Category: ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

பேரணியில் முழக்கங்கள்

பேரணியில் முழக்கங்கள்

பேரணியில் கழகத் தோழர்கள் எழுப்பி வந்த முழக்கங்கள் மக்களைக் கவர்ந்தது. ஒழியட்டும் ஒழியட்டும்! மக்களைப் பிரிக்கும் பார்ப்பனியம் ஒழியட்டும் ஒழியட்டும் சுயமரியாதை வாழ்க்கையே சுகமான வாழ்க்கை பில்லி,சூனியம்,ஜோசியம் எல்லாம் சாமியர்கள் வயிறு வளர்க்க உதவுது காசை எல்லாம் செலவு செய்து தமிழர் வாழ்வு சீரழியுது! நடந்ததைச் சொல்லும் ஜோதிடத்தால் நடக்கப் போவதை சொல்ல முடியுமா? அறிவுடனே நாம் இருந்தால் ஜோதிடப் புரட்டு நடக்குமா? ஜாதி மறுப்பு திருமணம் செய்வீர் காதலோடு மகிழ்வாய் வாழ்வீர் ஜாதியத்தைக் காப்பாற்ற பெண்களைத்தான் நம்புறான்! பெண்கள் உரிமை பேசினால் நான் ஆம்பள என்கிறான். தடுத்திடுவோம் தடுத்திடுவோம் ஜாதி ஆணவக்கொலையைத் தடுத்திடுவோம் காதல் செய்வீர் காதல் செய்வீர் இளைஞர்களே காதல் செய்வீர் ஜாதி ஒழிக்க காதல் செய்வீர் சட்டமியற்று சட்டமியற்று ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டமியற்று வேண்டாம் வேண்டாம் ஜாதிக்குள்ளே திருமணம் வேண்டவே வேண்டாம் வாழ்வில் மூடநம்பிக்கை வேண்டாம் வேண்டாம் சனாதனம் என்பது பார்ப்பனியமே பார்ப்பனியம் என்பது...

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

அர்ச்சகர் சட்டம்: மதுரை நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் குமார வயலூர் கோவிலில் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தின்படி மூன்று அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பார்ப்பனர். ஏனைய இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் செல்லாது என்றும், இதற்கு முன்பு பணியில் இருந்த பார்ப்பனர்களுக்கே அர்ச்சகர் பணி கொடுக்கப்பட வேண்டும் என்றும், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்ச் 9, 2023 மாலை 4 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடக்கமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, காஞ்சிபுரம் ரவிபாரதி உரையாற்றினார். பின், தோழர் நாத்திகன், இரண்யா, ப்ரீத்தி ஆகியோர் ‘தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா?’ பாடல்களைப் பாடினர். அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், பணி...

ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரை கண்டித்து பல்வேறு இடங்களில் நடந்த கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள். மேட்டூர் : ஆளுநரே வெளியேறு! ஒன்றிய அரசே, ஆணவம் பிடித்த ஆளுநரைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்தோடு மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்பு களுடன் 12.01.2023 வியாழன் மாலை 4.30 மணியளவில் மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா தலைமையில் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் குமரப்பா, ஆளுநரைக் கண்டித்து கண்டன முழக்கமிட அனைவரும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் சி.சதீஷ், சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், ளுனுஞஐ கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஃபைரோஸ், திராவிடர் விடுதலைக்கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு...

சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் முடிவுகட்டுவோம்! முடிவுகட்டுவோம்! சாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவுகட்டுவோம் முடிவுகட்டுவோம்! உரக்கச் சொல்வோம்! உரக்கச் சொல்வோம்! எல்லோரும் நிகரென்று உரக்கச் சொல்வோம்! தமிழக அரசே! துணை போகாதே! தமிழக அரசே! தமிழக அரசே! சாதி ஆணவக் கொலைக்கு எதிராய் தனிசட்டம் இயற்றிடு! கைதுசெய் கைதுசெய்! கொலை செய்த கூலிப்படையை உடனடியாக கைதுசெய்! அமைச்சர்களே, அமைச்சர்களே ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு ஊர்வம்புப் பேசிக்கொண்டு ஊர்வலம் போவதற்கா அமைச்சர் பதவி உங்களுக்கு? தமிழர்களே! தமிழர்களே! சாதியைக் கட்டியழுதால் நாதியற்று போவோம் நாம்! பெற்றெடுத்த மகளையும் மணம்முடித்த மருமகனையும் மகள் வயிற்றுப் பிள்ளையையும் கொல்லச் சொல்லும் சாதிவெறி! சாதிவெறி போதையது! தாயுணர்ச்சிக் கொன்றுவிடும் தந்தையுணர்ச்சிக் கொன்றுவிடும் மாந்தநேயம் கொன்றுவிடும்! பழக்கமாம்! வழக்கமாம்! வழக்கறிஞர் வேலையும் மருத்துவப் படிப்பும் எந்த சாதிப் பழக்கமய்யா! பாட்டன் முப்பாட்டன் பட்டப் படிப்பு படிச்சானா? இடஒதுக்கீடு வாங்கிக்கிட்டு அரசு வேலைக்குப் போனானா? எல்லாமே மாறும்போது மணமுறைதான் மாறாதா? மந்திரிப்பதவி வாங்கிகிட்டு...

மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மனிதக்கழிவை மனிதன் அகற்றும் அவல நிலையை போக்கக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம்! _____________________ விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் விஞ்ஞான யுகத்திலே மலக்குழி கழிவுகளை மனிதன் அள்ளுவது அவமானம்! ஆலயத்தில் மணி அடிக்க எந்திரம் உள்ள நாட்டிலே அடைப்பை நீக்க கருவியில்லை ஆளும் அரசுகளுக்கு வெக்கமில்லை! வெக்கக்கேடு மானக்கேடு காரித் துப்புது உலகநாடு. __________________ தூய்மை இந்தியா நாடகங்கள் தொலைகாட்சி விளம்பரங்கள் தெருவைப் கூட்டும் புகைப்படங்கள்! தேடிக்கொள்ளும் விளம்பரங்கள் மோடி அரசின் மோசடிகள் காலியாகுது வரிப்பணங்கள் ஏமாற்றாதே! ஏமாற்றாதே! எளியவர்களை ஏமாற்றாதே! வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தூய்மைத் தொழிலாளரை வஞ்சிக்காதே! ___________________ தமிழக அரசே! தமிழக அரசே! அருந்ததியர்களின் வாக்குகளால் ஆட்சியை பிடித்த அதிமுக அரசே! அண்டை மாநிலம் கேரள அரசு அறிமுகம் செய்து உள்ள கழிவகற்றும் எந்திரமாம் பேண்டிக்கூட் ரோபோவை தமிழகத்தில் கொண்டுவர தயக்கம் ஏன்? தயக்கம் ஏன்? கொண்டு வா!...

கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

வீரவணக்கம் வீரவணக்கம் எங்கள் தோழர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்…. வீரவணக்கம் வீரவணக்கம்! பெரியாரின் மாணவன் அண்ணாவின் ஆசைத்தம்பி! தலைவர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அக்கி அழகு பார்த்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷா முறையை ஒழித்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! இறந்தும் போராடிய போராடி வெற்றிகண்ட போராளி தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! 69சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்த சமூகநீதி நாயகனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! திராவிடத்தின் அடையாளம் அரக்கர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! சமத்துவபுர நாயகனுக்கு சமூகநீதி காவலனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மானமிகு சுயமரியாதைகாரர் டாக்டர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! ஹிந்தியை அடித்துவிரட்டிய ஹிந்து எதிர்ப்பு போராளி தமிழின தலைவர் கலைஞருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்….. பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்த தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! எங்கள் தோழர் கலைஞருக்கு அசுரர் குல தலைவனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! ராமன் என்ன இஞ்சினியரா என்று கேட்ட தலைவனுக்கு...

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – பெரியார் சிலையில் கைவைப்பானா ?

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – பெரியார் சிலையில் கைவைப்பானா ?

வாழ்க! வாழ்க! வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்வைத் தந்தார் நம்பெரியார்! வழியைத் தொடர்ந்தார் நம்அண்ணா! இழிவைத் தடுத்த தலைவர்களை இழிவு செய்ய விடமாட்டோம்! எங்கள் தலைவர் பெரியாரை இழிவு செய்தால் மிதிபடுவாய்! எங்கள் தந்தை சிலைமீது எச்சில் துப்ப தெருநாயா? எச்சில் துப்பும் தெருநாய்கள் இனத்தைக் கெடுக்க விடமாட்டோம்! கைது செய் கைது செய் எச்ச ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய் விடமாட்டோம் விடமாட்டோம் வடமொழி திணிக்க விடமாட்டோம் வாலை ஆட்ட விடமாட்டோம் தமிழைத் தாழ்த்த விடமாட்டோம்! தந்தையைப் பழிக்க விடமாட்டோம்! மதவெறி பரப்ப விடமாட்டோம்! மடமையைத் திணிக்க விடமாட்டோம்! பெரியார் நாடு தமிழ்நாடு! பிளவை வளர்ப்பது வடநாடு! இந்தி திணிக்கத் துடிக்கின்றார் இளைய தமிழரை அழிக்கின்றார் ‘நீட்’டால் இறந்த அனிதாவை நினைத்தால் பெரியார் வழிதெரியும்! தமிழர் தந்தை நம்பெரியார் தடியைக் காப்போம் இனம்காப்போம்! பொறுமை காக்க வழியில்லை பொங்கி எழாமல் விடிவில்லை பறிபோ கிறது தமிழ்நாடு பாதை...

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – திருப்பூரில் கல்வியில் மதத்தை திணிப்பதை எதிர்த்து

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – திருப்பூரில் கல்வியில் மதத்தை திணிப்பதை எதிர்த்து

ஆர்ப்பாட்டம் – கைது – 25.10.2018 – திருப்பூர். மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழம்மை அமைப்புகளுடன் இணைந்து 25.10.2018 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் காவல்துறையின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி தோழர்கள் 63 பேர் கைதாகினர். அப்போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் : * திணிக்காதே திணிக்காதே பள்ளிக்கூட பாடத்திலே மூடநம்பிக்கை திணிக்காதே விதைக்காதே விதைக்காதே பிஞ்சுகளின் நெஞ்சிலே காவி நஞ்சை விதைக்காதே ஊரூராய் பறக்குற நாடு நாடாய் சுத்துற அதானி விமானத்துல ஏர் இந்தியா விமானத்துல எங்க போச்சி எங்க போச்சி புஷ்பக விமானம் எங்க போச்சி எங்க போச்சி நாகாஸ்திரம் இருக்குதாம் பிரம்மாஸ்திரம் இருக்குதாம் வஜ்ராயுதம் இருக்குதாம் இன்னும் பல ஆயுதம் இருக்குதாம் வேதத்துல கதைகதையா புராணத்துல இருக்குதாம் இருக்குதாம் எதுக்கு...