வி.பி.சிங் பிறந்தநாள்

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிறகிந்தநாளையொட்டி, ஜூன் 25, 2026 காலை 10 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், சென்னை பிரசிடென்ஸி கல்லூரி வளாகத்தில் உள்ள வி.பி. சிங் சிலைக்கு மாலை அணிவித்து, தோழர்கள் கொள்கை முழக்கமிட்டனர். நிகழ்வில், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன், மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதி அமைப்பாளர் எம்.ஜி.ஆர் நகர் துரைராசு, முழக்கம் உமாபதி, ராஜன், விஜயன், தோழர்கள் ஏசுகுமார், மயிலை மனோகர், சு.பிரகாஷ், பாரி சிவா, சிகாமணி, அசோக், வீரா, லட்சுமணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 02072026

You may also like...