நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:
1950 அக்டோபரில் பெரியார் அறிவித்த வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தில் 8.11.1950 அன்று தோழர் ரகுநாத் அவர்களின் பாட்டியும் சேலம் சிவதாபுரம் திராவிடர் கழகத்தின் பொருளாளருமான அகிலாண்டம் அவர்களும், அவரது மாமனார் 80 வயது உள்ள மாரி அவர்களும், அவரது குழந்தைகள் ஆன 13வயது சரஸ்வதி, 10 வயது சொர்ணாம்பாள், 8வயது ஜெகநாதன், 3வயது திராவிட கனி, 1,1/2 ஒன்றரை வயது பாண்டியராசா ஆகியவர்களுடன் கைதாகிறார். அதில் குழந்தைகளில் 1,1/2 வயது பாண்டிராசாவைத் தவிர மற்ற நால்வரையும் அன்னையை விட்டுப் பிரித்து Children’s Society-யில் தனியாக காவலில் வைக்கப்படுகிறார்கள். ஒரு வார தண்டனைக்குப் பின் விடுதலையான அகிலாண்டம் அம்மாள், அவரது கணவரும் சேலம் சிவதாபுரம் காட்டூர் திராவிடர் கழக தலைவருமான எஸ் எம் வெள்ளியங்கிரி அவர்களும் 21.11.1950 அன்று மீண்டும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி உள்ளார்கள். ஒரு மாதம் தண்டனை வழங்கப்பட்டு 22.12.1950 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
16.5.1983 அன்று தங்கள் வீட்டில் `சமபந்தி போஜனம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்து, ஜாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளச்செய்து ஆட்டுக்கறி துண்டுகளும், மாட்டுக்கறி துண்டுகளும், பன்றிக்கறி துண்டுகளும் கொண்ட விருந்து வழங்கப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 25062026
