நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு
நிமிர்வோம் வாசகர் வட்ட 32-வது சந்திப்பு, ஜூன் 14,2026 (ஞாயிறு) மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் ர.பிரகாசு நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
“தேர்தல் முடிவுகளை எப்படி எடுத்துக்கொள்வது?” எனும் தலைப்பில், தோல்விக்கான காரணங்கள் குறித்தும், மக்களின் முதன்மையான ஊடகமாக மாறியுள்ள சமூக வலைத்தளங்களில் பகுத்தறிவுப் பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுக்கவேண்டிய அவசியம் குறித்தும், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் உரையாற்றினார்.
“பேருந்து தீண்டாமையை ஒழித்த இயக்கம்!” எனும் தலைப்பில், தோழர்கள் கெம்பனூரில் கள ஆய்வு செய்த அனுபவங்களையும், கோவை கெம்பனூர் வரை வரவிடாமல் தடுக்கப்பட்டிருந்த 21-ஆம் எண் பேருந்தை மீண்டும் வரவைக்க நடந்த போராட்டங்களின் வெற்றி குறித்தும், கோவையில் தலைமைக் குழு உறுப்பினர் நிர்மல்குமார் இணையவழியில் உரையாற்றினார்.
நிறைவாக தலைமையுரையாற்றிய தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், பாஜகவின் சமஸ்கிருத திணிப்பைப் பற்றியும், கடந்த காலங்களில் பெரியார் இயக்கம் முன்னெடுத்த வீரஞ்செறிந்த போராட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் இதழ் 25062026
