திருப்பூரில் சட்ட எரிப்பு நாள்- வீரவணக்கப் பொதுக் கூட்டம்
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை எரித்த நாள் பொதுக் கூட்டம் திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் 26.11.2019 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக முடிவெய்திய தோழர் இராவணன் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இராவணனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பொதுக் கூட்டத்திற்கு இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர். கலைக் குழுவினர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடினர். அவர்களுடன் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரும் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்கள்.
அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோரும், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் கனல்மதி, பிரசாந்த், தேன்மொழி, சந்தோஷ் ஆகியோரும் சட்ட எரிப்பு நாளைப் பற்றி பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய சங்கத் தலைவர் மதிவண்ணன் உரையாற்றினார். மேடையில் தோழர்கள் சாரதி – இனியவன் இணையரின் பெண் குழந்தைக்கு கழகத் தலைவர் இயலருவி என்று பெயர் சூட்டினார்.
பின் சட்ட எரிப்புப் போராளிகளின் வரலாற்றைக் கூறி கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த ஆனைமலை பகுதியைச் சார்ந்த அய்யா ஆறுமுகம் அவர்களுக்கு பயனாடையை கழகத் தலைவர் அணிவித்து சிறப்பு செய்தார். முத்து நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 05122019 இதழ்