திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி
திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் ஜனவரி 10, 2019 அன்று திருப்பூர் இரயில் நிலையம் பெரியார்-அண்ணா சிலை அருகே மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கையால் திருப்பூரில் சிறு, குறு தொழில்களுக்கு மூடு விழா நடத்திய மோடியே திரும்பிப் போ’ என்று முழக்கமிட்டனர். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல்பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கூட்டமைப்பு சார்பில் 330 தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 07022019 இதழ்