சட்ட எரிப்பு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 26112019 திருப்பூர்

சட்ட எரிப்பு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – 26.11.2019 – திருப்பூர்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை எரித்த நாள் பொதுக் கூட்டம் திருப்பூர்,15 வேலம்பாளையம் பகுதியில் 26.11.2019 அன்று நடைபெற்றது.

தோழர் சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

முதல் நிகழ்வாக சமீபத்தில் முடிவெய்திய தோழர் ராவணன் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார்.தோழர் ராவணனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுக் கூட்டத்திற்கு இணைய தளப் பொறுப்பாளர் விஜய்குமார் தலைமை வகித்தார்.மேட்டூர் TKR இசை குழுவினர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் யாழினி,யாழிசை,அமுதினி ஆகியோரும் பகுத்தறிவு பாடல்களை பாடினார்கள்.

அதனை தொடர்ந்து நடந்த பொதுக் கூட்ட நிகழ்வில் கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மாவட்ட தலைவர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோரும்

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் கனல்மதி,பிரசாந்த், தேன்மொழி,சந்தோஷ் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய சங்க தலைவர் மதிவண்ணன் உரையாற்றினார்.

மேடையில் தோழர்கள் சாரதி – இனியவன் இணையரின் பெண் குழந்தைக்கு
கழகத் தலைவர் அவர்கள் இயலருவி என்று பெயர் சூட்டினார்

பின் சட்ட எரிப்பு போராளிகளின் வரலாற்றை கூறி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்புப் போராளி ஆனைமலை பகுதியை சார்ந்த ஐயா ஆறுமுகம் அவர்களுக்கு பயனாடையை கழகத் தலைவர் அணிவித்து சிறப்பு செய்தார்.

தோழர் முத்து நன்றியுரையாற்றினார்.

You may also like...