கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்
சென்னை : திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டாக தமிழர் திருநாள்…பொங்கல் விழா 13.01.2019 இராயப்பேட்டை வி.எம்.தெருவில் (பெரியார் சிலை அருகே) மாலை 6 மணிக்கு புதுவை அதிர்வு கலைக்குழுவினரின் பறை யிசை முழக்கத்தோடு தொடங்கியது.
கிராமிய கலை பண்பாட்டு பாடல்களோடு பகுதி பொதுமக்களின் ஆரவாரத் தோடும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பேராசிரியர் சரசுவதி, மக்கள் நீதி மய்யம் சௌரிராஜன், மணிமேகலை மற்றும் திருநங்கைக்காண உரிமை மீட்பு இயக்கத்தைச் சார்ந்த அனுஸ்ரீ, ஆர்.என்.துரை (திமுக, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்வினை இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஒருங்கிணைத்தார். தொடர்ச்சியாக சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறுவர், சிறுமியர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக அருண் ரிதம்ஸின் சென்னை கானா, திரைப்படப் பாடல்களோடு மகிழ்ச்சியோடு விழா நிறைவுற்றது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சி 15.01.2019) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை வரை பெரியார் திடல், பெரியார் படிப்பகம், வீரபாண்டி பிரிவில் நடைபெற்றது.
காலை 10 மணி அளவில் தோழர் சரசுவதி பொங்கல் வழங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது . மாலை பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் உரையாற்றினர்.
பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், பொருளாளர் துரைசாமி சிறப்புரையாற்றினர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் திருப்பூர் தோழர்களுடன் ஈரோடு, இராசிபுரம், கோவை, மடத்துகுளத்தைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.
குலசேகரம்: திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம் நடத்திய தமிழர் திருநாள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திரு வள்ளுவர் பிறந்த நாள் விழா தெரு முனைப் பரப்புரைக் கூட்டமாக குல சேகரம் அரசமூடு சந்திப்பு பகுதியில் பெரியார் தொழி லாளர் கழக மாவட்டத் தலைவர் நீதிஅரசர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்அரசன் வரவேற்புரையாற்றினார்.
வழக்குரைஞர் சிபு, தமிழ்மதி (மேற்கு மாவட்ட பொறுப்பாளர்), போஸ் (மார்க்சிய சிந்தனை மையம்) ஆகியோர் உரையாற்றினர். மஞ்சுகுமார் நன்றி கூறினார். வின்சென்ட், சஜின், இளங்கோ, இரமேஸ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 24012019 இதழ்