திருப்பூர் மாஸ்கோ நகரில் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூரில் நடந்த பொங்கல் விழாவில் கழகப் பொருளாளர் துரைசாமி மற்றும் கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர்.

27.01.2019 ஞாயிறு அன்று  காலை 8.00 மணி முதல் மாலை வரை சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி பெரியார் திடல், மாஸ்கோ நகரில் நடைபெற்றது

காலையில் முதல் நிகழ்வாக பொங்கல்  வழங்கி மாவட்ட தலைவர் முகில்ராசு தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் அகிலன் மற்றும் மாநகர செயலாளர் மாதவன்   விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தினர்

மாலை ‘விரட்டு” கலைக் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நடை பெற்றது. பகுத்தறிவு கருத்துகளை எளிய முறையில் நாடக வடிவில் மக்களிடம் பரப்பினர். நிகழ்வில் பறையாட்டம், ஒயிலாட்டம், மயில் காளை ஆட்டம், மான்கொம்பு ஆட்டம், பாடல்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்

பெரியார் முழக்கம் 07022019 இதழ்

You may also like...