திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா !

கருத்தரங்கம்
மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா 09.03.2020 திங்கள்கிழமை மாலை 7.00 மணியளவில் திருப்பூர் குமரன் சாலை,நளன் உணவக அரங்கில் நடைபெற்றது.

பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரின் பகுத்தறிவுப் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

தோழர் பார்வதி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி அவர்கள் தலைமையுரையாற்றினார்.

கவிஞர் கனல்மதி அவர்கள் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் குறித்த விமர்சனஉரையாற்றினார். அடுத்து தோழர் விஜயகுமார் தோழர் ஆசிட் தியாகராஜனின் வாழ்வும் பணியும் குறித்து உரையாற்றினார்.

இந் நிகழ்வில் தோழர் ஆசிட் தியாகராஜன் அவர்களின் படத்தை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களின் படத்தை தோழர் சுசீலா அவர்களும், இனமானப் பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் சிறப்பாக பங்கேற்ற மாணவிகள் வைசாலி கணேசன்(தடகளம்), மணியரசி (கால்பந்து),
கவிஞர்கள் அம்பிகா குமரன், தனசக்தி ஆகியோருக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

தொடர்ந்து அம்பிகா குமரன்,தனசக்தி, சங்கீதா,து.சோ.பிரபாகர் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர் கழகத்தோழர்கள் பிரசாந்த்,சந்தோஷ், கார்த்திகா,பவானி,கார்த்திக்,அகிலாநாதன், நஜ்முன்னிஷா,கனல்மதி
குழந்தைகள் ஆதன்,யாழினி,யாழிசை,அமுதினி,சிபிச்செல்வன்,முத்தமிழ்,வெண்ணிலா, வைத்தீஸ்வரி ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது.

மறைந்த திமுகவின் பொதுச்செயலாளர்
இனமானப் பேராசிரியர் க அன்பழகன் அவர்கள் குறித்து கழகப் பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி அவர்கள் உரையாற்றினார்

“பெரியாரின் போர்படைத் தளபதி மணியம்மையார்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

முடிவில் தோழர் சரண்யா நன்றியுரையாற்றினார்

நிகழ்வு 10 மணி அளவில் நிறைவுற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடு :
திராவிடர் விடுதலை கழகம்,
திருப்பூர் மாவட்டம்.

You may also like...