திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு !
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு !
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுசூழல் பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்யவும்,உச்சநீதி மன்றம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்துள்ள உத்தரவுகளை அமுல் படுத்த வலியுறுத்தியும்,மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரியும் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த ஆட்சித்தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு அவர்கள் தலைமையில் 10.09.2018 மாலை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கழகத் தோழர்கள் மனுவை அளித்தனர்.
அப்போது கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் விஜயகுமார்,அகிலன், ராமசாமி,தனபால்,முத்து, நீதிராசன் ஆகிய பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.