குன்னத்தூரில் காவல்நிலைய வளாக கோயில் சிலை அகற்றம்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக விநாயகர் கோயில் கட்டி வழிபட்டு வந்த நிலையில், திராவிடர் விடுகலைக் கழகக் குன்னத்தூர் நகரப் பொறுப் பாளர் சின்னச்சாமி தலைமையில் தோழர்கள் 20.6.2019 அன்று குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

விநாயகர் சிலை அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், கோயில் கட்ட எழுப்பிய சுவரும் அகற்றப்பட்டு, காவல் நிலைய பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவும் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 27062019 இதழ்

You may also like...