பெரியார் 140ஆவது பிறந்தநாள் அன்று 17.09.2018 மாலை 4 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத் தில் இருந்து பேரணியாக புறப்பட்டு இரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு. 24.09.2018 திங்கள் அன்று காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலையில் இருந்து இரு சக்கர வாகன ஊர்வலமாய் நகரில் 25 இடங்களில் கொடியேற்று விழா மிகச் சிறப்புடன் நடைபெற திட்டம் வகுக்கப்பட்டு கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைக்கிறார். கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம் வெற்றி பெற பங்கெடுத்து அனைவரும்...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞர் மறைவுக்கு கழக சார்பில் சென்னையில் வீர வணக்கப்பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு ஊர்களில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை : திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞருக்கு 08.08.2018 காலை 11 மணிக்கு அண்ணாசிலையி லிருந்து இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞரின் உருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீர வணக்க உரையாற்றினர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் : கலைஞருக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட...

திருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்துக் கழகம் மறியல்

திருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்துக் கழகம் மறியல்

திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தலித் விடுதலைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதிரி தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சத்துணவு சமையலர் பாப்பாள் மீதான தீண்டாமைக்கு எதிராகக் களமிறங்கின. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளை யத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு பாப்பாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து...

திருமலைக்கவுண்டன்பாளையத்தில் ஜாதியாதிக்க வெறி – போராட்டம்

திருமலைக்கவுண்டன்பாளையத்தில் ஜாதியாதிக்க வெறி – போராட்டம்

11 மணி நேரம் 40 பெண்கள் உட்பட 100 பேர் 3 முறை சாலை மறியல் சத்துணவு சமையலர் பாப்பாள் அவர்களின் தளராத போராட்டம் திருப்பூர் அவிநாசி வட்டம் சேவூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை ஜாதி மனநோயாளிகளுக்கு முதல் அடி திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் சமையல் செய்பவராக பணியாற்றி வரும் பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சமையல் செய்யக்கூடாது என்று கூறி பள்ளியை திறக்க விடாமல் உள்ளூரை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகை...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலி DVK Periyar அறிமுகம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலி DVK Periyar அறிமுகம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செய்திகளை புதிய தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைவரையும் சென்றடைய இணையதளம் dvkperiyar.com மற்றும் முகநூல் பக்கம் facebook.com/dvk12 ஆகியவற்றோடு புதியதாக செயலி DVK Periyar என்ற பெயரில் இன்று திருப்பூர் கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாள் விழாவில் அறிமுகப்படுத்தப் பட்டது கழக தலைவர் வெளியிட்டு கழக பொதுச்செயலாளர் பெற்றுக்கொண்டார் இதை கூகுள் ப்ளெ ஸ்டோரில் தரவிறக்கி கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் இயங்கும் இந்த செயலி (Application) திவிகவின் செய்திகளை உடனுக்குடன் அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தரவிறக்க உரலி https://play.google.com/store/apps/details?id=com.dvkperiyar.app  

கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழா! திருப்பூர் 15072018

கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழா! திருப்பூர் 15072018

கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழா! 15.07.2018 அன்று, திருப்பூரில் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம். ‘விளையாட்டு விழா – நிமிர்வு பறை முழக்கம்’ நிகழ்ச்சிகளுடன் . நாள் : 15.07.2018 ஞாயிறு நேரம் : மாலை 6.00 மணி. இடம்: இராயபுரம் திருவள்ளுவர் தெரு, திருப்பூர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

திருப்பூரில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 24052018

திருப்பூரில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 24052018

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் 24052018 மாலை 2.30 மணி அளவில் அரச பயங்கரவாத கூட்டமைப்பு சார்பாக ச காங்கேயம் சாலை சிடிசி கர்னரில் தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம் தோழர்கள் அனைவரும் வரவும் தொடர்பு எண் 9842248174

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

திருப்பூரில் : திருப்பூர் 02-05 2018 புதன்கிழமை காலை 11 மணி அளவில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சியின் முன்பு நடைபெற்றது. 1)            தமிழக அரசு இயற்றிய ‘நீட்’ விலக்கு தொடர்பான சட்ட மசோதாவுக்கு இசைவு கோரியும், 2)            கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், 3)            பட்டியலின பழங்குடி மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51,52 யை இரத்து செய்து முன்பு இருந்ததுபோல அரசாணை92 ஐ நடைமுறைப்படுத்தக்  கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. நிகழ்வில்  தேன்மொழி (மாவட்ட அமைப்பாளர் – டி.எஸ்.எப்.),  தமிழ் செழியன் (டி.எஸ்.எப்.), மதுலதா (டி.எஸ்.எப்.) ஆகியோர் உரையாற்றினர். வீ. சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), முகில் இராசு (மாவட்ட தலைவர்...

திருப்பூரில் எழுச்சியுடன் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருப்பூரில் எழுச்சியுடன் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 22.04.2018 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில்ஜீவா நகர், ரங்கநாதபுரத்தில் நடைபெற்றது. சு.பிரசாத் தலைமை தாங்கினார். தோழர்கள் சரத், பவித்ரா, ஜெயா, இந்துமதி, சரசம்மா,சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சின்னு வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக ‘கியோ குசின்’ தற்காப்புக்கலை தோழர்களால் தற்காப்பு கலை நிகழ்ச்சி நிகழ்த்திக் காட்டப்பட்டது. பகுத்தறிவுப் பாடல்களை யாழினி, யாழிசை, இசைமதி ஆகியோர் பாடினர்.  காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் கனல் மதி, தேன்மொழி, பிரசாந்த் உரையைத் தொடர்ந்து,  தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி நகைச்சுவையாக பகுத்தறிவுக் கருத்துக்களுடன் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுக்கூட்டத்திற்கு உழைத்த தோழர்களுக்கு புத்தகங்களை பரிசளித்து, புரட்சியாளர் அம்பேத்கர் பணி குறித்து சிறப்புரையாற்றினார். நகுலன்  நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது. பொதுக் கூட்டத்திற்கு முன்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் – திருப்பூர் 22042018

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் – திருப்பூர் 22042018

‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் – திருப்பூர் – 22.04.2018.” திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 22.04.2018 ஞாயிறு அன்று மாலை 6.00 மணியளவில் திருப்பூர்,ஜீவா நகர், ரங்கநாதபுரத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தோழர் சு.பிரசாத் தலைமை தாங்கினார். தோழர்கள் சரத்,பவித்ரா,ஜெயா,இந்துமதி, சரசம்மா,சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் சின்னு அவர்கள் வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக ‘கியோ குசின்’ தற்காப்புக்கலை தோழர்களால் தற்காப்புகலை நிகழ்ச்சி நிகழ்த்திக் காட்டப்பட்டது. பகுத்தறிவுப்பாடல்களை தோழர்கள் யாழினி,யாழிசை, இசைமதி ஆகியோர் பாடினர். ”காவை இளவரசன்”அவர்களின் ‘மந்திரமா?தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி பொதுமக்களிடம் நல்ல வரவேற்ப்பைப்பெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் கனல் மதி,தேன்மொழி,பிரசாந்த் ஆகியோரும் சிறப்பாக பேசினார்கள். தலைமைக்கழக பேச்சாளர் தோழர் ‘கோபி வேலுச்சாமி’ அவர்கள் நகைச்சுவையாக பகுத்தறிவுக்கருத்துக்களுடன் உரையாற்றினார். நிறைவாக கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு உழைத்த தோழர்களுக்கு புத்தகங்களை பரிசளித்து புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பணி குறித்து சிறப்புரையாற்றினார்....

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் தோழர் கனல் மதி அவர்களின் வாசிப்பில் கழகத்தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்கள் ஏற்க்கப்பட்டது. இந்நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகியோரின் பிறந்த நாள் அவ்விடத்திலேயே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு,மாநில அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா,மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர்...

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 22042018

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 22042018

திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 22.04.2018 ஞாயிறு நேரம் : மாலை 5.00 மணி இடம் : ரங்கநாதபுரம்,ஜீவா நகர்,திருப்பூர். தலைமைக்கழக பேச்சாளர் ‘கோபி வேலுச்சாமி’ அவர்களும் சிறப்புரையாற்றுகிறார். ”காவை இளவரசன்”அவர்களின் ‘மந்திரமா?தந்திரமா?’அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! திராவிடர் விடுதலைக்கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி,தமிழ்நாடு மக்கள் கட்சி (வி) ஆகிய அமைப்புத் தோழர்கள் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்யும் இந்திய நடுவண் பாஜக மோடி ஆட்சியை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 05.04.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழக வாழ்வுரிமைக்கட்சி,தமிழ்நாடு மக்கள் கட்சி (வி) தோழர்கள் கைது செய்யப்பட்டு தற்போது கல்லூரி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” திருப்பூர் இராயபுரத்தில் 12.03.2018 மாலை 6 மணியளவில் மகளிர் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.மாநாட்டிற்கு தோழர் பார்வதி தலைமையேற்றார்.தோழர் சரண்யா வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் யாழினி,யாழிசை,அமுதினி ஆகியோரும் மாணவர்கழகத்தின் வினோதினி,வைத்தீஸ்வரி, சுதா,மணிமொழி,கனல்மதி ஆகியோர் பெரியார் இயக்கப்பாடல்களை பாடினார்கள். தொடர்ந்து கோவை நிமிர்வு கலையகத்தின் அதிரும் பறையிசை மேடையில் துவங்கியது. பறை இசையின் தொன்மை,புகழ் ஆகியவற்றின் விளங்கங்களுடன் அதன் தேவையையும் நடனத்துடன் கூடிய விளக்கமாக நிகழ்த்தியது பொதுமக்களின் கரவொலியுடன் பேராதரவை பெற்றது. மாணவர்கழகத்தின் காருண்யா அவர்கள் மகளிர் தினம் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.அடுத்து பகுத்தறிவு வழக்காடு மன்றம் நடைபெற்றது. கருத்துச்செறிவுடன் நடந்த விவாதக்களத்தில் வாதங்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க்கப்பட்டது. மாலை நிகழ்விற்கு தலைமையேற்ற தோழர் பார்வதி அவர்கள் பெரியாரியல் தன் வாழ்வில் கொடுத்த தன்நம்பிக்கையையும், துணிச்சலையும் எடுத்துரைத்தார். தோழர் பசு.கவுதமன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மாநாட்டில் நடைபெற்றது.இரண்டு ஜாதி மறுப்புத் திருமணங்களும்...

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு !

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு !

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு ! திருப்பூரில் 12.03.2018 அன்று நடைபெற்ற மகளிர் நாள் மாநாட்டில் தோழர் பசு கவுதமன் அவர்கள் எழுதிய ”பெரியாரிய பெண்ணிய சிந்தனைகள்” எனும் நூலை தோழர் சிவகுரு (பாரதி புத்தகாலயம்) அவர்கள் வெளியிட தோழர் ஈரோடு பிரேமா அவர்கள் பெற்றுக்கொண்டார். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை கழகத்தலைவர் வெளியிட தோழர் காருண்யா பெற்றுக்கொண்டார். தோழர் சிவகுரு நூல்கள் குறித்து அறிமுகம் செய்து உரையாற்றினார்.

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற  ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்” 12-3-2018 திருப்பூரில் நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் இரண்டு ஜாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவேற்றிவைத்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், ஆவணியூர், வி.என்.பாளையம் தங்கம்மாள்-அண்ணாமலை ஆகியோரின் மகன் செல்வகுமார் – எடப்பாடி வட்டம்,ஜலகண்டபுரம் சாலை காவலர் குடியிருப்பில் வசிக்கும் சின்னராசு-மயில் ஆகியோரின் மகள் ஸ்வாதிப்பிரியா ஆகியோருக்கும், சேலம்,உடையாப்பட்டி, சாந்தி-கிருஷ்ணன் ஆகியோரின் மகன் பிரபு – பழனியில் வசிக்கும் செல்வி-வடிவேல் ஆகியோரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோருக்கும் மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ந்தது. இரண்டு இணையேற்பும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் இடையே நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”  ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’ திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் நாள் மாவட்ட மாநாட்டு பேரணி 12.03.2018 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கியது. பேரணிக்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத்தின் மகளிர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். பேரணியை கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.பேரணியை கழகத்தோழர் சுசீலா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். பேரணி முன் வரிசையில் பறைமுழக்கமும்,கழக மகளிரின் நடனத்துடன் சென்றது.குழந்தைகள், பெண்கள்,ஆண்கள் என வரிசையில் சுயமரியாதை இயக்கப்பெண்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,போராளிகளின் படங்களை தாங்கிப்பிடித்தபடி கொள்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் பேரணி நடந்தது.சாலையின் இருபுறமும் மக்கள் நடைபெற்ற பேரணியை உன்னிப்பாக கவனித்தனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையை பேரணி அடைந்தது. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் சிலை,அண்ணா...

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

(13.03.2018) உடுமலைப்பேட்டையில், தோழர் கெளசல்யா அவர்களின் “சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். நாள் : 13.03.2018 செவ்வாய் நேரம்: மாலை 3 மணி இடம்: காயத்திரி திருமண மண்டபம், கொழுமம், உடுமலைப்பேட்டை.

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் !

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் !

  பெரியார் சிலையை உடைப்போம் என்று சொன்ன எச்.ராஜாவையும் திருப்பத்தூரில் அய்யா சிலையை சேதப்படுத்திய காவி காலிகளை கண்டித்து, 7-3-2018 இன்று புதன் மாலை 5மணிக்கு,திருப்பூர் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலை கழகம்,திராவிடர்கழகம்,தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக,மதிமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள்,முற்போக்கு இயக்கங்கள் என அனைத்து அரசியல் கட்சி தோழர்களும் கலந்து கொண்டனர்.

திருப்பூரில்  ”மகளிர் நாள் மாநாடு – பேரணி !”

திருப்பூரில் ”மகளிர் நாள் மாநாடு – பேரணி !”

மார்ச் 12 – திருப்பூரில் ”மகளிர் நாள் மாநாடு – பேரணி !” திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்…… ”பெண்ணே எழு! விடுதலை முழக்கமிடு” எனும் முழக்கத்துடன்… பேரணி : கொடியசைத்து பேரணி துவக்கி வைப்பவர் ”தோழர் கொளத்தூர் மணி அவர்கள்” தலைமை : தோழர் சுசீலா இடம் : திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாநாடு திடல் இராயபுரம், திருப்பூர் வரை பேரணி துவங்கும் நேரம் 4 மணி மாநாடு : 12.03.2018 மாலை 5 மணி முதல் கலைநிகழ்ச்சிகள் நிமிர்வு கலையகம் தலைமை : பார்வதி திவிக திருப்பூர் வரவேற்புரை : சரண்யா, திவிக திருப்பூர் முன்னிலை : திருப்பூர் சரசுவதி, பிரியா, அஷ்விதா, ஜெயா, சந்திரா, பாண்டிச் செல்வி, கோமதி, ஜான்சி, ஜெயந்தி, இந்துமதி, தமிழ்மதி, சசிகலா, சங்கவி, கொளஞ்சி, மாலதி, கல்பனா, இராஜலட்சுமி, தனலட்சுமி, ஷைலஜா, பல்லடம் சரசுவதி, மைதிலி, மகாலட்சுமி, ஷாலினி, சாரதி, வசந்தி,...

நாகை மாவட்டக் கழகத் தலைவர் மகாலிங்கம் துணைவியார் படத்திறப்பு

நாகை மாவட்டக் கழகத் தலைவர் மகாலிங்கம் துணைவியார் படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் ம.மகாலிங்கம் துணைவியார் ம.சுந்தராம்பாள் 7.10.2017 அன்று சனிக்கிழமை காலை 9 மணி யளவில்  முடிவெய்தினார். அவருடைய உடல் மறுநாள் 08.10.17 அன்று எந்த வித மூட சடங்குகளுமின்றி எரியூட்டப்பட்டது. தன்னுடைய கண்களை கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய படத்திறத்திறப்பு நிகழ்வில் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

கொளத்தூர் படிப்பகத்தில் பெண்கள் சந்திப்பு

கொளத்தூர் படிப்பகத்தில் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் படிப்பகத்தில் 24.2.2018 ஞாயிறு அன்று பெண்கள் சந்திப்பு காயத்ரி தலைமையில் நடந்தது. கொளத்தூர் மேட்டூர் நங்கவள்ளி காவலாண்டியூர் திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண் டனர். கூட்டத்தில் சர்வதேச பெண்கள் தின வரலாறு குறித்தும் பெண்கள் தின விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாடப் பட்டது. இயக்கப் பணிகளில் பெண் களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்ட து   தோழர்கள் சூரிய குமார் டைகர் பாலன் நங்கவள்ளி கிருஷ்ணன் கொளத்தூர் பரத் , ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைச் செய்தனர்.தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி கலந்து கொண்டார். தோழர்கள் அனிதா, சுதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு-திருப்பூர்

2018க்கான திருப்பூர் திவிக செயல் திட்டம் குறித்து விவாதிக்க மாவட்ட கலந்துரையாடல் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 11/2/2018 மாலை 5 மணிக்கு மாநகர் அமைப் பாளர் முத்து தலைமையில் நடந்தது. நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி உள்ளிட்ட 15 தோழர்கள் கலந்து கொண்டனர் கழக செயல்பாடுகளை 2018 ஆம் வருடம் மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, தமிழ்நாடு மாணவர் கழகம் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டன. கருணாநிதி 10 இளைஞர்களுக்கு பறையடிக்கப் பயிற்சித் தர முன் வந்தார். மார்ச் 12இல் பெரியாரிய பெண்கள் மாநாடு சிறப்புடன் நடந்தேற ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. இராயபுரத்தில் சிறப்பாக மாநாட்டை நடத்துவது எனவும் பெரியார்சிலை முதல் மாநாட்டு திடல் வரை அணிவகுப்பு ஊர்வலம் செல்லவும் முடிவெடுக்கப்பட்டது. தோழர் பார்வதி நன்றியுரையுடன் 7:30 மணிக்கு கலந்துரையாடல்...

திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்

திருப்பூர் இலட்சுமிநாதன் முடிவெய்தினார்

திருப்பூரில் பெரியாரைப் பேணிய குடும்பம் தோழர் அருணாசலம் அவர்களின் மகள் இலட்சுமி நாதன் (93) பிப்ரவரி 9, மாலை 3 மணிக்கு பெரியார் காலனியில் உள்ள அவரின் இல்லத்தில் இயற்கை எய்தினார். கடல் கடந்து இலங்கை சென்று தன் உழைப்பால் ஜவுளி வியாபாரத்தை கொழும்பு மற்றும் மதுரையில் நிறுவிய அருணாசலம் , இளவயது முதல்கொண்டே பெரியாரிய கொள்கையில் நாட்டம் கொண்டு குடிஅரசு பத்திரிக்கையை தொடர்ச்சியாக படித்து தன் குடும்பத்தார் அனைவரையும் பெரியாரிய வாழ்க்கை முறைக்கு  திருப்பினார். மூத்த மகனின் சுயமரியாதை திருமணத்தை திருப்பூரில் தந்தை பெரியாரைக் கொண்டு மிக சிறப்பாக நடத்தினார். அவரின் இரு மகள்களில் ஒருவரான இலட்சுமி நாதன், பெரியார் திருப்பூர் வரும்போதெல்லாம் அவருக்கு பிடித்தமான பிரியாணி செய்து பெரியாருக்குக் கொடுத்து உபசரிப்பார். 1945 மதுரை சுயமரியாதை மாநாட்டில் குடும்ப சகிதம் கருப்பாடை அணிந்து கலந்துகொண்டு  கொள்கைத் தூணாய் இருந்தவர். சுயமரியாதை வாழ்வின் அங்கமாய் தன் இரு மகன்களுக்கும் இரணியன்,...

கழகம் எடுத்த  தமிழர் திருநாள் எழுச்சி

கழகம் எடுத்த தமிழர் திருநாள் எழுச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக 2018ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஓட்டப் பந்தயம், கோ-கோ போன்ற எண்ணற்ற போட்டிகள், காவல் துறையின் எதிர்ப்பை மீறி, ஒலிபெருக்கி அனுமதி மறுத்த போதும் அதை பொருட்படுத்தாது நடத்தியே தீருவோம் என்று நமது தோழர்களும், கிராம பொதுமக்களும், தீர்மானம் போட்டு சிறப்பாக நடத்தி முடித்தனர். 16.01.2018 அன்று இரவு பரிசளிப்பு விழா நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது. விழாவை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நட. பாரதிதாசன் (மாவட்டச் செயலாளர்), நட. பாபு அம்பேத்கர், பாலமுருகன் சிலம்பரசன், மற்றும் தமிழ்நாடு  மாணவர் கழகத் தோழர்கள் பாலாஜி, தினேஷ், மோகன், மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். பேராவூரணி :  போராட்டப் பண்பே தமிழர்களின்...

திருப்பூரில் ‘நிமிர்வோம்’ நூல் விற்பனை அரங்கிற்குப் பேராதரவு

திருப்பூர் மாவட்ட  கழகம் சார்பாக திருப்பூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’, புத்தக நிலையம் அரங்கு எண்.94 செயல்பட்டது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இளைய சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. 11 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரங்கின் முதல் நாள் விற்பனையைக் கழகப் பொருளாளர் சு. துரை சாமி, அறிவியல் மன்ற அமைப் பாளர் வீ. சிவகாமி,  தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புத்தகத் திருவிழாவின் ஆயத்தப் பணிகளான அரங்கு வடிவமைத்தல், புத்தகங்களைத் தருவித்தல் போன்ற பணிகளில் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், ஆசிரியர் சிவகாமி, மாவட்ட அமைப்பாளர் முத்து, சத்தியமூர்த்தி, சூரி ஆகியோர் கவனித்தனர். அரங்கின் விற்பனையை மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, சரசு, பார்வதி, வே. இராமசாமி ஆகியோர். காலை முதல் மாலை வரை புத்தக நிலையத்தின் விற்பனையையும், அரங்கிற்கு வருவோரிடம் கொள்கை...

கொளத்தூரில் மாட்டுக்கறி விருந்துடன் கழகம் நடத்திய ‘இந்துமதப் பெருமைகள்’ ஆய்வரங்கம்!

கொளத்தூரில் காவல்துறை, ஆண்டாள் ஆய்வரங் கத்துக்கு தடைபோட்டது; உடனே ‘ஆண்டாள் அருள்வாக்கு மகிமை’ என்ற தலைப்பில் கழகம், ஆய்வரங்கை பெயர் மாற்றி நடத்தி முடித்தது. இது குறித்த செய்தி விவரம்: 03.02.2018 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” எனும் கருத்தரங்கிற்கு காவல்துறை தடை விதித்தது. மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டுக் கதவுகளில் வருவாய்த்துறை அலுவர்கள் முன்னிலை யில்  31.01.2018 அன்று ஒட்டினர். இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது: இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள் ! வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண...

கொளத்தூர் நோக்கி புனித யாத்திரை சென்ற திருப்பூர் மாவட்ட கழகம்

கொளத்தூரில் 3/2/18 அன்று நடக்கவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” என்ற கருத்தரங்கை காவல்துறை தடை விதித்த காரணத்தால் கழக தலைவர் “ஶ்ரீமத் சடகோவ இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு” என்ற தலைப்பில் ஆன்மீக உபன்யாசம் செய்ய திட்டமிட்டார் அதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட திவிக “சோடா பாட்டில் புகழ்” ஜீயரின் அருள்வாக்கை கேட்க புனித யாத்திரையை அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்பினர் வண்டியில் யாத்திரையின் நோக்கத்தை குறிக்கும் வகையில் பேனர் கட்டி, பெரியார் பிஞ்சுகள் நாமம், செந்தூரம் இட்டு கையில் ஜீயரின் வன்முறை பேச்சை குறிக்கும் வகையில் காவி நிற முக்கோண கொடியில் சோடா பாட்டில் ஜீயர் பெயரோடு கொடியில் அச்சிட்டு யாத்திரை கிளம்பினர் ஆண்டாளின் பக்தர்களாக கொளத்தூரில் முன்வரிசையில் அமர்ந்து வேத உபன்யாசங்களையும் ஆன்மீக சொற்பொழிவையும் கண்டு கேட்டு ஆண்டாளின் திருவருளை பெற்றனர் நிகழ்வில் மதியம் கோமாதா பிரியாணி பூஜை செய்து உண்டு மகிழ்வுடன் ஊர் திரும்பினர்