சென்னை, திருப்பூரில் காமராசர் சிலைக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளை போற்றும் விதமாக 15-07-2026 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் அனுப்பர்பாளையம், நகராட்சி அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் அவர்களின் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் கர்மவீரர் காமராசர் அவர்கள் குறித்து கொள்கை முழக்கமிட தொடர்ந்து தோழர்கள் முழக்கமிட்டனர். நிகழ்வில் மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் மற்றும் கழகத் தோழர்கள் சிரிஜா, இனியன், குணா, பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை: காமராஜர் பிறந்தநாளையொட்டி, மாவட்டக் கழகத்தின் சார்பில், ஜூலை-15 காலை 9 மணிக்கு, சென்னை சிம்சன் ஜிம்கானா கிளப் முன்புள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு தோழர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதி அமைப்பாளர்கள் த.நா. சூர்யா, எம்ஜிஆர் நகர் துரைராசு, சைதை சிவா, தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு மற்றும் தோழர்கள் சு. பிரகாஷ், சுகுமார், மனோகர், இரண்யா, மோகன், வீரா, எழிலரசன், தாமரை உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் இதழ் 23072026

You may also like...