திருப்பூர்- கோவையில் விநாயகர் சதுர்த்தி நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மனு
விநாயகர் சதுர்த்தியின் போது கடை பிடிக்க வேண்டிய சட்ட நடை முறை கள் அடங்கிய விண்ணப்பம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் (திருப்பூர் மாவட்டம்) தோழர்களால் 19.08.2019 அன்று காலை 10 மணிக்கு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை தொடர் புடைய அதிகாரிகளிடம் வழங்கி நடைமுறைபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில் இராசு, முத்து, அய்யப்பன் ஆகியோர் சென்றிருந்தனர்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – சிலை அமைப்பது தொடர்பாக – சென்னை உயர்நீதிமன்றத்தின் (றுஞ சூடி 25586/2004. னுவ.17.09.2004) வழிகாட்டுதல்-தமிழக அரசின் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)துறையின் அரசாணை எண் 598,
நாள் 09.08.2018 நிபந்தனைகளை விதி முறைகளை செயல் படுத்தக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 21.08.2019 அன்று கோவை மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்து வற்புறுத்தப் பட்டது.
பெரியார் முழக்கம் 29082019 இதழ்