திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளி யிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார்

உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர்

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர்                                     செய்தி :  விஜய்குமார்

பெரியார் முழக்கம் 07022019 இதழ்

You may also like...