பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது
திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09.09.2018 அன்று வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு மற்றும் மாவட்ட மாநகர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- பெரியார் 140ஆவது பிறந்தநாள் அன்று 17.09.2018 மாலை 4 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத் தில் இருந்து பேரணியாக புறப்பட்டு இரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு.
- 24.09.2018 திங்கள் அன்று காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலையில் இருந்து இரு சக்கர வாகன ஊர்வலமாய் நகரில் 25 இடங்களில் கொடியேற்று விழா மிகச் சிறப்புடன் நடைபெற திட்டம் வகுக்கப்பட்டு கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைக்கிறார்.
- கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம் வெற்றி பெற பங்கெடுத்து அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்
- ‘பெண் ஏன் அடிமையானாள்’– 1000 படிகளை திருப்பூரில் உள்ள மகளிர் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்த்து டிசம்பர் 24 நினைவு நாள் அன்று கட்டுரை போட்டி வைக்க தீர்மானிக்கப் பட்டது.
பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்ய குழு அமைத்தனர். 25 கொடி கம்பங்களிலும் கருப்பு வண்ணம் தீட்டி புதிய கொடி கட்ட செயல் திட்டம் வகுக்கப் பட்டது. பிறந்தநாள் கொண்டாட்ட செலவு நிதியாக இராமசாமி ரூ. 5000 மற்றும் கருணாநிதி ரூ.3000 அன்பளிப்பாகத் தர ஒப்புக்கொண்டனர். மற்ற தோழர்கள் கலந்தாலோசித்து பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, இணைய தள பொறுப் பாளர் விஜய்குமார், மாவட்ட அமைப்பாளர் அகிலன், சங்கீதா, இராமசாமி, கருணாநிதி, முத்து, முத்துலட்சுமி தனபால், அய்யப்பன், மணி, சைலஜா, இராஜசிங்கம், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 13092018 இதழ்