தயாராகிறது சேலம் மாவட்டம்!

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை-17, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மேட்டூர் நகரத் தலைவர் மார்டின் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஆகஸ்ட்-6 முதல் 12 வரை நடைபெற இருக்கும் “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்” சிறப்பாக நடைபெற சேலம் மாவட்டக் கழகம் முழு ஒத்துழைப்பை வழங்குவது என்றும், சேலம்-நாகர்கோவில் பயணக் குழுவின் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சேலம் அணியின் இசைக்குழு, கடைவீதி வசூல், புத்தக விற்பனை, ஊடக பிரிவு, பேச்சாளர்கள் பட்டியல் குறித்தும் பயணத்திற்கான நன்கொடை திரட்டுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்கள் நாகராஜ், கவியரசு, கொளத்தூர் பகுதி தோழர்கள் கணேசன், செந்தமிழ் கலை அமுதன், மேட்டூர் பகுதி தோழர்கள் அம்ஜத்கான், காளியப்பன், கிட்டு, ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இசைக்குழு: காளியப்பன், கோவிந்தராஜ், சீனி, அண்ணாதுரை, சித்திரை சேனன்.
ஒலி மற்றும் ஒளி: சந்திரசேகர், கவியரசு, செந்தமிழ் கலையமுதன்.
புத்தக விற்பனை: தங்கதுரை.
கடை வீதி வசூல்: கணேசன், தேவராஜ், கோகுல், முத்துராஜ், ராமச்சந்திரன், நங்கவள்ளி கண்ணன், செந்தில் வனவாசி, பிரபாகரன், அம்ஜத், கிருஷ்ணன்.
ஊடகப் பிரிவு: பிரபாகரன், கிருஷ்ணன்
பேச்சாளர்கள்: பால்.பிரபாகரன், நங்கவள்ளி அன்பு, ஆனந்தி, உமாசங்கர், கணபதி, ஆனந்த், கே.ஆர்.தோப்பூர் கண்ணன்.
பெரியார் முழக்கம் இதழ் 23072026

You may also like...