குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் NRC மற்றும் CAA  திருத்த சட்டங்களை திரும்ப பெற மத்திய மாநில அரசை வலியுறுத்தி 23.12.19 திங்கள் கிழமை தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம்  மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. பிரசாந்த்  (நகரச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்) இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.  தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கார்த்திகா, பவானி முன்னிலை வகித்தனர்.  தேன்மொழி (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), சம்சீர் அக்மத் (மாவட்டச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்), முகமது சஹீத் (மாநில ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக மாணவர் பேரவை),  அஸ்லாம் (தமிழக மக்கள்  ஜனநாயக கட்சி)  ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலுக்கு எதிராக  கண்டன உரையை பதிவு செய்தனர். திவிக மாநில பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருவள்ளுவர் பேரவை அருண், திவிக தோழர்கள் ஐயப்பன், மணிகண்டன், சங்கீதா, திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால், மாநகர செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து, வடக்கு மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, தெற்கு மாவட்ட அமைப்பாளர் ராமசாமி மற்றும் மாணவர் கழகத் தோழர்கள் ஹரிஷ், தென்றல், கார்த்தி, கதிர்முகிலன், நஜ்முன்னிஷா மற்றும் பெரியார் பிஞ்சுகள் முத்தமிழ், ஈழமாறன், அமுதினி, யாழினி, யாழிசை ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக கனல்மதி (நகர அமைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்) நன்றியுரை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 02012020 இதழ்

You may also like...