கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:
குமரி மாவட்டம் : திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் நடத்திய பெரியார்140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு, விண்ணரசு வித்யா கேந்திரா, அழகிய மண்டபத்தில் தக்கலை எஸ்.கே.அகமது (பெரியாரியலாளர்) தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஷ்ணு “பெரியார் பார்வையில் கடவுள் மறுப்பு” என்னும் தலைப்பிலும், நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழகம், மாவட்டத் தலைவர்) “பெரியார் பார்வையில் இடஒதுக்கீடு” என்னும் தலைப்பிலும், தமிழ் மதி (மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) “பெரியார் பார்வையில் நீட்” என்னும் தலைப்பிலும், போஸ் (மார்க்சியலாளர்) “பெரியார் பார்வையில் பொதுவுடைமை” என்னும் தலைப்பி லும், மகிழ்ச்சி (ஒருங்கிணைப்பாளர், பொது வுடைமை தொழிலாளர் கட்சி) “இளைஞர்கள் எதை நோக்கி பயணிப்பது” என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். பின்பு கலந்துக்கொண்ட அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சூசையப்பா (முன்னாள்மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) நன்றி கூறமுடிவுற்றது.
கூட்டத்தில் மஞ்சு குமார் (மாவட்டப் பொருளாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) இரமேஸ்பாபு (இணைச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்), ஜாண்மதி (மாவட்டச் செய லாளர், பெரியார் தொழிலாளர் கழகம்), பரைக்கோடு செ.இரவி(பெரியாரியலாளர்), ளு.நு.மேசியா (ப.நா.பு. ம.தொ. செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), சி.இராதாகிருஷ்ணன் (ஊஞஐ(ரு) உறுப்பினர்) மரி. ஆர். கோபி (காமராஜர் பசுமை பாரதம், ஒருங்கிணைப் பாளர்), முனைவர் டி.மத்தியாஸ் (பணி நிறைவு பேராசிரியர்), செஜின் (ஸ்காட் கல்லூரி பேராசிரியர்), அன்வர் (பகுத்தறிவாளர்), ஆசிரியர் அருள்செல்வன் (சமூக ஆர்வலர்) செல்வி மேரி, இராஜன், சஜிகுமார், வைகுண்டராமன், சந்தோஸ், விஜயகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டுச் சிறப்பித்தனர்.
விழுப்புரம் : தமிழகத்தில் மதவெறி காலூன்ற முடியாத அளவிற்கு ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் கொள்கையில் நிலைத்திருக்கின்ற தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கடந்த காலங்களை விட இந்த ஆண்டு மிகச் சிறப்பாக தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டன.
அதனடிப்படையில் பெரியார் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டம் நயனார்பாளையம் கிராமத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டன.
காலை 8.30 மணியளவில் வி.அலம்பளம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் ( பேனா, நோட்) மற்றும் இனிப்புகளை பாலன் பாலமந்திர் மெட்ரிக் பள்ளியில் பணிபுரிகின்ற கோ.மணி,தனது செலவில் வழங்கினார். தலைமை ஆசிரியர் அ.சுசிலா வரவேற்புரையாற்றி னார். மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஆ.நாகராசன், க.அசன், பள்ளியின் ஆசிரியர் சரவணன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர். க.மதியழகன் வாழ்த்தி நன்றியுரையாற்றினார்.
காலை 10 மணியளவில் தந்தை பெரியார் பள்ளியில் பெரியாரின் முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் தந்தை பெரியாரின் போராட்டங்கள் மற்றும் அவரின் புகழ்குறித்து சிறப்பாக பேசினார்கள். அனைவருக்கும் பரிசு பொருள்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்.இராவணன் சார்பில் வழங்கப்பட்டது. முருகன் மளிகை இரமேசு சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இறுதியாக புலவர் .கு.அண்டிரன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
மாலை 6 மணிக்கு மேல் தாரை தப்பாட்டத்தோடு பலர் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாரின் பொது வாழ்வு குறித்து க.மதியழகன், ந.வெற்றிவேல், புலவர் கு.அண்டிரன் ஆகியோர் சுருக்கமாக சிறப்புரையாற்றினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலு நன்றியுரையாற்றினார்.
விழாவில் காலை முதல் மாலைவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மணி, சக்திவேல், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக இராமசாமி, இராமதாசு, இராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மைக்கேல், ஆறுமுகம் மற்றும் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மகேந்திரன் ( ஆத்தூர்), சகாதேவன், ஐயம்பெருமாள், திருமால், சரவணன், அரவிந்தன், சையது முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்தனர். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒலிபெருக்கியை இயக்குவதற்கு முருகன் மளிகை இரமேசு வழங்கினார். பங்களிப்பு மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இயக்கம் சார்பாக நன்றிகலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஈரோடு வடக்கு
கோபி ஒன்றியம்: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கோபி ஒன்றியத்தின் சார்பில் அனைத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஊர்வலம் நடைபெற்றது. கோபி சீதா கல்யாணம் மண்டபத்தில் துவங்கி பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலையை அடைந்தது. அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் திவிக, திக, தபெதிக, திமுக, மதிமுக, புஇமு உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டனர்.
அளுக்குளி பகுதி கழகத் தோழர்களின் சார்பில் அய்யா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அளுக்குளி பேருந்து நிறுத்தம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கழக கொடிக்கம்பத்தில் தங்கம் கழக்க் கொடியை ஏற்றினார். நிகழ்வில் விசயசங்கர், விசய பிரகாசு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம் ஒன்றியம் : பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு டி.என் பாளையம் ஒன்றியம் சார்பில் கொடியேற்றம் மற்றும் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம் நடைபெற்றது. காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்ட அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அங்கு நடைபெற்ற பரப்புரை பயணத்தில் தோழர்கள் இரமேசு, வேலுச்சாமி உரை நிகழ்த்தினர்.தொடர்ந்து தோழர்கள் ஊர்வலமாக காசிப்பாளையம் பகுதிக்கு சென்றனர். அங்கு கழகக் கொடி கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் காளியண்ணன் கழகக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து ஊர்வலம் அக்கரை கொடிவேரி பிரிவை அடைந்தது. அங்கு கழகக் கொடியை திமுக ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஏற்றினார். தொடர்ந்து செயக்குமார் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளி ஜெயஸ்ரீக்கு ரூபாய் பத்தாயிரம் உதவித் தொகையை திவிக மாநில வெளியீட்டு செயலாளர் இராம.இளங்கோவன்மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிவபாலன் வழங்கினர். அங்கு நடந்த பரப்புரைப் பயணத்தில் இரமேசு, இளங் கோவன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் அனைவருக்கும் கொடிவேரி அணை பகுதியில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வுக் கான ஏற்பாடுகளை செயக்குமார் ஒருங்கிணைப்பில் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
சத்தி ஒன்றியம்: அய்யா அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சத்தி ஒன்றிய கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் ஒருங்கிணைந்த ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தலித் விடுதலை கட்சி நிறுவனர் டாக்டர் செங் கோட்டையன் துவங்க வைத்து சிறப்புரை ஆற்றினார். ளுசுகூ கார்னரில் துவங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம் வந்து பின் புதுவடவள்ளி சமத்துவபுரத்தில் நிறைவுபெற்றது. சமத்துவபுரத்தில் அமைந்த உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து பின் அனைத்து அமைப்பின் பொறுப்பாளர்கள் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை திவிக பழனிச்சாமி, மூர்த்தி மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் முத்து, கிருட்டிணசாமி ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
நம்பியூர் ஒன்றியம் : பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நம்பியூர் ஒன்றியம் கூடக்கரையில் அலங்கரிக்கப்பட்ட அய்யா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் ஊர்வலமாக தோழர்கள் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள அய்யா சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வை தோழர்கள் கலைச்செல்வன், சிவராஜ், முருகேசன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர்.
அந்தியூர் ஒன்றியம் : பெரியார் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அந்தியூர் ஒன்றியம் சார்பில் கீழ்வானி இந்திரா நகரில் அமைக்கப்பட்டிருந்த அய்யா படத்திற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் சுந்தரம் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்மாபேட்டைஒன்றியம் : அம்மாபேட்டை ஒன்றிய கழகத்தின் சார்பில் குருவரெட்டியூரில் அமைந்துள்ள அய்யா சிலைக்கு நாத்திகசோதி தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் தோழர்கள் வேல்முருகன், இராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அமைப் பாளர் சாமிதுரை தலைமையில் சங்கராபுரம் பகுதியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அரசம்பட்டு பெரியார் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. செம்பராம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 200 மாணவர்களுக்கு லட்டு கொடுத்து ஆசிரியர்களுக்கு கழக துண்டறிக்கைகள் கொடுக்கப் பட்டது அந்த பள்ளிக்கு கழகத்தின் சார்பில் பெரியார் படம் வழங்கப்பட்டது. துளசிராஜா, ராஜேஷ் குமார், முருகன், கார்மேகம், ராஜீவ்காந்தி மற்றும் 20 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
செஞ்சி : 140 ஆவதுபெரியார் பிறந்தநாள் விழா செஞ்சி கூட்டு சாலையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சியில் பெரியார் சாக்ரடீஸ் அனைவரையும் வரவேற்க பெரியார் படத்திற்கு ம.தி.மு.க.துனை பொது செயலாளர் ஏ.கே.மணி, வி.சி.க. வெற்றிச் செல்வன், தி.க. அர்ச்சுணன், பழங்குடி. ம.மு. சுட ரொளி சுந்தரம், தி.மு.க. கர்ணன், அ.ம.க.சேகர், சி.பி.ஐ. செல்வராஜ், பெரியார் சிந்தனையாளர் பேரவை துரை திருநாவுக்கரசு. அரிமா சங்கம் அசோக், கவிஞர் செஞ்சி தமிழினியன், தர்மசிங், ஞானமணி மற்றும் பலர் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். அரசு நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
அனந்தபுரம் : சூர்யா தலைமையில் மார்கெட் வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்னையில் பெரியார் சிலையை அவமதித்ததை கண்டித்து சாலைமறியல் செய்தனர். தோழர்களை கைதுசெய்து மாலை விடுவித்தனர்.
பெரம்பலூர் : பெரம்பலூர் திராவிடர் விடுதலைக் கழம் சார்பாக பெரியார் 140வது பிறந்த நாள் விழாவிற்காக நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டபட்டது. காலை 9 மணி அளவில் மாவட்டத் தலைவர் தாமோதரன் தலைமையில் சுதாகர், ராஜேஸ்குமார், எல்அய்சி கார்த்திகேயன், சிந்தனையாளர் வட்ட பொருப்பாளர் துரைசாமி, ஜெயராமன், தமிழோசை, பாளை செல்வம், புலவர் வரதராசன் ஆகியோர் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் : செப் -17 தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் – சமத்துவபுரம் எரிச்சந்த்தம் பகுதியில் அமைந்துள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர்.
மேட்டூர் ஆர்.எஸ். : தந்தை பெரியார் -140ஆவது பிறந்தநாள் விழா; இருசக்கர வாகன பேரணி; கொடியேற்று விழா; பறை முழக்கம் – சமத்துவபுரம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனைத்து இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.
சமத்துவபுரம் பெரியார் சிலைக்கு கோவிந்தராசு (மேற்கு மாவட்ட செயலாளர்), ஆர்.சி.பிலாண்ட்டில் சு.இராமச்சந்திரன், இராமன் நகரில் சந்திரமூர்த்தி, புதுச்சாம்பள்ளியில் நாகராசு (தமிழ்நாடு மாணவர் கழகம்). ஆர்.எஸ் பேருந்து நிலையத்தில் கு.விவேக் (ஆர்.எஸ் பகுதி செயலாளர்), ஆர்.எஸ் டி.கே.ஆர் நினைவு படிப்பகத்தில் பொ.முரளி (ஆர்.எஸ் பகுதி தலைவர்), (ஆர்.எஸ் ) என்.எஸ்.கே நகரில் பழ.சுசிந்தர் (ஆர்.எஸ் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்), சேலம் கேம்ப் பேருந்து நிலையத்தில்சந்தோஷ் (சேலம் கேம்ப்), காந்தி நகர் படிப்பகத்தில் கோவிந்தராசு (மேற்கு மாவட்ட செயலாளர்) ஆகியோர் கொடியேற்றினர்.
திருப்பூர் : பெரியார் 140ஆவது பிறந்த நாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இரு சக்கர வாகன ஊர்வலம் மற்றும் கொடியேற்று விழா திருப்பூர் இரயில் நிலையம் அருகே நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு கழகத்தினர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதன் பின்னர் பெரியார் கொள்கைகளை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பேரணிக்கு மாவட்டத் தலைவர் முகில்ராசு தலைமை தாங்கினார். பொருளாளர் சு. துரைசாமி தொடங்கி வைத்தார். பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் கொடியேற்றி பேசினார். மாவட்ட செயலாளர் நீதியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அங்கிருந்து இரு சக்கர வாகனப் பேரணி தொடங்கப்பட்டது. இராயபுரம், கல்லம்பாளையம், வள்ளுவர் தெரு, ரங்கநாதபுரம், பெரியார் நகர், அனுப்பர்பாளையம், புதூர், ஆத்துப் பாளையம், பெருமாநல்லூர், முருகம்பாளையம், இடுவம்பாளையம் உள்பட 25 இடங்களில் கழகக் கொடியேற்றப்பட்டது. ஆங்காங்கே இனிப்புகளும் வழங்கப்பட்டன. வீரபாண்டியில் பேரணி நிறைவடைந்தது. குழந்தைகள், பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 27092018 இதழ்