வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

1.காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும்,
2.ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சட்டம் இயற்றிக் கோரியும் வேலூர் மாவட்டக் கழகம் சார்பாக 20.6.2026 மாலை குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு மாவட்டத் தலைவர் காத்தவராயன், சிபிஎம் குடியாத்தம் நகரச் செயலாளர் குபேந்திரன், மாவட்டச் செயலாளர் சிவா நந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முரளி தன்மானன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 25062026

You may also like...