வான்மதி-கந்தசாமி இணையர்களின் சுயமரியாதை மணவிழா!

வான்மதி – கந்தசாமி – இணையரின் சுயமரியாதைத் திருமணம், ஜூலை 5,2026 (ஞாயிறு), பூவிருந்தவல்லி இதயம் மகாலில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலை வகித்தார்.தலைமைக் குழு உறுப்பினர் கு.அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இரண்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணப்பெண் அக்காவும் கழகத் தோழர்களுமான இணையர்கள் புகழேந்தி- ஸ்ரீலேகா இந்தத் திருமணத்தை எந்தவித சடங்குகளும் இன்றி சுயமரியாதைத் திருமணமாக நடத்த வேண்டும் என்ற முனைப்புடன் நடத்திக் காட்டியுள்ளனர். ஸ்ரீலேகா நன்றியுரையாற்றினார்.

மணமக்கள் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ. 3,000, பரப்புரைப் பயணத்துக்கு ரூ. 4,000, புத்தகங்களுக்கு ரூ. 1,680 வழங்கினர். இந்நிகழ்வில், மாவட்ட அமைப்பாளர் ம.கி.எட்வின் பிரபாகரன், தோழர்கள் பிரனேஷ், ராகுல், ஹானஸ்ட்ராஜ், நவெந்தன், கார்த்தி ராஜேந்திரன், பாரி சிவா, போரூர் அபிநந்தன், நந்தகுமார், அசோக், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 09072026

You may also like...